திருப்பூருக்கு சென்று வந்தேன் .....2
"விழிப்பு நடராசன் "
விழிப்பு நடராசன் அவர்கள் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும் ! நானோ ஒரு நிலைதகவலைத்தான் எழுத விருக்கிறென் ! எப்பேற்பட்ட தோழர் !அவர் உடம்பின் திசுக்கள் பூராவும் இயக்கம் இயக்கம் என்றே ஒலிக்கும் !
மிகவும் அமைதியான , சலனமற்ற, உறுதியான,மெலிதான குரல் ! செயலூக்கம் ! எப்பேர்பட்ட ஆளுமை !
பொறியியல்,மருத்துவம்,நிர்வாக இயல் என்று தங்கள்குழந்தைகள் தொழிற்கல்வியில்பட்டம் பெற்று முன்னேர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் ,கிராமத்து கள்ள மடுகளை "பவுண்டில் " அடைப்பது போல நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளீகளில் அடைக்கிறார்களே ! அன்று அப்படியல்ல ! I.I.T போன்றவை உருவான காலம் ! டெல்லி I.I.T அன்று மதிப்பு மிக்க கல்விச்சாலை !
தகுதியின் அடைப்படையில் நடராசன் அங்கு பயின்றார் !
நூற்பாலை, நெசவு ஆகிய இரண்டு துறைகளிலும் M.Tech. சிறப்புப் பட்டம் பெற்றார் ! திருப்பூர் வந்து பின்னலாடை துறையில் முத்திரை பதிக்க போகிறார் என்று கருதினார்கள் ! பின்னலாடையை விட பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அவர் விரும்பிணார் ! அதற்கு காரணம் இருந்தது !
இன்று இருப்பது பொல் ஜனனாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு அன்று உருவாக வில்லை ! சொசலிச வாலிபர் முன்னணீ ( Socialist Youth Front ) என்ற அமைப்புதான் இருந்தது ! மறைந்த தோழர் பி.மொகன்.முன்னாள் எம்.எல் ஏ நன்மாறன்,கருணாகரன், பாலகிருஷ்ணன் என்று இளம்தோழர்கள் அதனைகட்டி வளர்த்தார்கள் 1 அவர்களொடு SYF ல் செயல்பட்டவர் நடராசன் 1
பனியன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை எழுந்தது ! அவர்களுக்கு "பஞ்சப்படி" என்றால் என்னவென்று தெரியாது ! அதனை பற்றி சொல்லி அவர்களை பஞ்சப்படிக்காக போராட செய்தவர்களில் நடராசனும் ஒருவர் ! தெருத்தெருவாக வீதி வீதியாக" பஞ்சப்படி " என்ற நாடகத்தினை எழுதி பிரச்சாரம் நடந்தது ! அவ்ருக்கு உதவியாக ,மணிக்குமார்,ராஜாமணி ஆகியொர் இருந்தனர் !
வீதி நாடகத்தில் நடிக்க தொழில் முறை நடிகை வேண்டும் என்று மதுரை பீபிள்ஸ் த்யெட்டரி பணீயாற்றிகொண்டிருந்த என்னை அணூகீணார் ! எங்கள் குழுவில் நடித்துக்கொண்டிருந்த இருவரை அனுப்பினோம் !
கிட்டத்தட்ட 50 நாட்கள் போராட்டம் ! 50 நாளும் ஒரு நாளுக்கு ஐந்து ஆறு இடங்களில் நாடகம் நடக்கும் ! வெற்றிகரமான போராட்டம் முடிந்தது !
த.மு எ.ச மாநில அளவில் இசைபயிற்சி முகாம் நடத்தியது ! திரைப்பட இசை இயக்குனர் எம்.பி சீனிவாசன் அவர்களும் ,திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள் ! கிட்டத்தட்ட 90பேர் கலந்து கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேறியது ! 90 பெராஈ ஓரே மேடையில் அமர்த்த நடராசனும்,மணிக்குமாரும் செய்த ஏற்பாடு இன்றும் என்னை பிரமிக்க வைக்கிறது !
அதுசரி ! நடராசன் எப்படி விழிப்பு நரடராசன் ஆனார் ! அது பற்றி தனியாக எழுத வேண்டும் ! திருப்பூரில் இருந்து :விழிப்பு " என்ற கலை இலக்கிய பத்திரிகையை மாதந்தோரும் நடத்திக்கோண்டிருந்தார் நடராசன் ! விழிப்பு நடராசனானார் !
Like · Comment · Share
0 comments:
Post a Comment