skip to main |
skip to sidebar
மொழி வழி ,
மாநிலங்கள்
பிரிந்த பொது ...!!!
மதராஸ் மாகாணத்தில் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு பேசும் பகுதிகளும் சேர்ந்தே இருந்தன. ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகள், மலபார் பகுதி, கோலார் பகுதி ஆகியவையும் மதராஸ் மாகாணத்தையோடு இருந்தன.
இந்தியா சுதந்திரமடைந்ததும் state reorganising commiission என்ற அமைப்பை உருவாக்கி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன . மதராஸ் பகுதியிலிருந்து ஆந்திரா பிரிந்தது> 1957 ஆண்டுவாக்கில் நிஜாமின் தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைக்கப்பட்டு புதிய ஆந்திர பிரதேசம் உருவாகியது.
தாற்காலிகமாக கார்னுலை தலைநகரமார்க் கொண்ட ஆந்திராவில் சஞ் சிவரெட்டி முதல்வராக இருந்தார் ஏற்கனவே சட்டமன் றம் உயர்நிதிமன்றம் என்று தலைநகரமாக இருந்த ஹைதிராபாத் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக ஆகியது.
கிட்டத்தட்ட இதே காலத்தில் தான் நான் ஹைதிராபாத்தில் பணியில் சேர்ந்தேன்,
ஆந்திராவின் ரெட்டிகளும்,காப்பு களும் ஆதிக்கம் செலுத்தும் நிலை முழுமையாக உருவாகாத நிலை. ஹதீராபாத் நிஜாமின் மிசச சொச்சங்கள் ,உருது மொழி அந்த இஸ்லாமிய மென்மையான கலாசாரம் ஆகியவை மிகுந்திருந்த காலம் அது..
உலகத்தின் மிகசிறநத கவிதை மொழிகளில் ஒன்று உருது. . சைக்கிள் ரிக்ஷ ஓட்டும் தொழிலாளி கூட ஷெர்வானி போட்டுக்கொண்டு " ஆயியே ! சர்க்கார் ! தஷ்ரிப் றக்கியே ! நவாப் ! ககாந் தக் ஜனா ஹை !" என்று மரியாதை கலந்து பேசும் மொழியை நான் மிகுந்த ஈடுபாட்டோடு ரசிப்பேன் .
அங்கு பாட சாலைகளில் பாடமொழி உருது. பல்கலையிலும் உருது ஏன் ? இஞ்சினீரிங் கல்லூரியிலும் உருது தான். மருத்துவ கல்லூரியிலும் உருது - அதுதான் பயிற்றி மொழியாக இருந்தது.
சன்சிவ ரெட்டி ,சஞ்சிவய்யா ,பாஸ்கர் ராவ் என்று வந்தார்கள். பயிற்று மோழியை மாற்ற வேண்டும் என்றா ர்கள். ஒருவேளை தெலுங்க மொழியாக மாற்றப்போகிறார்களோ என்று நினைத்தேன்.
பயிற்று மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவந்தார்கள்.
மொழிவாரி மாநிலம் உருவாக்கும் போதுமானில மொ ழிகளுக்கும், மொழிபேசும் இனத்திற்கும் பாதுகாப்பு இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன் .
என்ன செய்ய !!!???
0 comments:
Post a Comment