Glory
T O
A I I E A !!!
மதுரையிலிருந்து அந்த லாரி புறப்படுகிறது. 1 1/2 டன் அரிசி ,காய்கறி,பலசரக்கு சாமான்கள்.,பாய்விரிப்புகள்,போர்வைகள் பிஸ்கட் பாக்கட்டுகள் என்று மூன்று லடசம் ரூ பெறுமானமுள்ள நிவாரணப்பொருள்களுடன் புறப்பட விருக்கிறது தஞ்சை பகுதி இன்சுரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி கொடி அசை த்ததும் புறப்படலாம். லாரியில் பொது இன்சூரன்ஸ்ஊழியர் சங்க தலைவர் பாலா, மாதர் சங்க தலைவர் பொன்னுத்தாய் ,எழுத்தாளர் சங்க தலைவர் பருவத வரத்தினி ஆகியோர் உள்ளனர். அப்பபோதுஅழுக்கு வெட்டியும் காக்கைச்சட்டையும் அணிந்த இருவரை ஓடிவருகின்றனர்> அவர்களை கையில் சீல் உடைக்கப்படாத 10லிட்டர் சமையல்எண்ணை கென் இரண்டு இருக்கிறது.ஐயா எங்கள் சார்பில் இதனை கேரள சகோதரர்களுக்கு கொடுக்க முடியுமா? என்று கூ றி நீட்டுகிறார்கள. கொண்டுவந்தவர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் அதனை இன்சூரன்சுழியர் சங்க செயல்பாட்டாளர் லாரியில் ஏற்றுகிறார்.அவர் கண்கள் கலங்கி இருக்கிறது.
மதுரைப்பகுதி இன்சூரன்சுழியர்கள் அனுப்பும் லாரி கேரள த்திற்கு நிவாரணப்பொருள்களோடு கிளம்புகிறது. மழைக்கு அந்த பெண்கள் தாற்பலினால் முடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்>அவர்கள் பீர்மேடு செல்ல வேண்டும் சாலை சேதமடைந்துள்ளது. அரைமணி நேரத்தில்செல்லும் இடத்திற்கு ஐந்து மணிநேரம் சுற்றி போகவேண்டியதாகிறது.
பீர்மேட்டில் சாந்தியின் வீ டு முழுவதும் சகதி. கதவை திறக்க முடியவில்லை> அவர் வந்த நிவாரணப்பொருள்களை பள்ளிகூடம்மற்றும் தேவையான இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாரா.அவர்தான் பஞ்சாயத்து தலைவர் பள்ளியிலும்பாட சாலைகளிலும் தங்கி இருப்பவர்கள் இவர்களை தங்கள் உறவினர்களாக பாவிக்கிறார்கள் .வயதான பாட்டி ஒருவர் இந்த மழையிலும் வெள்ளத்திலும் எங்களை பார்க்க வந்ததே சந்தோசம் மகளே என்று வர்த்தினியின் கையை பிடித்துக்கொள்கிறாள்.வர்த்தினியின் தொண்டை அடைக்கிறது. பேச முடியாமல்கண்கலங்கி நிற்கிறார்.
துப்புரவு தொழிலாளி, ஆசிரியர்,அரசு ஊழியர், சுகாதாரத்துறை ,தீயணைப்பு,காவல் துறை என்று அத்துணை பெருமை காண துஞ்சாது மெய்வருத்தம் பாராதுமக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்>அவர்களிடையே எந்த பேதமும் இல்லை>
மதுரை மாவட்டம் திருபத்துரில் மதுரை சங்கத்தின் 62வதுமாநாடு நடக்கிறது மேடையில் அகிலஇந்தியாய் சங்கத்தலைவர் தோழர் கிரிஜா பேசுகிறார் .
அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஊழியர்கள் தங்களொருநாள் ஊதியத்தை நிவாரணப்பணிக்கு தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.அதனை பிடித்தம் செயது அனுப்பும் பணியை நிர் வாகம் ஏற்றுக்கொள்கிறது என்று அறிவிக்கிறார்.
கரவொலியோடு சார்பாளர்களும் மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட 10கோடி வசூலாகும் என்பது என்போன்றவர்களின் நம்பிக்கை
நான் எல் ஐ சி யிலிருந்து ஒய்வு பெற்று 22 வருட ம் ஆகிறது. தோழர்கள் நாராயணனும்,தண்டபாணியும்,பாஸ்கரனும்,"எல்லாம் சங்கத்திற்கே" "என்று சொல்வார்கள்> நாங்கள் அவர்கள் பின்னால் ஓடினோம் .இன்று சாமிநாதனும்,ஜிஎம்ஸ் சம்,புண்ணியமூர்த்தியும் "சங்கம் எல்லாருக்கும் " என்கிறார்கள் .
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறேன் !
glory to aiiea !!!
1 comments:
போற்றுதலுக்கு உரிய பணி ஐயா
Post a Comment