Saturday, March 09, 2019





"சீத்தாராம் எச்சூரி  சொன்ன 

குட்டிக்கதை ..."



"ஆந்திராவில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு பயணிகள் பேருந்தில் ஒரு தொழிலாளி பயணம் செய்கிறார் . அவர் ஊதியமாக பெற்ற 10000 ரூபாயை சட்டைப்பையில் வைத்திருக்கிறார். "

"கண்டக்டர் வரிசையாக பயண சீட்டைகொடுத்துக்கொண்டு வருகிறார். அந்த தொழிலாளியிடம் வந்து "டிக்கட் டிக்கெட் " என்று கேட்கிறார்> தொழிலாளி பயில் கையை விட்டால் பணத்தை யாரோ "பிக் பாக்கட் அடித்து இருக்கிறார்கள்  என்பது தெரிகிறது. திடுக்கிட்ட தொழிலாளி "ஐயா !நான்கண்டிப்பாக வீ டு போய் சேரவேண்டும். என்னை பயணம் செய்ய அனுமதியுங்கள் வீட்டிலிருந்து பணத்தை கொண்டுவந்து தந்துவிடுகிறேன் "என்று கெஞ்சி கேட்கிறார். "

"கண்டக்டர்  மறுக்க தகராறு வலுக்கிறது ."நீ இறங்கு! இல்லை என்றால் பேருந்து நகராது என்று கூ றி கண்டக்டர் வண்டியை நிறுத்தி விடுகிறார். பயணிகளுக்கிடையே  வாக்குவாதம் உருவாகி சண்டை ஏற்படுகிறது."

"அப்போது பயனின்களில் ஒருவர் "விடுங்கள் ஐயா >நான் அந்த தொ ழிலாளியின்  கட்டணத்தை தந்துவிடுகிறேன் " என்று கூறி பத்து ரூபாய் தாளை நீட்டுகிறார். "


"சக பயணிகள் ஆச்சரியத்தோடுஅந்த பயணிகள் பார்க்கிறார்கள் அந்தமகானுபாவர் வேறு யாருமல்ல. அந்த தொழிலாளியின் பணத்தை "பிக்பாக்கேட்" செய்தவர் தான் அவர்."


"ஐந்து ஆண்டுகாலம்  மக்கள் பணத்தைக்கொள்ளை அடித்த மோதி போன்றவர்.இந்த பிகபாகெட் ஆசாமிகள் எப்போதுமே தனியாக வரமாட்டார்கள் தமிழகத்தில் அவருடைய கூட்டாளிதான் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்: "



(வட சென்னையில் 9-3-19 அன்றி மாலை மார்க்சிஸ்ட் கடசியின் அகிலஇந்திய பொது செயலாளர் சீத்தாராம் எச்சூரி  பேசியதிலிருந்து.)

0 comments: