MINDSET
இப்படியானது
எதனால் ?
"பாரதிய ஜனதா கடசி தமிழகத்தில் தல எடுக்க முடியாது " என்று எனது நண்பர் சொன்னார் .பத்தாம் பசலித்தனமான கொள்கைகள், கொண்ட எந்த ஒரு இயக்கமும் தமிழகத்தில் நிலைக்காது . இந்த மண்ணின் ஆணிவேர் அதன் சமூக சீர்திருத்த கருத்துக்களில் அதனை மக்கள் மனதில் பதிவேற்றிய அந்த மாமனிதர்களின் செயல்பட்டால் விளைந்தது. அதில் முக்கியமானவராக திகழ்கிறார் பெரியார் அவர்கள்> என் நண்பர் ஒரு பெரியாரிஸ்ட். "இந்த மண் பெரியார் மண் இங்கு வேறு பாச்சா பலிக்காது " என்று முடித்தார் .
தமிழ் மக்களின் பாடுகளுக்கு விடிவு காலம் அவர்களின் மூடநம்பிக்கையை அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கிற மத நம்பிக்கையை களைவதில் இருக்கிறது என்று மனதார நமபியவர்களில் ஒருவர் பெரியார் . மதத்தின் மூல வேறாக பிராமணியம் இருக்கிறது. அதிகாரம் முழவதும் அதன் கையில் இருக்கிறது. அதிகாரத்திலிருந்து பிராமணர்களை அப்புறப்படுத்துவத்தின் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று கணித்தர. பிராமணர்களைத்தவிர மற்ற சாதியினரை ஒன்றுபடு த்தியதில் அவருடைய சாதனை மகத்தாகினது .
இந்த ஒற்றுமையை உருவாக்க அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல. இறுதியில் வெற்றியும் பெற்றார். அதிகாரத்திலிருந்து பிராமணர்களை விரட்டினார் . தமிழகம் மூச்சு வீட்டுக் கொண்டது.
இந்த வெற்றியை பலப்படுத்துவதில் பெரியாரிஸ்டுகள் பலவீனமாக இரு ந்துவிட்டனர்
"பாப்பானை விரட்டியாகி விட்டது .அந்த இடத்தில் வெள்ளாளன், முதலி தேவ ன் வர போட்டி போட்டான் . தனக்கு மேலே இருந்த வனை நீக்கினான்> அதேசமயம் தனக்கு கீழே இருக்கும் தலித்துகளை மறந்தான். . எல்லாருமாக சேர்ந்து பெற்ற வெற்றியை தன்னோடு போராடிய 30 சதம் மக்களை மறந்த பாவம் இன்று ஆட்டிப்படைக்கிறது.
இதனை "காலந்தோரும் பார்ப்பனியம் " என்று கூறி சமாளிப்பவர்கள் உண்டு .
கடந்த ஐமபத்து ஆண்டு காலமாக பெரியாரிஸ்டுகள் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டுவந்தனர்.
உயர்நிதிமன்ற நீதிபதிகளில் எத்தனைபேர் பார்ப்பனர் உச்ச நிதிமன்றத்தில் எத்தனை பேர். மாநிலங்களிலும், மத்தியிலும் உயர்பதவியில் இருப்பவர்களால் எத்தனை பேர் என்று வக்கணை பேசும் இவர்கள் எத்தனை தலித்துகளை உயர்பதவியில் இருத்தி அழகு பார்த்தார்கள் .பாவம் ! ஒரு கர்ணன் பட்ட பாட்டு போதுமே!
மாநில அரசு தன ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொடுக்கவில்லையே ஏன் ?
1972ம் ஆண்டுவரை எல்.ஐ.சி யில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது> அங்கு உள்ள இடது சாரி தொழிற்சங்கம் இடைவிடாது போராடி பதவிஉயர்விலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது>இன்று எல்.ஐ.சியில் எடுபிடியாக சேரும் தலித் ஒய்வு பெரும் பொது அதிகாரியாகி செல்வான். அங்குள்ள சங்கம் இதனை அமுல்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக செயல்படுகிறது . மெரிட் ,திறமை என்று எந்த பாதிப்பும் இல்லை> இதேதான் வங்கியிலும். தபால் தந்தி, ரயிலேதுறை என்று சிறப்பாக செயல்படுகிறது .
மாநில அரசு ஊழியர்களிடையே மட்டும்பதவு உயர்வில் இட ஒதுக்கீடு ஏன் இல்லை?
ஒரு பறையன் R I இருக்க கூடாதா? ஒரு தாசித்தராக பள்ளன் இருக்கக்கூடாதா ? சக்கிலியன் இன்ஸ்பெக்ட்டாக இருக்கக்கூடாதா ? அப்படி இருந்தால் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தமுடியுமா ?
என்ன செய்ய !பறையன் விட்டு வாசலில் வேளாளன் நிற்கலாமா? பள்ளன் விட்டு வாசலில் தேவர் நிற்கலாமா? நம் mindset இப்படி ஆனது எதனால்.?
பெரியாரிஸத்தின் போதாமையா ? இல்லை போலி பெரியாரிஸமா ?
பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் இயக்கங்கள் தீவிரமாக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.!!!
0 comments:
Post a Comment