Friday, April 17, 2015

pan

April 13 at 12:16pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் -----3

"நாமகிரி அம்மையாரைப் பார்த்தேன் "

மார்ச் 19ம் தேதி மாலை 5மணிக்கு குமாரசாமி திருமனமண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்க விருகின்றன ! அங்கு தான் உணவுக்கூடமும் ! தோழர் லெனின் மதிய உணவுக்காக விடுதிக்கு கார் அனுப்பியிருந்தர் ! நானும் முத்துமீனாட்சியும் மண்டபம் செல்ல "லிஃப்ட்" அருகே நின்று கொண்டிருந்தோம் ! கதவு திறந்ததும் என்களை சந்திப்பதற்காக அந்த அம்மையார் வந்தார் ! அவரையும் அழைத்துக்கோண்டு நாங்கள் மண்டபம் சென்றோம் 1

காலம் அவரை மாற்றி இருந்தது ! கொஞ்சம் கருத்து ,உடல் பூசினாற்போல் இருந்தார் நமகிரி அம்மையார் ! எங்கள் ராஜாமணி முகம் மலர ,லேசான வெட்கம் பற்ற "செம்மலர்,செம்மலர் " என்று அழைப்பரே அந்த செம்மலரின் பூர்வாசிரமப்பெயர்தான் நாமகிரி ! சனாதன குடும்பத்தில் பிறந்து இயக்கத்திகாக தன்னை துய்த்துக் கொண்டவர் அவர் !

இயக்கத்தின் பொது நிகழ்ச்சிகளில் கடை போட்டு இயக்க பிரசுரங்களையும், இயக்கம் சார்ந்த பொருட்களையும் விற்கும் ராஜாமணிக்கு உதவியாக செம்மலர் இருந்தார் !

ஆசையாக " சிந்தனைப் பார்க்க வேண்டுமே ? " என்றேன்!

ஒரு மெலிதான புன்னகை மலர "அவன் தேன் நிலவுக்காக அசாம் சென்றிருக்கிறான் "என்றார்! முகத்தில் பெருமிதம்.. உள் மனம் "ராஜாமணி,ராஜாமணி " என்று கதறியது ! "நீ இல்லையே கண்ணா" இதனைப் பார்க்க என்று !

இரண்டு மகன்கள் ! ஒருவர் மூத்த மகன் தோலைக்காட்சியில் சென்னையில் பணியாற்றுகிறார் !

இரண்டாமவர் சிந்தன் இயக்கத்தின் முழுநேர ஊழியராக சென்னையில் இருக்கிறார் ! அவர் துணைவியார் தமிழ் "இந்து" பத்திரிகையில் பணியாற்றுகிறார் !

"அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே? "

"திருப்பூர் என் அரசியல் வாழ்க்கைக்கு தோதாக இருக்கிறது ! நான் இங்கேயே இருக்கிறென் என்கிறார்"என்று அம்மா கூறியதாக சிந்தன் பதிலளித்தார் !

( நாகபுரி வந்ததும் முகனூல் மூலம் சிந்தனுக்கு சிறு விபத்து மூலம் காலில் அடிபட்டிருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன் ! தொடர்பு கொண்டதில் "பயப்பட வேண்டாம். ஒருமாத்திதில் நடக்க முடியுமென்றும்,அம்மா இங்கு வந்துதனக்கு உதவியாக இருப்பதாகவும் சிந்தன் கூறி

0 comments: