skip to main |
skip to sidebar
நிதியும் ,
நீதியும் ....!!!
"ஏல! சுப்ரிம் கோர்ட் போயாவது உன்னை ஒருகை பாத்துருவேன் " என்று நாம் சர்வசாதாரணமாக பேசுவது உண்டு.
சமீபத்தில் டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலையில்படிக்கும் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
உச்ச நீதிமன்ற நடைமுறை பற்றி என் சந்தேகங்களை கேட்டேன்.
இந்த மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு மாதம் Internship இருக்க வேண்டும் அதாவது சீனியர் வக்கீலிடம் அவர் அலுவலகம் சென்று நடை முறையை பழக்க வேண்டும். இவர்கள் உசச நீதிமன்றத்தில் பணியாற்றும் சீனியர் வக்கீல்களிடம் செயல் முறையில் பாடம் கற்றுக்கொள்வார்கள் .உச்ச்சநீதிமன்றம் சென்று அங்கு நடை பெரும் விவாதங்களை கேட்பார்கள் .உச்ச்சநீதிமனற நடைமுறைகளை அறிந்து கொள்வார்கள்
கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வந்ததும் மாவட்ட கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்.அதன் பிறகு உயர் நிதிமன்றம் போவோம்.அதுவும் முடிந்த பிறகு உச்ச நிதி மன்றம் போவோம் .இது தான் நமக்கு தெரிந்த நடைமுறை.
உசச நிதி மன்றம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் பணி புரிகிறது
இதில் திங்களும் வெள்ளியும் admission டே என்கிறார்கள் .எந்த ஒரு வாழ்க்கையும் நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ளாது .அதில் ஏதாவது சட்டப்பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பார்கள்> இல்லை என்றால் அட்மிஷன் சமயத்திலேயே தள்ளுபடி செய்வார்கள்.
இல்லை ?இந்த வழக்கில் சட்ட பிரசினை இருக்கிறது அதனால் கன ம் கோர்ட்டார் இதனை விசாரிக்க வேண்டும் என்று உச்ச்சநீதிமன்ற வக்கீல் வாதிட்டு நிதிபதிகளை ஏற்றுக்கொள்ளசெய்ய வேண்டும்,. இதற்கென்றே admission எஸ்பிர்ட் வக்கீல்கள் இருக்கிறார்கள் .ஒரு அட்மிஷனுக்கு ஒருலட்சம் ரூ வாங்குவார்கள். AG ஆகி இருந்து ஒய்வு பெற்ற வக்கீ ல் ஒருவர் இதில் எஸ்பேர்ட்..ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 அட்மிஷன் வாங்கி விடுவார் . வாரம் இரண்டு நாள் என்றால் எவ்வளவு என்று கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
இது தவிர செவாய் புதன் வியாழனில் வழக்கு விசாரணை நடை பெரும். இதில் ஒரு ஈரங்கிக்கு (hearing ) 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வக்கீல் பீசு கொடுக்க வேண்டும் .
அரசியல் செல்வாக்குள்ள தமிழக வக்கீல் 20லட்சம் வாங்குவதாக கேள்வி .ஒரேநாளில் இரண்டு வழக்கு என்றால் இரண்டு பீ.சு.
மாதம் கோடிக்கணக்கில் சம்பாத்தியம் பண்ணும் வக்கீல்களிருக்கிறார்கள்.
இவர்களிடம் ஜூனியர் நிறைய இருப்பார்கள்> அவர்களுக்குமாதம் குறைந்த பட்சம் ஒருலட்சமாவது ஊதியம் கொடுக்கவேண்டும். ஜூனியர்களின் திறமைக்கு ஏற்ப இது ஐந்து லட்சம் என்று கூடும்.
உயர் நீதி மனற தீர்ப்புக்குப்பிறகு மாநில வக்கீல்கள் உச்ச்சநீதிமன்ற மேல் முறையிடுபற்றி சிபாரிசு செய்வார்கள். இவர்களுக்கும் உச்ச்சநீதிமன்ற வக்கீல்களுக்கும் tieup இருக்கும். இந்த மாநில வக்கீல்களுக்கு உச்ச்சநீதிமன்ற வக்கீல்கள் கேசு கொடுத்ததற்காக பீ சு கொடுப்பது வழக்கம் .
பொதுவாக வக்கீல் தொழிலும்,டாக்டர்களும் தங்கள் வருமானத்தை சரியான கணக்கு வைத்து சொல்வதில்லை என்று ஒரு குற்றசாட்டு உண்டு.
உச்ச நீதிமன்றம் போய் வழக்காடி வெற்றி பெறுவது என்பது நம் வங்கி இருப்பை பொறுத்தது .
.
0 comments:
Post a Comment