"அஞ்சலி"
சொத்துரிமையும்
சோம்நாத் சட்டர்ஜியும் ...!!!
அவசரநிலைக்காலம் அது .சகலஉரிமைகளும் பறிக்கப்பட்ட நிலை. பேசசுரிமை எழுத்துரிமை, கருத்துரிமை என்று எல்லா உரிமைகளும் பறி க்கப்பட்டிருந்தன. இந்த கூத்தில் எல் ஐ சி ஊழியர்களின் போனஸும் பறிக்கப்பட்டது .
அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை ஏற்கமறுத்தது . போராட்டமுறை இதற்கு சரியாக இருக்குமா என்று ஆலோசித்தது .தோழர் கள் சுநில் மைத்ராவும், சரோஜ் சவுத்திரியும் பலரை கண்டு ஆலோனை நடத்தினர். அவர்களில் ஒரேஒருவர் மட்டும் இதற்கு சட்டரீதியாக நிவாரணம் பெற முடியும் என்று தெரிவித்தார்>அவர்தான் சட்டமேதை சோம்நாத் சட்டர்ஜி ஆவார் .
அவசர நிலைக்களத்தில் எழுத்துரிமை பேசசுரிமை,கருத்துரிமை ,ஏன் உயிர் வாழும் உரிமை யம் பறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதலாளிகளுக்கு தேவையான சொத்துரிமை மட்டும் பறிக்கப்படவில்லை . போனஸ் என்பது கொடுப்படாத ஊதியம் .(unpaid wage ) ஊதியம் என்பது தொழிலாளியின் சொத்து. ஆகவே அதனபறி க்கமுடியாது என்று விளக்கமளித்தார் சோம்நாத் அவர்கள். வழக்கு போடப்பட்டது> இரண்டு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. போனஸ் என்பதும் சொத்துரிமைக்கு உட்பட்டது தான்.அதனால் அதனிப்பறித்தது செல்லாது உடனே கொடுக்கப்படவேண்டும் என்று உச்சநீ \திமன்றம் தீர்ப்பளித்தது .
ஆனாலும் நிர்வாகம் அதன் கொடுக்க மறுத்தது .
ஊழியர்சங்க தலைமை யோசித்தது. சோம்நாத் அவர்களின் யோசனையின் பேரில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி காலவரையறை யற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது. 14 நாட் கள் வேலை நிறுத்தம் நடந்தது .நிர்வாகம் 14 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்தது.
சட்ட பூர்வமாக ஊழியர்கள்வேலை நிறுத்தம் செய்துள்ளனர். நிர்வாகம் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை> இதனை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமல்ல .ஆகவே நிர்வாகம் பிடித்தம் செய்தது தவறு என்று ஊதியத்தினை 12% வட்டியோடு கொடுக்கவேண்டும் என்று சோம்நாத் வாதிட்டார் உச்ச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு வட்டியோடு உதியத்தை அளிக்கும்படியுத்திரவிட்டது.(அடியேனுக்கு 1400 ரூ ஊதியவெட்டு வட்டி யோடு 2800 ரூ கொடுத்தார்கள்)
சோம்நாத் சட்டர்ஜி ஒரு மார்க்சிஸ்ட். பத்துமுறை நாடாளுமன்றம் சென்றவர் மக்களவை சபாநாயகராக இருந்தவர் ,சட்ட நிபுணர் .
அவருக்கு அஞ்சலிகள் !!!
0 comments:
Post a Comment