skip to main |
skip to sidebar
"40.துணை ராணுவ வீரர்களுக்கு ,
300 தீவிரவாதிகளா ...? "
சர்தேசாய் தொலைக்காட்ச்சி "அங்கரா"க பணியாற்றுகிறார். பலமுக்கிய தலைவர்களை சந்தித்து பெட்டிகள் மூலம் அரசியல் விஷயங்களை அலசுவது அவர் வழக்கம் .
நேற்று அவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கடசி தலைவருமான ப.சிதம்பரம் அவர்களை சந்தித்து பேசினார் .
"பிப்ரவரி 14ம் நாள் மத்திய துணை ராணுவப்படையினரில் 40 பேரை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கர வாதிகள் கொன்று போட்டார்கள்.பதிலடியாக பயங்கர வாதிகளின் பாலக்கோடு முகாமை அழித்து 300 தீவிர வாதிகளை கொன்றதாக சொல்லப்படுகிறதே அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்" என்று தேசாய் சிதம்பரம் அவர்களிடம் கேட்டார்.
"அரசு இது பற்றி அறிக்கை விட்டிருக்கிறதுஅரசு அதிகாரி "கோகலே" கூறியதை நான் நம்புகிறேன் .ராணுவ இலக்குகள் இல்லாமல், அப்பாவிமக்களை இலக்காக்காமல் , பயங்கர வாதிகளின் முகாமை இந்திய ராணுவம் தாக்கியுள்ளது என்று கூறியிருக்கிறார்" என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
மேலும் விமானத்துறை அறிக்கையில் " எங்களுக்கு அரசு கொடுத்த இலக்கை,நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இடத்ற்காக 12 போர் விமானங்களை பயன்படுத்தினோம். அந்த 12 விமானங்களும் பத்திரமாக நாடு திரும்பின " என்றும் சிதம்பரம் கூறினார் .
"300 பயங்கரவாதிகளை கொன்றதாக அவர்கள் சொல்லவில்லை .அப்படி அரசியல் காரணங்களுக்காக யாராவது கூறி இருக்கலாம். நான் அரசை நம்புகிறேன். விமானத்துறையை நம்புகிறேன்"என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment