skip to main |
skip to sidebar
நீ!
மேலும் மேலும்
பறக்க வேண்டும்
தோழா!!!
அந்த தொண்டு கிழம் சங்கரய்யா அவர்களின் இடது புறம் P R N அவர்களும் வலது புறம் su .ve யம் அமர்ந்திருந்ததை நெஞ்சம் விம்ம கண் கள் பனிக்க பார்த்து மகிழ்ந்தேன் .
பல்லாண்டுகளுக்கு முன் திருப்பரம் குன்றம் பதினாறு கால் மணடபத்தின் முன் போடப்பட்ட மேடையில்கவிதை வாசித்த மாணவன் அல்ல இப்போது.
உன் உதட்டசைவில் வெளிப்படும் வார்த்தைகளை மாஸ்க்கோவில் ,பெய்ஜிங்கில்,ஹனாயில், லாவோஸில் கூர்ந்து கேட்பார்கள்.
நீ இந்திய புரட்ச்சிகர இயக்கத்தின் statemen ஆகிவிட்டாய்.
கீழடி மண்ணை சுமந்தவன் மட்டுமல்ல .!
பாலுக்கு அழும் சிசு,
பசித்து அழும் குழந்தை ,
படிப்புக்கு அழகும் சிறுவன்,
வேலைக்கு அழும் வாலிபன்,
தன் குடும்பத்திற்கு அழும் தாய்,
தன் இயலாமைக்கு அழும் கிழவன்
இவர்களை சுமக்க போகிறவன் நீ.
அகிலத்தின் link நீ !
லெனின் தொடுத்த மாலையின் இந்திய கண்ணி நீ!
சு.வே ! இந்த உலகம் முழுவதும் பறந்து திரி !
பற !
மேலும் மேலும்
பற !!
0 comments:
Post a Comment