Saturday, August 04, 2018


சுவாமி அக்நிவேஷுக்கும் ,

குன்றக்குடி அடிகளாருக்கும் ,

காவிதான் நிறம் !!!கடவுள் வேண்டாம் , வேதங்கள் வேண்டாம் , சாதியையும் வேண்டாம் என்றான் சித்தார்த்தன் . புத்தனான அவன் "காவி"நிறம். 

இந்த உலகம் பொருட்களால் ஆனது . ஸ்கந்தங்களால் (molecule ) ஆனதுதான் உலகம் .என்றான் சமண மதத்தை உருவாக்கிய வர்த்தமானர் .அவரது நிறமும் "காவி" யே !

"எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொளகிறதோ , எந்தஒரு பொருள் தனக்கு வேண்டாததை தன்னிலிருந்து வெளியேற்றுகிறதோ (catabolism and metabOlism  ) அது உயி ருள்ள பொருள் என்கிறது அறிவியல். 

"உயிர் என்பது உணவுதான் .அது அளவிற்குட்டபட்டது .உணவை வெறுக்காதே ! உணவுதான் உயிர் " என்கிறார்கள் சித்தர்கள்> அவர்களின் நிறம் "காவி"தான்  .

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி சப் த்தார் ஹஷ் மி மறை ந்த முதல் பிறந்த தினம் .இந்தியா பூராவும் வும் இருந்து நாடக சமூக செயல்பாட்டாளர்கள் ,கலைஞர்கள் டெல்லியில் கூடினர்>உள்துறை அமைச்சர் பூட்டா சிங் விட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் .தமிழகத்திலிருந்து அடியேன் சென்றிருந்தேன். மண்டி ஹவுசுலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கயிறு காளா ல் வளைத்து பூட்டாசிங்   விட்டு வாசலில் போலீசார் நிறுத்தினர்>அந்திடத்திலேயே அமர்ந்து "ஹல்லா போல்நாடகம் போடப்பட்டது  மாலா ஸ்ரீ அவர்களால் 1 பார்வையாளர்களாக எம்.எஸ் சத்யு,விவான் சுந்தரம், ஹபீபிதன் விர் , சாப்நா அஜ்மி , ஜாவேத் அக்தார் அவர்களோடு அடியேனும் அமர்ந்திருந்தேன். எனக்கு வலப்பக்கம் சுவாமி அக்நிவேஷ அமர்ந்திருந்தார் "காவி " உடையில்.     

அறிவுலக மேதை மார்க்ஸ் . அவருடைய "தாஸ் கேபிடல் "  மிகஉன்னதமான நூல்.  அதில் commodity ,money  இரண்டையும் பற்றி அவர் நிறைய எழுதியுள்ளார் அந்த நூலின் கடினமான பகுதி அது. எழுத்தாளர் சங்கம் மூலதனம்பற்றி மக்கள்மத்தியிலேறிமுகவிழா ஒன்றை  மதுரை ஸ்காட் ரோட்டில் நடத்தியது அவர் பேசினார் .

"பண் டத்தை மாற்றினோம். .பண் ட த்திற்கு பண்டம் .என்கிறோம். செயல் முறையில் எளிதாக்க பண்டம் பணம் பண்டம் என்று ஆக்கினோம். பின்னர் பணம் பண்டம் பணம் என்று வர்த்தகம் செய்தொம். இன்று பணம்(1)-பணம் - பணம் (2)  என்று மாறிவிட்டொம். "

என்று அவர் கூறியபோது ஆயிரக்கணக்கில் குடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர்

அவர்தான் காவியாடைதரித்த மறைந்த குன்றக்குடி  அடிகளார்.

நமது தேசியக்கொடியை நம் முன்னோர்கள் காவி உள்ளடக்கி மூவர்ணமாக்கினார் காவி அறிவியலையும், ஆன்மிகத்தையும் இணைப்பதால்.

 இந்தியா spiritualy intelectual and intelectualy spiritual என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். 

8ம் நூற்ரான்டில் ஆதி சங்கரர் வரும் வரை இது தொடர்ந்து.பிராமணமதத்தை அவர் ஸ்தாபன மயமாக்கினார் . சடங்குகளும் சம்பிறதாயங்களுமாக மாறி அறிவியல் ஒதுக்கப்பட்டது. 

இன்று அறிவியலா ஆன்மிகமா என்ற கேள்வி தேவை இல்லாமல் எழுப்பப்படுகிறது .

அறிவியல் இல்லாத ஆன்மிகம் தேவையில்லை .  அறிவியலும் ஆன்மிகமு ம் இரண்டற கலந்ததுதான் இந்த மண்ணின் தத்துவ ஞானம்..


அதன் சின்னம் தான் காவி !!! 


0 comments: