"திரைப்பட விமரிசனமல்ல "
"பேரன்பு " திரைப்படமும் ,
ஆசீர்வதிக்கப்பட்டவர்களும்...!!!
என் சகோதரிக்கு நான்கு . ஆண் குழந்தைகள். நான்கு பெண் கு ழந் தைகள் . கடைக்குட்டி கொள்ளை அழகான பெண்குழநதை.. அந்த குடுமபத்தின் அன்பும்,பாசமும்,நேசமும், கருணையும் ,கவனிப்பும் அவ தான்.அவளும் குறும்புக்காரி.
அந்த குழந்தை "டாடா" காட்டாமல் யாரும் வெளியே செல்லமாட்டாட்கள்.அப்படி ஒரு sentiment . முகத்தை உர் என்று வைத்து க்கொண் டு டாடா காட்டாமல் இருப்பாள். பள்ளிக்கு,கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு நேரமாகிவிடும். அவளுடைய அண்ணண்கள் அக்காமார் படும்பாடு சொல்லி முடியாதுபின்னர் வேண்டாவெறுப்பாக டாடா காட்டுவாள்.
அவள் இன்று இருந்தால் 60 வயது ஆகி இருக்கும் . தன 18 வது வயதில்இறந்து விட்டாள் .
என் சகோதரியின் குடும்பம் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் வசித்து வந்த தெருமனிதர்கள் "சீ த்தபர்டி " என்ற பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
காரணம் "லதா "என்ற பெயரிட்ட அந்த குழந்தை "மூளை
முடக்கு வாதத்தால் "பாதிக்கப்பட்ட ஒரு SPASTIC CHILD .
கன்னியாகுமரி அம்மன் போன்ற கள்ளம் கபடமாற்ற பேரழகி அவள்.பதிமூன்று வயதில் அவளுக்கு மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஒரு அறுவை சிகிக்சை செய்து அவள் கர்ப்பப்பை அகற்ப்பட்டது> பெண் என்ற வகையில் அவளுக்கு மாதாந்திர தொந்திரவு இல்லை என்றானது.
இன்று அந்த குடுமபத்தின்குலதெய்வமாகஅவளை கொண்டாடுகிறார்கள் . எந்த நல்லது கேட்டது நடந்தாலும் முதல் படையல் அவளுக்கு தான் .
---------------------------------------------------------------------------------------------------------
"பேரன்பு " என்று ஒருபடம் தி ரைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. எங்கள் "லதா"வின் உறவினர்கள் கலிபோர்னியாவிலிருந்து -கன்பராவரை,லண்டனிலிருந்து கென்யாவரை இருக்கிறார்கள்.அவர்கள் இந்த படத்தை பார்த்தார்களாதெ ரியாதுசென்னையில் இருக்கும் , அவள் அக்காமார் அண்ணன்மார் பார்த்தார்களாதெ ரியாது .அந்தப்படத்தில்-லதாவாக - இல்லை பாப்பாவாக நடிக்கும் சாதனா என்ற சிறுமிக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது கிடைக்கும் >என்கிறார்கள் .தந்தையாக நடிக்கும் மம்மட்டி க்கு ஆஸ்கார் கிடைக்கும் என்கிறார்கள்.
அந்த படத்தை நான்பார்ப்பேனா !தெ ரியாது.?
சபிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மையை வைத் து ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு பொழுதுபோக காட்டப்பட்ட பொம்மலாட்டம் தான்
" பேரன்பு"
வேறென்ன சொல்ல !!!
0 comments:
Post a Comment