Saturday, March 23, 2019





"அவர் 

ஒரு

மார்க்சிஸ்ட் ..." 








1969 ம் ஆண்டு மதுரையில் "தீக்கதிர் "ஆபிசோடு எனக்கு நேரடி தொடர்பு . 2002 வரை தொடர்ந்தது பின்னர் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் கல்விக்குழுவுக்கு வந்தேன் . 

மாவட்ட செயலாளர் தோழர் சுந்தரம் அவர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு சென்னை மாவட்டக்குழுவில் இணைய புறப்பட்டேன். சைதாப்பேட்டையில் அடையார் பாலம்  தாண்டி சென்னிமலை பஸ்டாப்பில் இருக்கும் மாவட்ட ஆபிஸ் சென்றேன். மாவட்ட செயலாளராக நந்தகோபால்  இருந்தார் .கல்விக்குழுவில் செயல்படுங்கள் என்று  அனுமதித்தார்; என்னை சிறப்பு உறுப்பினர்களுக்கான யூனிட்டில்  சேர்த்தார் எங்கள் யூனிட்டின் செயலாளர் வந்ததும் என்னை அறிமுகப்படுத்தினார் .

கம்பிரமான உருவம் . கன்னங்கரேல் என்ற நிறம்..களையான செதுக்கிவைத்த சிற்பம் போன்ற  முக அமைப்பு. மென்மையான பேச்சு.உறுதியான செயல்பாடு.. காக்கி சட்டைதான் அவர் உடுப்பு. "தோழர் ராமு "  என்று அறிமுகப்படுத்தினார்கள்.

ஒரு மார்க்சு மாதம் 15 ம் தேதி சிறை  நிரப்பும் போராட்டம் .  கைதாகி சைதை ஆசிரியர் பயிற்சி மைதானத்தி வைக்கப்பட்டோம்.கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருக்கும் .அதில் ராமுவுமொருவர் .என்னை செல்லமாக கடிந்து கொண்டார் . யூநிட் செயலாளரிடம் சொல்ல வேண்டாமா ? என்று கேட்டார் . சமாளித்தேன் . 

நாகபுரி வந்தபிறகும் தொலைபேசி மூலம் கிளை விவகாரங்களை அவ்வப்போது தெரிவிப்பார் . எங்கள் யூனிட்டில் இருந்தவர்கள் பலர் - ஒருவர் ஆறுமாதவாது லண்டனில் இருப்பார்-நான் வருடத்தில் ஆறுமாதமாவது வடநாட்டில் இருப்பேன், 

எங்களை கட்டி மேய்த்தவர் தோழர் ராமு..

இன்று உலகம் அறிந்த "பூ " ராமு - மடியில் பெனாவை  வைத்துக்கொண்டு மாட்டு வண்டி ஓட்டும் வண்டிக்காரராக  திரைப்படத்தில் தோன்றிய :பூ ராமு. 

பிரியன் படத்தில் கல்லூரி முதல்வராக வந்து அதன் கம்பிரத்தை நிலை நாட்டினார். 

என்  பேரன்கள் ஒருவன் புது டில்லியில் சட்டப்பல்கலையில்படிக்கிறான் .மற்றோருவன்  புனேயில் பணி புரிகிறான் . ஹோலி பண்டிகைக்காக வந்திருந்தான் . பிரியன் படத்தை அன்றுதான் பார்த்தேன்.

கல்லூரி முதல்வராக வந்த ராமு வை பார்த்ததும் " ஏல இங்கவாங்கடா .இவர்தாண்டா என்னுடைய யூனிட் செயலாளராக இருந்தவர் "..என்று கத்தி  விட்டேன்.

"ஏன் தாத்தா கத்தறீங்க ! அதுதான் பூ  ராமு "என்றான் பேரன்.

"இல்லைல ! அவர்  ஒரு மார்க்சிஸ்ட்" என்றேன் கம்பிரமாக.


 

  

0 comments: