ஐ.நா,மனித உரிமை,அமெரிக்கா, இலங்கை ......
தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று கருணாநிதிவகையறா கேட்டுக்கொண்டதால் இந்திய அரசு ஆதரிக்க நிறைவேறியுள்ளது. இதனை வரவேற்றுப் பேசியுள்ள விஜயகாந்த் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானத்தில் உள்ள முக்கியமான விஷயம், அமல் படுத்த வில்லையென்றால் இலங்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கமுடியும். எதுவும் முடியாது. மனித உரிமை என்று கூறிக்கொண்டு ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் நிலை.ஆதரிக்க மறுத்ததற்கும் இது தான் காரணம்.தற்போது தீர்மானம் திருத்தத்தொடு நிறைவேறியுள்ளது. எந்த நடவடிக்கயும் இலங்கை அரசின் சம்மதத்தோடு எடுக்கப்படவேண்டும் இலங்கை என்று சம்மதிக்க? என்று நடவடிக்கை எடுக்க?.விஜயகாந்த் கூறியுள்ளது இது தான்.
ஐ.நா வைப்பொறுத்தவரை இன்று வரை மூன்று விஷயங்கள் இத்தனை வருட காலங்களாக மூடிவு செய்யப்படவில்லை.
1. மனித உரிமை என்றால் என்ன?
பிறந்த மனிதனுக்கு மூன்று அத்தியாவசியத்தேவைகள் உண்டு. உணவு,உடை,இருப்பிடம்.அதன் பிறகு வருவது,மற்றவை.பசியில் துடிப்பவனுக்கு, உணவுக்கு அடுத்துதான் பெச்சுரிமை உட்பட சகல உரிமைகளும் என்று சீணா, ரஷ்யா, ஆகியவை கூறுகின்றன, அமெரிக்கா இதனை ஏற்கவில்லை. அதனால் ஐ.நாவும் ஏற்கவில்லை.
2.ஆக்ரமிப்பு என்றால் என்ன?
ஒரு நாட்டின் அரசியல்,சமூக, பண்பாட்டு, வாழ்க்கையில் தலையிட்டு அதனை மாற்ற முயல்வது ஆக்ரமிப்பாகும். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அமெரிக்கா வியட்நாமிலோ, கொரியாவிலோ தலையிட்டிருக்க முடியாது. அதன் காரணமாகவே அமெரிக்கா எற்க மறுக்கிறது. ஐ.நாவும் ஏற்கவில்லை
3.வேலை வாய்ப்பு என்றால் என்ன?
ஒரு நாட்டின்மக்களுக்கு உழைப்பதற்கான உரிமை அளிக்கப்படவேண்டும். மக்கல் அனைவரும் வேலை பெற்று வாழ உரிமை கொடுக்க வேண்டும் .சீனா, ரஷ்யா இதனை ஏற்கிறது. எல்லாருக்கும் வேலை என்பது கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் தொண்ணுறு சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றாலே பொதும் .ஒரு பத்து சதவீதம் வேலையின்றி இருந்தால் தான் முதலாளிமார்கள் பேரம் பெச முடியும் என்று அமெரிக்கா கூறி ஏற்கமறுக்கிறது. ஐநாவும் எற்கவில்லை
தீர்மானம் நிறைவேறியுள்ளது. வேற்றி விழாவுக்கு மைக்,குழல் விளக்கு என்று அச்சாரம் கொடுத்து லாவணி ஆரம்பித்து விடுவார்கள். தமிழா! கூட்டத்திற்குப் போ! பேச்சைகேள் !
. உன் கடமையைச்செய்!
8 comments:
தீர்மானம் நிறைவேறியதுக்கே கொண்டாட்டங்கள் களைகட்டிவிட்டன... விஜயகாந்தின் கேள்வி சரிதானே...
தீர்மானங்கள் எல்லாம் தீர்வை கொண்டு வருமா?
குமார் அவர்களே ! எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பன்ருட்டிராமசந்திரன் இருந்தார்.ராஜீவ் தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தயில் முக்கிய பங்கு வகித்தார்.அவருக்கு உள் குட்டு தெரியும்.அவர் எடுத்துவிட விஜயகாந்த் அடித்து விடுகிறார்.---காஸ்யபன்
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
நல்ல கட்டுரை.
ஒரு தனிப்பட்ட நாடு தனிப்பட்ட முறையில் தலையிட முடியாதே தவிர, ஐநா என்ற போர்வையில் தலையிட முடியும். அப்படித்தான் நடக்கிறது.
ஐநா சார்பில் இலங்கை அரசு மீது sanctions கொண்டு வரமுடியும். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். என்ன நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானத்தில் எப்படிச் சொல்ல முடியும்?
ஆனால் நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்குத் துணிச்சல் கிடையாது - இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமரைக் கொன்ற அந்த நாளிலேயே இலங்கையில் இந்தியா அடியெடுத்து வைக்கவில்லை. தமிழனாவது சிங்களனாவது என்று இறங்கியிருக்கக் கூடிய வாய்ப்பைத் தவற விட்டது.
இதுவே இலங்கையில் ஹிந்தி பேசுவோராக இருந்தால் இந்தியாவுக்கு மூத்திரத்தில் கூடத் துணிச்சல் வரும். என்ன செய்வது? தமிழ்நாடு தனியாகக் குரல் கொடுக்க முடியாது - இந்திய சட்டங்களுக்குட்பட்டுத் தான் நடக்க வேண்டும். எனினும் ஐநா தீர்மானம் நல்ல துவக்கம்.
இந்தியத் தமிழரை விடுங்கள். இலங்கைத் தமிழரைப் பார்ப்போம். இலங்கைத் தமிழரும் 'விடுதலைப் புலிகள்' நிழலிலிருந்து - தீவிரவாதிகள் என்ற பட்டத்தைத் துறந்து - வெளிவர வேண்டும். இன்னும் பிரபாகரன் என்று கொடி பிடித்துக் கொண்டிருப்பவர்கள் மனம் மாற வேண்டும். ஒரு இந்தியப் பிரதமரைக் கொன்ற கறை அத்தனை எளிதில் அழியுமா? உலக நாடுகளின் ஆதரவு தேவையென்றால் 'தீவிரவாத' துகிலுரிய வேண்டும். செய்வார்கள் என்றே தோன்றுகிறது.
ஐநா தீர்மானம் காலம் கடந்த, நல்ல துவக்கம். இதைப் பயன்படுத்திக் கொள்வது இந்திய இலங்கை உலக அரசுகள் கையில் இருக்கிறது. இத்தனை நாள் இல்லாத ஒரு கருவி இப்போது கிடைத்திருக்கிறது. வரவேற்போம்.
அருமையான விளக்கம் அய்யா . உண்மையில் தெரியாத விசயங்கள். மனித உரிமை மீறல் இருக்கட்டும். அங்கே தமிழினம் உயிர் வாழவே உரிமை இல்லையே . சோனியா என்ற இத்தாலி விதவைப் பெண்ணின் கொடூர பழிவாங்கல் தான் இந்த இனப் பேரழிப்பு என்று உங்களுக்குத் தெரியவில்லையா? ஐ.நா. தீர்மானம் இருக்கட்டும் . உங்கள் ரஷ்யாவும், சீனாவும் ஏன் இலங்கைக்கு ஆதரவாய் இருக்கின்றன என்று சொல்லுங்கள். அழிக்கப்படுவது தமிழினம் அன்றி வேறெந்த இனமாக இருந்தாலும் இப்படி வேடிக்கை பார்ப்பார்களா, உங்கள் தோழர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள்?
சிவ குமரன் அவர்களே! கற்ற பாடமும் நல்லிணக்க குழுவும் (L.L.R.C) அளித்த அறிக்கை என்ன கூறுகிறது?,சர்வதெச சட்டங்களை புலிகள் மீறியுள்ளனர். மக்களை கேடயமாக பயன் படுத்தியுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதக் கிடங்குகள் வைத்துள்ளனர்.மருத்துவமனைகளிலிருந்து தோளில் இருந்து எரியும் கணைகள்மூலம்தாக்கினர். சிறுவர்களை பயன் படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். மக்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்ப முயலும் பொது அவர்களைக் கொன்றனர்.(வலையில் இந்த அறிக்கை உள்ளது) இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கோருகிறது. சீனா எதிர்க்கிறது. ரஷ்யா எதிர்க்கிறது. அன்பரே! When argument fails abuse என்பார்கள்.நீங்கள் என்னைதிட்டியதற்காக நான் கோபப் படமாட்டேன். Ignorence is bliss. என்ன செய்ய ? ---காஸ்யபன்
அய்யா. நீங்களே சொல்லிவிட்டீர்கள் அறியாமை என்று. இருக்கட்டும். தயவு செய்து என் வாக்குவாதத்தை நான் தங்களை திட்டுவதாக நினைக்காதீர்கள். நானும் தங்களைப் போல் சிவப்புச் சட்டைக்காரனாக இருந்தவன் தான். 17 வயதில் கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினரானேன். திரு.A .M .கோபு அவர்கள் முன்னிலையில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். 15 வருடங்கள் என் சித்தப்பா சுந்தர பாரதியுடன் பல பொதுவுடைமைக் கவியரங்கங்களில் பங்கேற்றிருக்கிறேன். என் சித்தப்பாவிடம் இப்படித்தான் விவாதித்திருக்கிறேன். நான் விமர்சிப்பது நான் இருந்த கட்சியை, தங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். தங்களை திட்டுகிறேன் என்று சொல்கிறீர்கள் அதற்கு எனக்கு வயதோ, அருகதையோ இல்லை. மன்னிக்கவும்
Post a Comment