Thursday, February 14, 2019




கடவுளும்,

காதலும் ...!!!



எனக்கு கடவுள் மீதும் நமபிகை கிடையாது. காதல் மீதும் நம்பிக்கை கிடையாது.

துக்கம்,சோகம்,சிரிப்பு,கோபம் , வலி,போன்று அதுவும் ஒரு உணர்வுதான் என்று  நினைப்பவன் நான் .அதற்கு தேவை இல்லாத புனிதத்தை நாமாக உருவாக்கி அதனை அதீதமாக  நாம் பாவிக்கிறோமோ என்ற நினைப்பும் எனக்கு உண்டு.

அமர காதல் என்று சிலாகிப்பவர்களா உண்டு .என்னைப்பொறுத்தவரை காதலுக்கு - அமரகாதலுக்கு -  ஒரே எடுத்துக்க்காட்டு "ஜென்னி-கார்ல் மார்க்ஸ் " அவர்களைத்தான் சொல்வேன்.

ஜென்னி மார்கிஸ் வசித்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்தவர் .கொள்ளப்பணக்காரி. அழகி. 

மார்க்ஸ் அவ்வளவு வசதியுள்ள குடும்பம் அல்ல .மார்க்ஸ்சின் முத்த சகோதரியோடு ஜென்னி படித்தார் .ஜென்னியின் தம்பியும் மார்க்ஸ்ஸும் கிளாஸ்மேட். இவர் அவரவிட்டிற்கும் அவர் இவர் வீட்டிற்கும் சகஜமாக போய்வருவார்கள். ஜென்னிக்கும்-மார்க்ஸுக்கும் வயது வித்தியாசம் அதிகம். 

மார்க்ஸ் அவ்வளவு அழகு  என்று சொல்ல முடியாது. முண்டு முண்டாக கன்னக்கதுப்பும்,முகம் நிறைய மயிருமாக இருப்பாராம் .அடிக்கடி முகவாசிகரம் செய்து கொள்ள மாட்டாராம்.

ஜென்னி வசதி உள்ள குடும்பத்துக்ககாரி .சுத்தமும், சுகாதாரமும் கொண்ட பேரழகி.

ஜென்னியை அவளுடைய தோழிகள் "இவனை எப்படிடி காதலிக்கிறாய் "என்று கேட்பார்களாம் .

"பைத்தியக்காரிகளே ! அவனை என் கைகளை தொடும் பொது என் ஆத்மாவை தொடுவதாக நினைக்கிறேன்.அவனும் அப்படியே நினைக்கிறான். "என்பாராம் ஜென்னி .

"அழகி நீ .இவனை வீட்டா அழகானவன் உனக்குகாதலனாக வருவான்  அல்லவா"என்று தோழிகள் ஜென்னியை வம்புக்கிழுப்பார்கள்.

" முட்டாள்களே !  இன்னும் ஆயிரம் ஆண்டு ஆனாலும் இப்படி ஒரு அறிவாளியினை  எவளாவது  காதலனாக அடைய முடியுமா ? "என்று  பதிலாளிப்பாராம் ஜென்னி .

ஜென்னியின் முன்னால்  மார்க்ஸ் மிகவும் வெட்கப்படுவாராம்.

"ரொம்ப வெக்கப்படாத மார்க்ஸ். நீ நாலுவயதுல ஜெட்டி கூட போடாம "மணி " ஆட்டிகிட்டு நடக்கும் போதே உன்னை பார்த்திருக்கிறேன்" என்று ஜென்னி கூற  மார்க்ஸ் முகத்தை முடி கொள்வாராம் வெட்கத்தில்.  

வறுமை இந்த காதலர்களை வாட்டியது போல் யாரும் வாடியிருக்க மாட்டார்கள் .பொறுமையாக சமாளித்தவள் ஜென்னி . சம்பாத்தியமென்று எதுவும் கிடையாது. தேவை என்றால் நண்பர் கள் கொடுப்பார்கள் .சமைக்க எதுவும் இல்லை .கேள்விப்பட்ட நண்பர்கோஞ்சம் பணமும் தானியமும் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார்.

அவர் பார்த்த காட்ச்சி  அவரை திகைக்க

 செய்ததாம்.

ஷேக்ஸ்பியரின்  நாடகத்தில் வருமரோமியோ  -ஜூலியட்  காடசியை மார்க்ஸ் ரோமியவாகவும் ஜென்னி ஜூலியாட்டாகவும் அற்புதமாக நடித்துக்கொண்டிருந்தார்களாம் .குழந்தை பசி மயக்கத்துல பார்த்துக் கொண்டிருந்ததாம் .

எனக்கு  காதல் மீது நம்பிக்கை இல்லைதான் .

ஆனால் ஜென்னியையும் மார்க்ஸையும் நம்புகின்றேனே !!!

  

0 comments: