skip to main |
skip to sidebar
தண்ணீர் விட்டு
வளர்க்கவில்லை ....!!!
சுதந்திர போராட்டத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களைப்போல் சித்திரவதையை தாங்கி \யவர்கள் எவரும் இல்லை என்பார்கள். ஒரு பெரிய பனிக்கட்டி பாளத்தின் மீது அ வரை படுக்க வைத்து கட்டி இருந்தார்கள் . காங்கிரஸ் சோஷலிசகடசியின் செயலாளராக இருந்த அவரிடமிருந்து சில தகவல்களை பெற பிரிட்டிஷார் முயன்றார்கள் பனி பாளம் உருகியது உறுதியான நெஞ்ச்ம கொண்ட ஜெ.பி யை பணியவைக்க முடியவில்லை .
அவருடைய மனைவியின் பெயர் பிரபாவதி தேவி.சுதந்திர போரில் ஈடுபட்டுள்ள நாம் குடும்பம் பிள்ளை குட்டி என்று வாழ வேண்டாம் . நம்மக்குள் தாமபத்திய உறவு வேண்டாம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தனர் அப்படியே வாழ்ந்தனர்
சுதந்திர போரில் ஈடுபட்ட பல தலைவர்கள் சுதந்திரம் கிடைத்தால் தான் திருமண வாழ்க்கை ? அதுவரை குடும்பம் என்ற பந்தத்தில் ஈடுபாக்கூடாது என்று முடிவு செய்தனர்.அப்படி முடிவு செய்த தலைவர்கள் ஏராளம்> அவர்களில் ஒருவர்தான் அந்தபாட்டாளிமக்கள் தலைவன் பி>ராமமூர்த்தி. பெரியார் தலைமையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார் சுதந்திரம் அடைந்த பிறகு.
தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியைநடத்தினர் அதற்கு தலைமை தாங்கியவர் பி.சுந்தரய்யா.தன இஸ்லாமிய காதலி லைலாவை மணந்தார்> ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம் குடும்ப உறவை புறக்கணிக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள் அப்படியே வாழ்ந்தார்கள்.
ஜவஹர்லால் பல்கலையில்படிக்கும்போதே அவர்கள் காதலர்கள் புரட்ச்சிகர வாழ்க்கையை இருவரும் தேர்ந்தெடுத்தார்கள் . தங்களுக்கு வாரிசு என்றுவந்தால் கவனம் சிதறிவிடுமென்றி நினைத்தார்கள் .அப்படியே வாழ்ந்தும் வருகிறார்கள் அந்த தமபதியினர் தான் பிரகாஷ்-பிருந்தா காரத் .
என்ன செய்ய.?
தாலிகட்டி மணந்து மூன்று மாதம் கூடி வாழ்ந்து விட்டு நடுத்தெருவில் மனைவியை விட்டவர்கள் நாட்டாமை செய்யும் காலமாகி விட்டதே !!!
0 comments:
Post a Comment