Friday, April 17, 2015

ashyapan

April 10 at 3:07pm · 

ஜெயகாந்தன் அவர்களும் ,

மதுரை எல்.ஐ.சி ஊழியர்களும் .....!!!

1965ம் ஆண்டில் "உன்னை போல் ஒருவன்" என்ற படம் வெளிவந்தது ! ஜெயகந்தன் அவர்கள் இயக்கம். கந்திமதி ,பிரபாகர், வீராசாமி ஆகியொர் நடித்தனர் ! வீணை கலைஞர்சிட்டி பாபு இசை அமைப்பு ! பாடல்கள் கூடாது என்று ஜெ .கெ அறிவித்து விட்டார் !

இந்தப்படம் திரை அரங்குகள் மூலம் வந்தால் தமிழ் திரப்பட துறையை புரட்டிப் போடும் என்பது அறிந்த ஓன்று ! ஆகவே இதனை வெளியிடாமல் இருக்க கோலிவூட் உள்ளே ஒரு குழு வேலை செய்தது ! அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் "கொக்கி" பயலுகளை கோடம்பாக்கத்துக்குள்ள விடக்கூடாது " என்று லட்சிய நடிகர் அறிவித்திருந்தார் 1

ஜெ.கெ அவர்களின் சொந்த தயாரிப்பு ! தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தயரித்தார்!

மதுரையில் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் சிலர் இந்த படத்தை வேலியிட விரும்பினர் ! மதுரை செண்ட்றல் தியெட்டரில் காலை 10 மணீக்காட்சிக்கு எற்பாடு செய்தனர்! எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி நடக்க காரியங்கள் நடந்தன ! டிக்கட் விற்பனை ஆயிற்று !

இதற்கிடையே இந்த படத்தை ஒருகாட்சி மூலம் வரும் வருவாயில் கணிசமான லாபத்தை கம்யுனிஸ்கட்சிக்கு கொடுக்கப் பொகிறார்கள் என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் !

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை செண்ட்றல் த்யெட்டெரில் கூட்டம் கட்டி ஏறியது! காரானம் ஜே.கெ யின் எழுத்து,இயக்கம் என்பதால் !

படம் ஆரம்பித்து அரை மணி நெரம் ஆகியிருக்கும் ! கெளிக்கை வரி இலாகாவிலிருந்து அதிகாரிகள் சொதனையிட வந்தனர் ! சொதனை நடந்த்தது ! ஆனால் படம் வெளியிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை !

டிக்கேட் மூலம் லாபம் 1192 /- கிடைத்தது ! ஆனால் கெளிக்கை வர் இலாகா ஏதோ விதிகளைக்காட்டி 1200 /- ரூ அபராதம் பொட்டார்கள் !

ஜெகே யின் படத்தை திரை அரங்கில் வெளியிட்ட பெருமை மிஞ்சியது !

அப்பொது எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் பொருளாலராகா இருந்தவன் தான் இந்த காஸ்யபன்.

Like · Comment · Share

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலைப் பூவில் சந்திக்கின்றேன் ஐயா
நன்றி