சின்னப்பயலுவ
தெளிவாத்தான்
இருக்கானுவ
"மதத்தை அடிப்படையாக கொண்ட சர்க்கார் வேண்டாம் தானே ? "
"என்ன செய்ய ! மத்தில அப்படித்தானே அரசு னு வாய்சசிருக்கு ?"
"அத மாத்திரணும்டா ?"
"மாத்திட்டு "
"மொதல்ல மாத்துவம் "
"யாரு வருவா ?"
"மோடி "ய வேண்டாம் னு சொல்றவங்க "
"அது தாண்ட சிக்கலு ?"
"ஒரு ஆள் இந்தியா பூராவிலும் லீடர் னு யாரும் கண்ணுல படலையே "
"மொதல்ல கீழ இறக்குவம்டா !"
"ஆழம் தெரியாம கால விட்ட கதை ஆகிடும் "
"மோடி ஆட்கள் இத சொல்லித்தான் ஜனங்கள்ட்ட பிரச்சாரம் பண்ணறா ங்க !"
"நிசசயமா ஆள் வரும் !"
"எப்படி சொல்ற ?"
"தேவ கவுடா வருவார் னு நீ நினைச்சையா ?"
"இல்ல .அப்பம் சுர்ஜித் இருந்தாரு !
"குஜ்ரால் வந்தாரு " "வி.பி சிங் சிங் வந்தாரு " சக்கை போடு போட்டாரு."
"அதுமாதிரி வரனும்ல "கண்ணுல படலையே "
"எல்லாரும் மோடி வேண்டாம் கம் "
"ஒண்ணா நிக்க மாட்டாய்ங்காங்களே "
"அகிலேஷும் மாயாவதியும் தனி " சந்திர பாபு தனி " தெலுங்கானா ராவ் தனி "ராகுலும்,ஸ்டாலினும் தனி "
"தனி இல்லை "
"எப்படி சொல்ற ?"
"மோடியை எதுக்கறதுல ஒண்ணா இருக்காங்கல்லா "
"முதல்ல மோடியை கீழ இறக்குவம் ?அப்புறம் மத்தத பாத்துக்குவம் "
"இதைத்தானே சீத்தாராம் எச்சூரி சோல்றாரு "
"எச்சூரி சுர்ஜித் தோடே பிரதம சிஷ்யன் தான் "
எங்க வீட்ல ரெண்டு பேரன்களும் பேசிக்கிட்டு இருந்தாங்க .ஒருத்தனுக்கு 23 வயது.இன்னொருத்தனுக்கு 22 வயது. சின்ன பயலுகளா இருந்தாலும் தெளிவா இருக்கானுவ .
இரவு கவலைய மறந்து தூங்கினேன் !!!
0 comments:
Post a Comment