Monday, May 13, 2019




தமிழ் திரையில் 

இஸ்லாமியர்களின் வாழ்க்கை 

பதிவுகள்.....!!!




சமீபத்தில் இப்படி ஒரு கருத்தரங்கம் நடந்தது . அனீஸ்,நவீன்,தாமிரா,மிரா கதிரவன் என்று பலர் கருத்துரை ஆற்றினர். கோபி நாயனார் , மாரி  செல்வராஜ் ,லெனின் பாரதி ஆகியோரும் பங்கேற்றனர்.ஒரே சுதப்பல்..லெனின் பாரதி மட்டும்  வணிகம் ,வணிக மாயம் என்று கூறினார்> இந்த கருத்தரங்கை நடத்தியவர்களுக்கு பின்னணியாக யுகபாரதி இருந்ததாக கூறினார்கள்> அவரும் பேசினார்.

திரை உலக பிரசினைகளுக்கு தீர்வு திரை உலகத்தினுள் இல்லை .சமூகம்,அரசியல்,பண்பாட்டு தளங்களில் ஏற்படும் அதிர்வுகள் திரை உலகை  பாதிக்கின்றன. 

இரண்டு பாரதிகளும்  Pan Indian திரை உலகை அதன் வரலாற்றை மார்க்சிய  மெய்ஞானத்தின் அடிப்படையில் பார்ப்பது நன்மை பயக்கும்.

திலீப் குமார் இநதிய திரை உலகி முத்த வர. யூசுப் கான் என்ற இஸ்லாமியர் அவர் .

மீனாகுமாரி என்ற அற்புதமான நடிகைதான் மஜபீன் பானு என்ற இஸ்லாமியர்.

பேகம் மும்தாஜ் தான் மதுபாலா. இந்த பெயர் மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன.?

லாகூரிலும்,கராசியிலும்,பெஷாவரிலும்  இருந்து விரட்டப்பட்டு சோறில்லாமல்,தங்க இடமில்லாமல் மும்பை வந்திறங்கிய தேவ்  ஆன்ந்துகளும்,சோப்ராக்களும் தான் இந்திய திரைப்படத்தை மும்பை திரை உலகை  உருவாக்கினவர்கள் . 

Rk  ஸ்டுடியோவின் முதலாளி ராஜ் கபூருக்கு நிதி ஆதாரமாக செயல்பட்டவர் கடலூரை சேர்ந்த ஹாஜி மஸ்தான் பாய்.

docto  ராகி முகம்மது ரேஜா என்பவர்  அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர். அரபி,உருது,சம்ஸ்கிருத மொழிகளில் தேர்சசி  பெற்றவர் .திரைக்கதை வசனம் எழுதி விருது பெற்றவர் இஸ்லாமிய தத்துவத்திலும்,உபநிஷத்,கீதை  ஆகியவற்றிலும் தேர்சசி  உள்ளவர்.

மகாபாரதம் தொடருக்கு திரக்கத்தை வசனம் எழுதியவர் . மகாபாரதம் காலத்தால் உருவானது வியாசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உருவாகியிருக்கும்.மகபாரதம் நிகழ்சசி துவங்கும் பொது "நான் காலம் பேசுகிறேன்" என்றுதான் ஆரம்பமாகும்.அதில் வரும் கீதோபதேசம் காட்ச்சிகள் பாராட்டப்பட்டதற்கு காரணம் டாக்டர் ரேஜா அவர்கள்தான்.

இந்திய புராணங்களின் மீது அவர்கொண்ட பற்றுதல் காரணமாக தன மகள்களுக்கு பார்வதி என்றும் சரஸ்வதி என்றும் பெயரிட்ட மகிழ்ந்தார்.சரஸ்வதி முகம்மது என்பவரை மணந்து கொண்டு லண்டனில் பிபிசி யில் செய்தி வாசிப்பவராக இருக்கிறாரா.

பாரவ்தி முகம்மது என்பவரை மணந்து கொண்டு தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் .

இந்திரா அம்மையார் மறைந்த பொது ஏற்பட்ட கலவரத்தின் பொது foot soldier களா க இந்த நிக்கர் பாய்ஸ்  இருந்தார்கள். செய்திகள் வாசிப்பது "பார்வதி முகம்மது  " சொல்வதை அவர்களால் தாங்கமுடியவில்லை> ராஜிவி டம் சொன்னார்கள்> பார்வதி முகம்மது தூர்தர்ஷனிலிருந்து நீக்கப்பட்டார்.

திரை உலகம் என்பது எவ்வளவு மெல்லியதான ஒன்று என்பதை சொல் வது தான் என் நோக்கம்> எதிலும்,எங்கும் சொதப்பல் இருந்து கொண் டே இருக்கும் உலகம் இது .

யுகபாரதியும்,லெனின் பாரதியும், இது பற்றி மேலும் கற்று தெளிவு கொடுக்க வேண்டும் எனது தான் என் ஆசை .   

 

0 comments: