Friday, April 17, 2015


Public

Post

News Feed


Syamalam Kashyapan

6 hrs · 

பசு வதை தடை தான் நோக்கம் ...!

மாட்டிறைச்சி தடை சும்மா ஜுஜுபி....!!!

மாட்டிறைச்சி தடை பற்றி விவாதம் நடக்கிறது ! உலகத்திலேயே மாட்டிறைச்சியை அதிகமாக ஏறுமதி செய்வது பிரெசில் என்கிறார்கள் ! அதற்கு அடுத்த இரண்டாவது இடம் இந்தியாவுக்கு ! இந்தியாவில் மாட்டிறைசியை மொத்தம் ஆறு கம்பெனிகள் ஏற்றுமதி செய்கின்றன ! இதில் நான்கு கம்பெனிகள் இந்துத்வா காரர்களுக்கு சொந்தமானது !

ஒர்கம்பெனி பெயர் "அல் கபூர் " ! மற்றொரு கம்பெனி பெயர்" அரெபியன் எக்ஸ்போர்ட்" ! இவை இஸ்லாமியருக்கு சொந்தம் எ ந்று எண்ணினால் உங்களுக்கு பைத்தியம் பிடிதிருப்பதாக அர்த்தம் ! இந்துத்வா காரர்கள் தான் கம்பெனி பெயரை இப்படி வைத்திருக்கிறார்கள் !

மும்பையில் ஆடு,மாடு வெட்டும் இடம் மொத்தம் மூன்று இருக்கிறது ! இதில் இரண்டு இடம் ஜைன சமயத்தவரால் ஏலம் எடுக்க்கப்பட்டுள்ளது ! மாட்டின் தோலுக்கு ஏற்றுமதி கிராக்கி அதிகம் ! அதன் கொம்பு,எலும்பு ஆகியவைகளுக்கு தொழில் பயன்பாடு அதிகம் ! சர்க்கரை ஆலைகளில் கரும்பு பாகாய் சுத்தம் செய்ய எலும்பு,கொம்பு ஆகியவற்றை பயன் படுத்துகிறார்களாம் ! அரசு தலகீழாக நின்றாலும் மாட்டிறைச்சியை இவர்களால் தடுக்கமுடியாது !

சமிபத்தில் நீதிமன்றாத்தில் மாட்டிறைச்சிய தடுப்பதின் மூலம் இன்னும் எதை எதை தடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது ! அப்போது அரசு வக்கீல் இப்போதைக்கு நாங்கள் பசுவதையை மட்டும் தான் தடுக்கப் பொகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ! The cat is out of the bag !

பசுவதையை தடை செய்ய சட்டம் கொண்டுவர முடியாது ! அது மத சம்மந்தமான ஒருதலபட்சமானதாக இருக்கும் ! நீதி மன்றம் ஏற்காது ! அதனல் மாட்டிறைச்சியை தடை செய்யும் பாசாங்கினை இந்துத்வா வாதிகள் செய்கிறார்கள் !

நம்ம ஊர்ல மாட்டிறைச்சி உண்பதால் ஏற்படும் நனமைகள் யாவை என்று "வியாசம் " எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ! நாம் எதிரியை அடிப்பதை விட எதிரியின் நிழலை அடித்தே பழக்கப்பட்டவர்கள் !

சென்னையில் மாட்டுக்கறியை இலவசமாக கொடுக்கும் "யாகம் " நடத்த விருக்கிறார்களாம் !

திருமாவளவன்,போன்றொர் சரி !

குளத்தூர் மணீக்கும் ,வீரமணீக்கும் இது தெரியாதா ?

எங்

pan

April 13 at 12:16pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் -----3

"நாமகிரி அம்மையாரைப் பார்த்தேன் "

மார்ச் 19ம் தேதி மாலை 5மணிக்கு குமாரசாமி திருமனமண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்க விருகின்றன ! அங்கு தான் உணவுக்கூடமும் ! தோழர் லெனின் மதிய உணவுக்காக விடுதிக்கு கார் அனுப்பியிருந்தர் ! நானும் முத்துமீனாட்சியும் மண்டபம் செல்ல "லிஃப்ட்" அருகே நின்று கொண்டிருந்தோம் ! கதவு திறந்ததும் என்களை சந்திப்பதற்காக அந்த அம்மையார் வந்தார் ! அவரையும் அழைத்துக்கோண்டு நாங்கள் மண்டபம் சென்றோம் 1

காலம் அவரை மாற்றி இருந்தது ! கொஞ்சம் கருத்து ,உடல் பூசினாற்போல் இருந்தார் நமகிரி அம்மையார் ! எங்கள் ராஜாமணி முகம் மலர ,லேசான வெட்கம் பற்ற "செம்மலர்,செம்மலர் " என்று அழைப்பரே அந்த செம்மலரின் பூர்வாசிரமப்பெயர்தான் நாமகிரி ! சனாதன குடும்பத்தில் பிறந்து இயக்கத்திகாக தன்னை துய்த்துக் கொண்டவர் அவர் !

இயக்கத்தின் பொது நிகழ்ச்சிகளில் கடை போட்டு இயக்க பிரசுரங்களையும், இயக்கம் சார்ந்த பொருட்களையும் விற்கும் ராஜாமணிக்கு உதவியாக செம்மலர் இருந்தார் !

ஆசையாக " சிந்தனைப் பார்க்க வேண்டுமே ? " என்றேன்!

ஒரு மெலிதான புன்னகை மலர "அவன் தேன் நிலவுக்காக அசாம் சென்றிருக்கிறான் "என்றார்! முகத்தில் பெருமிதம்.. உள் மனம் "ராஜாமணி,ராஜாமணி " என்று கதறியது ! "நீ இல்லையே கண்ணா" இதனைப் பார்க்க என்று !

இரண்டு மகன்கள் ! ஒருவர் மூத்த மகன் தோலைக்காட்சியில் சென்னையில் பணியாற்றுகிறார் !

இரண்டாமவர் சிந்தன் இயக்கத்தின் முழுநேர ஊழியராக சென்னையில் இருக்கிறார் ! அவர் துணைவியார் தமிழ் "இந்து" பத்திரிகையில் பணியாற்றுகிறார் !

"அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே? "

"திருப்பூர் என் அரசியல் வாழ்க்கைக்கு தோதாக இருக்கிறது ! நான் இங்கேயே இருக்கிறென் என்கிறார்"என்று அம்மா கூறியதாக சிந்தன் பதிலளித்தார் !

( நாகபுரி வந்ததும் முகனூல் மூலம் சிந்தனுக்கு சிறு விபத்து மூலம் காலில் அடிபட்டிருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன் ! தொடர்பு கொண்டதில் "பயப்பட வேண்டாம். ஒருமாத்திதில் நடக்க முடியுமென்றும்,அம்மா இங்கு வந்துதனக்கு உதவியாக இருப்பதாகவும் சிந்தன் கூறி


திருப்பூருக்கு சென்று வந்தேன் .....2

"விழிப்பு நடராசன் "

விழிப்பு நடராசன் அவர்கள் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும் ! நானோ ஒரு நிலைதகவலைத்தான் எழுத விருக்கிறென் ! எப்பேற்பட்ட தோழர் !அவர் உடம்பின் திசுக்கள் பூராவும் இயக்கம் இயக்கம் என்றே ஒலிக்கும் ! 

மிகவும் அமைதியான , சலனமற்ற, உறுதியான,மெலிதான குரல் ! செயலூக்கம் ! எப்பேர்பட்ட ஆளுமை !

பொறியியல்,மருத்துவம்,நிர்வாக இயல் என்று தங்கள்குழந்தைகள் தொழிற்கல்வியில்பட்டம் பெற்று முன்னேர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் ,கிராமத்து கள்ள மடுகளை "பவுண்டில் " அடைப்பது போல நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளீகளில் அடைக்கிறார்களே ! அன்று அப்படியல்ல ! I.I.T போன்றவை உருவான காலம் ! டெல்லி I.I.T அன்று மதிப்பு மிக்க கல்விச்சாலை !

தகுதியின் அடைப்படையில் நடராசன் அங்கு பயின்றார் !

நூற்பாலை, நெசவு ஆகிய இரண்டு துறைகளிலும் M.Tech. சிறப்புப் பட்டம் பெற்றார் ! திருப்பூர் வந்து பின்னலாடை துறையில் முத்திரை பதிக்க போகிறார் என்று கருதினார்கள் ! பின்னலாடையை விட பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அவர் விரும்பிணார் ! அதற்கு காரணம் இருந்தது ! 

இன்று இருப்பது பொல் ஜனனாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு அன்று உருவாக வில்லை ! சொசலிச வாலிபர் முன்னணீ ( Socialist Youth Front ) என்ற அமைப்புதான் இருந்தது ! மறைந்த தோழர் பி.மொகன்.முன்னாள் எம்.எல் ஏ நன்மாறன்,கருணாகரன், பாலகிருஷ்ணன் என்று இளம்தோழர்கள் அதனைகட்டி வளர்த்தார்கள் 1 அவர்களொடு SYF ல் செயல்பட்டவர் நடராசன் 1

பனியன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை எழுந்தது ! அவர்களுக்கு "பஞ்சப்படி" என்றால் என்னவென்று தெரியாது ! அதனை பற்றி சொல்லி அவர்களை பஞ்சப்படிக்காக போராட செய்தவர்களில் நடராசனும் ஒருவர் ! தெருத்தெருவாக வீதி வீதியாக" பஞ்சப்படி " என்ற நாடகத்தினை எழுதி பிரச்சாரம் நடந்தது ! அவ்ருக்கு உதவியாக ,மணிக்குமார்,ராஜாமணி ஆகியொர் இருந்தனர் !

வீதி நாடகத்தில் நடிக்க தொழில் முறை நடிகை வேண்டும் என்று மதுரை பீபிள்ஸ் த்யெட்டரி பணீயாற்றிகொண்டிருந்த என்னை அணூகீணார் ! எங்கள் குழுவில் நடித்துக்கொண்டிருந்த இருவரை அனுப்பினோம் !

கிட்டத்தட்ட 50 நாட்கள் போராட்டம் ! 50 நாளும் ஒரு நாளுக்கு ஐந்து ஆறு இடங்களில் நாடகம் நடக்கும் ! வெற்றிகரமான போராட்டம் முடிந்தது !

த.மு எ.ச மாநில அளவில் இசைபயிற்சி முகாம் நடத்தியது ! திரைப்பட இசை இயக்குனர் எம்.பி சீனிவாசன் அவர்களும் ,திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள் ! கிட்டத்தட்ட 90பேர் கலந்து கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேறியது ! 90 பெராஈ ஓரே மேடையில் அமர்த்த நடராசனும்,மணிக்குமாரும் செய்த ஏற்பாடு இன்றும் என்னை பிரமிக்க வைக்கிறது !

அதுசரி ! நடராசன் எப்படி விழிப்பு நரடராசன் ஆனார் ! அது பற்றி தனியாக எழுத வேண்டும் ! திருப்பூரில் இருந்து :விழிப்பு " என்ற கலை இலக்கிய பத்திரிகையை மாதந்தோரும் நடத்திக்கோண்டிருந்தார் நடராசன் ! விழிப்பு நடராசனானார் !

Like · Comment · Share

 Kashyapan

April 11 at 8:33pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் ........!!!

சென்ற 2014ம் ஆண்டின் இறுதியில் த.மு.எ.க சங்கத்தின் 13 வது மாநில மாநாடு திருப்புரில் நடைபெறும் என்று சங்க தலமை அறிவித்தது ! 1975ம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் இருந்து 12 மாநாடுகலிலும் கல்ந்து கொண்டேன் ! இதிலும் கலந்து கொள்ள விரும்பினேன் ! தலைவர் தமிழ் அவர்களுக்கும் செயலாளர் வெங்கடெசன் அவ்ர்களுக்கும் தகவல் கொடுத்தேன் ! "மூத்த எழுத்தாளர் ! கண்டிப்பாக வாருங்கள் ! செயற்குழுவில் பேசி அழைப்பினை அனுப்புகிறேன் !" வெங்கடெசன் அவர்கள் மின் அஞ்சல் அனுப்பினார்கள் !

ஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் விருந்தினர் அறையினை எல்.ஐ.சி தொழர்கள் முளம் ஏற்பாடு செய்து கொள்வதுண்டு ! ஆனால் திருப்பூர் கிளையில் விருந்தினர் அறை இல்லை ! " தங்கும் வசதி சரியாக இல்லை என்றால் போக வேண்டாம் என்று என் மகன் கூறினான் !.சங்கடமாக இருந்தது !

ஒரு யோசனையில் தோழர் லெனின் மிர்னியை தொடர்பு கொண்டேன் ! "கவலியே படாதீர்கள் ! திருப்பூரில் இறங்கியதிலிருந்து திரும்பி ரயிலடியில் ஏறும் வரை நான் பொறுப்பு ! உங்கள் மகனைபோல் இருந்து பர்த்துக் கொள்கிறென் என்றார் '!

26 மணி நேர பயணத்தில் 18-3-15 அன்று மாலை 4.40 க்கு நானும் முத்துமினட்சி அவர்களும் திருப்பூர வந்து செர்ந்தோம் !! லெனின் தோழர் எங்களை விடுதியில் கோண்டு விட்டார்! "நான் காலை வருகிறேன்! வேறு என்ன வேண்டும் ?' என்று கேட்டார்!

திருப்பூர் பழகிய ஊர் ! விழிப்பு நட ராசனை பார்க்க வேண்டும்! தீக்கதிரில் பணியாற்றிய பொன்ராம்.தூயவன் ஆகியவர்களை சந்திக்க வேண்டும் ! எல்லவற்றிர்க்கும் மேலாக " எங்கள் தங்கம் ராஜாமணியின் துணைவியாரைபார்க்க வெண்டும் " என்றேன்!

அவர் சென்றபின் குளித்து உடை மாற்றி அமர்ந்தேன் !அறைக்கதவு மணி சிணுங்கியது ! வாருங்கள் என்றேன் !

விழிப்பு நடராசன் ! அதே உடற்கட்டு! சிவப்பு நிறம்-இடுங்கிய கண்கள் ! கொஞ்சம் வயதான தோற்றம் ! கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்கு முந்தய அதே விழிப்பு நடராசன் ! கட்டிதழுவிக் கொண்டோ

ashyapan

April 10 at 3:07pm · 

ஜெயகாந்தன் அவர்களும் ,

மதுரை எல்.ஐ.சி ஊழியர்களும் .....!!!

1965ம் ஆண்டில் "உன்னை போல் ஒருவன்" என்ற படம் வெளிவந்தது ! ஜெயகந்தன் அவர்கள் இயக்கம். கந்திமதி ,பிரபாகர், வீராசாமி ஆகியொர் நடித்தனர் ! வீணை கலைஞர்சிட்டி பாபு இசை அமைப்பு ! பாடல்கள் கூடாது என்று ஜெ .கெ அறிவித்து விட்டார் !

இந்தப்படம் திரை அரங்குகள் மூலம் வந்தால் தமிழ் திரப்பட துறையை புரட்டிப் போடும் என்பது அறிந்த ஓன்று ! ஆகவே இதனை வெளியிடாமல் இருக்க கோலிவூட் உள்ளே ஒரு குழு வேலை செய்தது ! அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் "கொக்கி" பயலுகளை கோடம்பாக்கத்துக்குள்ள விடக்கூடாது " என்று லட்சிய நடிகர் அறிவித்திருந்தார் 1

ஜெ.கெ அவர்களின் சொந்த தயாரிப்பு ! தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தயரித்தார்!

மதுரையில் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் சிலர் இந்த படத்தை வேலியிட விரும்பினர் ! மதுரை செண்ட்றல் தியெட்டரில் காலை 10 மணீக்காட்சிக்கு எற்பாடு செய்தனர்! எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி நடக்க காரியங்கள் நடந்தன ! டிக்கட் விற்பனை ஆயிற்று !

இதற்கிடையே இந்த படத்தை ஒருகாட்சி மூலம் வரும் வருவாயில் கணிசமான லாபத்தை கம்யுனிஸ்கட்சிக்கு கொடுக்கப் பொகிறார்கள் என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் !

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை செண்ட்றல் த்யெட்டெரில் கூட்டம் கட்டி ஏறியது! காரானம் ஜே.கெ யின் எழுத்து,இயக்கம் என்பதால் !

படம் ஆரம்பித்து அரை மணி நெரம் ஆகியிருக்கும் ! கெளிக்கை வரி இலாகாவிலிருந்து அதிகாரிகள் சொதனையிட வந்தனர் ! சொதனை நடந்த்தது ! ஆனால் படம் வெளியிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை !

டிக்கேட் மூலம் லாபம் 1192 /- கிடைத்தது ! ஆனால் கெளிக்கை வர் இலாகா ஏதோ விதிகளைக்காட்டி 1200 /- ரூ அபராதம் பொட்டார்கள் !

ஜெகே யின் படத்தை திரை அரங்கில் வெளியிட்ட பெருமை மிஞ்சியது !

அப்பொது எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் பொருளாலராகா இருந்தவன் தான் இந்த காஸ்யபன்.

Like · Comment · Share