Tuesday, May 07, 2019




"ஐக்கிய முன்னணியும் 


அதன் தாக்கமும் ......."




தேசிய ஜனநாயகமா ? (National  Democracy ) மக்கள் ஜனநாயகமா  ? (Peoples   Democracy ) என்ற விவாதம்நடந்த பொது மக்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன்.

பரந்து பட்ட தமிழக அரசியலில் அப்போது இனவாதமும்,பிரிவினை வாதமும் தூக்கலாக நின்ற நேரம்.

  மதுரை வைகை யில் மேல் கட்டப்பட்ட ஆல்பர்ட் விக்டர் பாலத்தில் "தமிழா வங்கத்தைப்பார்- வர்க்க உணர்வுகொள்" என்று எழுதும் இளைஞர்களை  கொண்டாடி மகிழ்ந்தோம்.

இனவாதத்தையும்,பிரிவினையையும் எதிர்த்து பிரசாரம் செய்தோம். "திராவிட நாடு திராவிடருக்கே " என்று ஆதிநாளில் கோஷம் போட்டவனும் நான்தான் . 

1965ம் ஆண்டு "Hindi Imperialism  Down Down " என்று அச்சடித்த தபால் அட்டைகளை விநியோகம் பண்ணி இருக்கிறேன்.மொழிப்போராட்டத்தில் தீவிரமாக இறங்கி போராடிய மாணவர்களை கைவிட்டு தலைவர்கள் ஒதுங்கிய பொது இடதுசாரி தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றன .  

1967ம் ஆண்டு தேர்தல் வந்தது . அப்போது தான் ஐக்கிய முன்னணியின் செயல் பாடு முக்கியமானதாக மாறியது> காங்கிரசின் ஏக போகத்தை முறியடிக்க எதிர்க்கட்ச்சிகள் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை  உருவாகியது. 

திராவிட முன்னேற்ற கழகத்தோடு இணைந்து ஏழு கடசிகள் சேர்ந்து செயல்பட முடிவாகியது. இனவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும் எதிர்த்த்வந்த் இடது சாரிகளில் ஒருபகுதி இதனை ஏற்க தயங்கியது.

குழு க்களுக்குள் நடந்த விவாதங்களில் தலைவர்கள் பங்கெடுத்து ஐக்கிய முன்னணி  பற்றி விளக்கினர்.

"இடது சாரிகள் தனிமைப்பட வேண்டும் என்பது தான் வர்க்க எதிரிகளின் விருப்பம்> அப்போது தான் அவர்களை அழித்து ஓழிக்கமு டியும் .நாம் மக்களோடு மக்களாக இருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.இன்று பெருவாரியான மக்கள் தி .மு.காவோடு இருக்கின்றனர்  இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். .அது மட்டுமல்ல> அவர்களோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டே அவர்களின் அணிகளிடை ஊடாடி நம் கருத்தை சொல்லி அவர்களை நம்பக்கம் திருப்பவேண்டும். அதுதான் ஐக்கிய முன்னணியின் நோக்கம்" என்று தலைவர்கள் விளக்கம் தந்தார்கள்.

1967ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நான்கு நாடாளுமன் \றம்,,12 சட்டமன்றத்தில் வெற்றி பெற்று "சர்வதேச அனாதைகள் " என்று கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினோம். .. இதன் முழு ப்பலனை 1975ம் ஆண்டு உணர்ந்தோம்.

அவசரநிலைக்காலம் வந்தது. அதே நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் உதயமாகியது .கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டிய தருணம் .பல்வேறு அமைப்புகள் அதிகார பீடத்திற்கு சரணாகதி அடைந்த பொது தமு எ  சங்கம்  மட்டும்  நிமிர்ந்து நின்று செயல்பட்டது .

1975 நவம்பர்மாதம் ரகசியமாக இலக்கிய  முகம் நடத்த முடிவு செய்ததுமுத்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி நாமக்கல்லில் இலக்கிய முகாமை ரகசியமாக நடத்தினார் . இந்த இலக்கிய முகாமில் "சம்ஸ்கிருத மொழி யின் தாக்கம் " என்ற தலைப்பில் பேச என்னை பணித்திருந்தார்கள்.

கன்னடத்தலிருந்து Dr  நாகராஜ்,சித்தலிங்கையா, (அப்போது மாணவர் ) சேக்கிழார்  ஆகியோர் வந்திருந்தனர் .

பெருஞ்சித்திரனாரின் பின்னால் சுற்றிவந்த இளைஞர்கள் இனவாதத்தையும் பிரிவினை வாதத்தையும்கைவிட்டு வர்க்க அரசியலைத்தேடி வந்திருந்தனர் . முக்கியமானவர்களாக போதிய வெற்பன்<அறிவுறுவோன்,யானை முகத்தான் என்று தஞ்சை யிலிருந்தும் ,சாத்தூர்,சிவகாசி ,சேலம் சென்னை என்று திக வினர் சங்கத்தில் உறுப்பினராகி வந்திருந்தனர் .ரகசியமாக நடந்த இந்த முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து  கிட்டத்தட்ட 110 பேர் வந்திருந்தனர்.

தலைவர் கே.முத்தையா அவர்கள் "இப்போது சம்ஸ்கிருத இலக்கியத்தின் தாக்கம் " என்ற தலைப்பில் காஸ்யபன் பேசுவார் என்று அறிவித்தார்>

முறுக்கு மீசையோடு இருந்த பொதியவேற்பனின்  கை களைக்குலுக்கியபடி கம்பிரமாக மேடையை நோக்கி நடந்தேன். .

















0 comments: