Wednesday, October 31, 2012

"ஊழல் சாக்கடையில் உழலும் பன்றிகள்"........!!!





ஊழலை செய்வதற்கு அச்சாரம்வாங்குவது பா.ஜ.க..அதற்கான உத்திரவுகளில் கையெழுத்து போடுவது பா.ஜ.க. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ். இதற்கான ஆதாரங்கள் ஏராளம். ஒரு சாம்பிள் இதோ:



கோதாவரி படுகையில் நிலத்தடி வாயு ஏராளமாகக் கிடைக்கிறது. இதனைமக்கள்பயன் பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரம் செய்தவர்கள் நம்மூர் முதலாளிகள். யாருக்குக் கொடுப்பது?

அப்போது வாஜ்பாய் தலைமையில் தேசீய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது .அவருக்கு மிகவும் வேண்டியவர் ஆலோசகர் பிரிஜீஷ் மிஸ்ரா.இவருடைய தந்தை டி.பி. மிஸ்ரா. மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர்.(இவரை தகர ஊழல் மிஸ்ரா என்பார்கள்) கார்கில் தகரறின் போது அதனை தடுக்க விரும்பினர்

ரிலையன்ஸ் கம்பெனி முதலளி. அவர்களின் பெட்றோல் சுத்திகரிப்பு .ஆலை பாகிஸ்தான் எள்லையோரத்தில் பிகானீர் மாவட்டத்தில் உள்ளது. பெரிய யுத்தம் வந்தல் 15000 கோடி ஆலை சிதறிவிடும் அதனால் அவர் வாஜ்பாயை சந்தித்து சமாதானமாக பொகும்படி சொன்னார் முகேஷ் அம்பானியின் தனி விமானத்தில்மிஸ்ரா பாகிஸ்தான் போய் சமாதானம் பேசினார்.



இந்திய யார் கூட சண்டை போடவேண்டும்,எப்போது சமாதனம் செய்ய வேண்டும் என்பதை

அரசு எடுப்பதில்லை. முக்கிய முதலாளிகள் எடுக்கிறார்கள்.



கோதவரி படுகை வாயுவை தெசபக்தர் முகேஷ் அம்பானியின் ரிலையன் வாயு கம்பெனிக்கு கொடுக்க வஜ்பாய் விரும்பினார்.

அம்பானியொடு 2000 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. வாயு ஒருயூனிட்டுக்கு 2.5 டலர் என்று நிர்ணயம் ஆகியது பா.ஜ.க.போய் மனமோகன் சின் வந்தார். ரிலயன்ஸ் சண்டித்தனம்செய்தது. யூனிட் 4-25 டாலர் என்று கொடுத்தார்கள்.இது2007 ம் ஆண்டு நடந்தது. இதன் மூலம்ரிலையன்ஸ் 43000 கோடி லாபம் அடைந்தது.இப்போது மீண்டும்கூடுதல் விலை கேட்கிறது ரிலையன்ஸ். ஜெயபால்ரெட்டி மறுத்தார். அவர் மாற்றப்பட்டார்.



வெள்ளைப் பன்றி, கட்டைக்கால் என்று பார்க்கவேண்டியதில்லை. பன்றி பன்றி தான்.

Sunday, October 28, 2012

இந்தி திரைப்படம் ---அறிமுகம்


"shudra - the  rising "


தலித் மக்கள் இந்த நாட்டில் படும் பாடுகளை சொல்லுகிறது  இந்த படம்  .சாதிய அமைப்பை நம்பி நாசமாகிக் கொண்டிருக்கும் மக்களை நோக்கி  பல
கேள்விகளைமுன்வக்கவும் செய்கிறது.

கிராமத்தில் தாலித்களை எழுந்து நில்லுங்கள் என்று அழைக்கிறது  .உங்கள் மனைவியையும்,மகளையும் பெண்டாளத் துணியும் நிலப்பிரபுக்களுக்கு 
எதிராக அணிவகுங்கள் என்று கூறுகிறது.சாதியின் பெயரால் தங்களுக்கு எதிராக
 நடக்கும் கொடுமைகளை கண்டுஇனியும் பொறுத்திருக்கமாட்டோம் என்று 
நிர்க்கதியான அந்தமக்கள் எதிர்க்குரல்கொடுக்க தூண்டுகிறது.

ஒரு முதுமை வயது தலித் கிழவன் தாகத்திற்கு தண்ணீர்     கிடைக்காமல்  செத்தே போகிறான்.  

ஐந்து  வயது தலித் சிறுமி "ஓம்  நம சிவாய " என்று பாடியதற்காக தண்டிக்கப்படுகிறாள்..  
     ..
ஒரு கர்ப்பிணி பெண் மேல்சாதி நிலப்பிரபுவால் படுக்கைக்கு அழை க்கப்படுகிறாள்.

இந்தப்படம் தலித்துகள் மீது நடந்த கொடுமைகளை சொல்வதோடு அது இன்றும் தொடர்வதை குறிப்பிடுகிறது .

சாதி மனிதத்தை  விட மேலானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதீய முறைமை எப்படி உருவானது? சாதியை இன்னும் கட்டியழும் குருடர்களை அதிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறது. 

இதயத்தை நொறுக்கிவிடும் படமாகுமிது

வலியும்,வேதனையும் மனதை ஆழமாக பாதிக்கும் படமாகும். "தீண்டத்தகாதவர்கள்" என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக  இழைக்கப்படும் 
குற்றங்கள் பற்றிய ஆவணமாகும் இந்தப் படம்.
துயரத்தில் முடிந்தாலும், கதை சொல்லும் பாங்கும், பின்புலத்தை  சித்தரித்திருப்பதும்  நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

நடிகர்கள் அற்புதமாக நடித்துள்ளனர்..சூழ்நிலையை சித்தரித்துள்ளது , கலை ,ஒப்பனை. படம் பிடித்துள்ள விதம் எல்லாமே முதல் தரம்.அர்த்தமுள்ள ,இதயத்தை நெருடும் இசை ...
  
முழுக்க முழுக்க வேதனையசித்தரிக்கிறது  .மக்கள் எழுச்சி யடையும் காட்சிகள் இன்னும் கூடுதலாக காட்சிப் படுத்தி 
இருக்கலாம்.இயக்குனர்  அவர்களின் அவலத்தை சித்தரிபதற்கு முக்கியத்துவம் 
கொடுத்துள்ளார்..பல குட்டி சம்பவங்களின் கோர்வையாக உள்ள கதையாகிவிட்டது.

"சூத்திரன் -எழுச்சி " காலம் காலமாக இந்தியாவில் இருந்து வரும்  சாதீய முறைமையை அழித்தொழிக்க  எடுத்த  முயற்சி 

 ..இது பற்றி உங்களுக்கு மேலும் தெளிவு பெற 
இந்தப் படத்தை பாருங்கள்..

(நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா )


பி.கு : (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஒருவரிடம்  இந்தபடம் பற்றி  குறிப்பிட்டேன் .அவர்கள் முலம் sub title
போட்டு தமிழகத்தில்  திரையிடலாம் .வாழ்த்துக்களுடன்.) 



    



Thursday, October 25, 2012

பா.ஜ.க.தலைவர் "கட்காரி" நல்லவர்..........!!!





பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் கட்காரி. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவர். அவர்களால் பா.ஜ.கவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்.அத்வானி சேக்காளி என்று கூறமுடியாது.சமீப காலமாக நரெந்திர மோடியை ஆதரித்து வருகிறார்.



வசதியானவர். பா.ஜ.க-சிவசேனை கூட்டாட்சியில் பொதுப்பணித்துறை அமைசராக இருந்தார். அது தேன்கூடு. ஆனாலும் கடகாரி புறங்கையை நக்காமல் இருந்தார்



அவர் வீட்டில் மூன்று கார்கள் உண்டு.ஒன்று அவருக்கு. குடும்பத்தினர் பயன்பாட்டுக்காக ஒன்று.விருந்தினர்கள் வசதிக்காக ஒன்று.



ஒரு நாள் அவர் பயன்படுத்தும் காரின் பின்சீட்டில் பத்து வயது சிறுமியின் சடலம் கண்டெடு க்கப்பட்டது.அந்தச் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒரு வருடமாக!



பாவம்! அப்பாவிமனுஷன் ! அவர்மிது ஊழல் கூற்றச்சாட்டுகள் அவருடைய கமபெனியான "பூர்த்தி".

கரும்பு ஆலைகள். மின் உற்பத்தி என்று மக்கள் தோண்டாற்றி வருகிறது. அதற்கு பல கம்பெனிகள் அவருக்கு பண உதவி செய்துள்ளன. ஏகப்பட்ட கம்பெனிகள்- எல்லாமே அவருக்கு வேண்டியவர்கள் தான். சில கம்பெனிகளின் இயக்குனர் களின் பெயர்களையும் விலாசத்தையும் விசாரித்தபோது அப்படி யாருமே இல்லையென்று கூறுகிறார்கள். அந்தேரியில் உள்ள சேரிப்பகுதியில் ஒரு கம்பெனி இயக்குனர் முகவரி உள்ளது .அந்த குடிசை பூட்டப்பட்டுள்ள படத்தை "டைம்ஸ் ஆஃப் இந்தியா "போட்டுள்ளது.



இன்னும் மூன்று கமபெனியின் இயக்குனராக இருப்பவர் அவருடைய காரை ஒட்டும் டிரைவர். அவருடைய வீடு -கோடிகணக்கில் மதிப்புப்பெறும் வீடு - நாகபுரியில் உள்ளது.. தன் டிரைவரின் மீது கட்காரிக்கு பாசம் அதிகம்.



டிரைவர் நல்லவர்! வல்லவர்! எல்லம் தெரிந்தவர்! எல்லாம்--எல்ல்ல்ல்லாம் தெரிந்தவர்!





நம்ம காரைக்குடி ஆடிட்டர் ராஜா,தஞ்சாவூர் கணெசன், நாகர்கோவில் ராமகோபாலன் ஆகியோருக்கும் தெரியும் கட்காரி நல்லவர் என்பது. . .வர் ......!!!

Sunday, October 21, 2012

தமிழா! தமிழா ! என்ன சொல்லப்போகிறாய்?........


இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து மொரிஷியஸ் தீவில் வாழ்பவர் அந்தப் தலித் பெண். மேல் படிப்பிற்காக டெல்லி பல்கலை  கழகத்தில் சேர்ந்தார் சக தமிழ் மாணவர்களோடு இணைந்து படித்தார். சில தமிழ்மாணவர்கள் ஜவகர்லால் பல்கலையில்படிக்கிறார்கள்

ஒரு நாள் தன சகமானவர்களோடு jnu . விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கியுள்ள அந்த அறை  மாணவர்கள் அவரை கற்பழித்துள்ளனர் .

கற்பழித்த மாணவர்கள் தமிழ்  நாட்டை சேர்ந்தவர்கள். . பெரும் புள்ளிகளின் வாரிசுகள்.பாதிக்கப் பட்ட பெண் நிர்கதியாக நிற்கிறார்.

அந்தப் பெண்ணிற்கு நியாயம் கேட்டு போராடுகிறார்கள்." தமிழன் கற்பழித்தால் அது குற்றமாகாதா? இலங்கை தமிழருக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் என் வாய் மூடி இருக்கிறார்கள்?" டெல்லியில் மாணவர்கள் கேட்கிறார்கள்.



தலித்துகளுக்ககப் போராடும் ரவிசந்திர பத்ரன் மின்  அஞ்சல் மூலம் 
தமிழகத் தலைவர்களிடம் நியாயம் கேட்டு வருகிறார்.  

தமிழா நீ என்ன சொல்லப் போகிறாய் ....?



Wednesday, October 17, 2012

 தோழர்  அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்....!!


தோழர் அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்.........!!!








1923ம் ஆண்டு பிறந்த அச்சுதானந்தனுக்கு 89 வயதாகிறது. தந்தை தையல் தொழிலாளி. சிறுவயதிலேயே தாயை இழ்ந்துவிட்டார்.11 வயதில் தந்தையும் காலமாகிவிட்டார்.



கயிறு திரிக்கும் ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்கப் பணிகளில் கலந்து கொண்டு தொழிற்சங்க தலைவராக மாறினார்.



சிறுவயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் பல்வேறு பெராட்டங்களில் கலந்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்.1940ல் கம்யூனிஸ்டு கட்சியில் செர்ந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு மேல் தலமறைவு வாழ்க்கயில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றவர். .



கேரள அரசியலில் மிகவும் சர்ச்சைகுரிய தலவர்களில் ஒருவர். கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் உருப்பினராக இருந்தவர்.



அணு உலையை எதிர்ப்பவர். சமீபத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போரட்டத்திற்கு தன் ஆதரவை தெரிவிக்க கூடங்குளம் நோக்கி பயணமானார்.



மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை அதனை ஏற்கவில்லை.சமீபத்தில் கட்சியின் மத்தியகுழு கூடி விவாதித்தது.அச்சுதாஅனந்தன் செய்தது தவறு. அவர் கேரள மார்க்சிஸ்ட் கட்சியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.



இரண்டு நாளாக நடந்த கேரள மாநில குழுக் கூட்டத்தில் அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்டார்.



முன்னாள்முதலமைச்சர். மூத்த தோழர். ஆனாலும் தவறு தவறுதான் என்று கண்டிக்கும் வல்லமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது.



அதன ஏற்று அச்சுதானந்தன் கட்சிக்கு அடிபணிந்தார் !



அவரை அவருடைய மனவளத்தை ஆதரிக்கிறேன். !!!















































Sunday, October 14, 2012

முற்போக்கு எழுத்தாளர் , கலஞர்களும

கூடங்குளமும்..............!

 போராடும் கூடங்குளம்  மக்கள் மீது மத்திய  மாநில  அரசுகள்  தொடுக்கும்  தாக்குதலை   கண்டித்து  அவர்களுக்கான தங்கள் ஆதரவினை கூறிட த.மு.எ.க. சங்க தலைவர்கள் சென்றனர். 425 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் அந்தப் பந்தலில் உதயகுமார்,முகிலன், புஷ்பராயன் ஆகியோரை சந்தித்து வந்தனர்.

1978மாண்டு ஜோதிபாசு தலைமையில் இடதுமுன்னணி அரசு வந்த பொது அங்கு மின்சாரம் கடுமையான பற்றக்குறையிலிருந்தது.இடதுமுன்னணி அரசை "மின் பட்டினி " போட்டு வாட்ட மத்திய அரசு சகல  சாகச முயற்சியையும் செய்தது.பக்றேஷ்வர் மின்திட்டத்தை அனுமதிக்க மறுத்தது. ஒருபுறம் "மின் பசி"யில் மக்கள்.மற்றொரு பக்கம் அணுமின் நிலையம் அமையுங்கள் என்று மத்திய அரசின் பிரச்சாரம்.
அணுமின் நிலையம்வேண்டாம் .என்பதை மக்களுக்குடுத்துச்சொல்ல  இடது   முன்னணி எழுத்தாளர்கள் கலைஞர்களை அணுகியது.குட்டி நாடகங்கள்,கருத்தரங்கங்கள் , கவியரங்கங்கள், பொம்மலாட்டம் என்று கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தனர்  ."ஹிராஷிமா "  என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி  இதில புகழ்பெற்றதாகும்.அணுகுண்டு 
போட்டதால் ஏற்பட்ட,பாதிப்பு, தோல்  உரிந்து மக்கள்  தண்ணீருக்காக  
ஊர்ந்து  செல்லும் கட்சியினை பொம்மலாட்ட த்தில்  பார்க்கும் பொது இதயம்    விம்மும். உள் மனம் அலறும் (இந்த நிகழ்ச்சியை மே .வங்கத் திலோருமுரையும்,சண்டிகரில் ஒரு முறையும் பார்த்தேன்.)

மத்திய அரசின் உதவியிலாமலேயே பக்றேஷ்வர் திட்டத்தை 
மக்களிடமிருந்து பணம் வசூலித்து உருவாக்க முடிவாகியது.பணம் 
கொடுக்கமுடியாத ஏழை எளியவர்    ரத்ததானம் செய்தனர் அதனை விற்று திட்டத்திற்கு பணம்திரட்டப்பட்டது.1990 ஆண்டிலிருந்து  பக்றேஷ்வரில் உற்பத்தி  நடக்கிறது.இன்று மின் உபரி மாநிலங்களில் மீ.வங்கமும் ஒன்று.

முற்போக்காளர்களால் கேரளாவிலும், திரிபுராவிலும் அணு உலை வராமல் தடுக்க முடிந்தது.

1936ம ஆண்டு நேருவும்,நம்புதிரி பாடும்,பிறேம சந்தும்,குருதேவரும், ஆரம்பித்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வாரிசுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்.


தலைக்கும் தாடிக்கும் ஒரே சீயக்காயைத்தான்    அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  
"ஷாம்பு" பயன் படுத்தாதவர்கள்..

கூடன்குளம் கடற்கரை மணலில் அமர த.மு.எ.க.சவுக்கும் உரிமையும்  பாத்தியதையும் உண்டு. 
  




Thursday, October 11, 2012

அரியாணாவில் நடக்கும் அக்கிரமம்..............!










பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரியாணாவில் அதிகரித்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் பாலியல்பலத்காரம் 12 நடந்துள்ளது. அதில் பத்துக்கும்மேற்பட்டவை சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்டவை.அந்தப் பெண்கள் "பச்சாவோ! பச்சாவோ!" என்று கதறியிருக்கிறார்கள். அவர்கள்" காப்பற்று!காப்பாற்று!" என்று தமிழில் கதறவில்லை என்பதால் நம்மூர் தலித்தலைவர்களான தொல்,கிரு ஷ், ஆகியொர் வாயத்திறக்கவில்லை.இந்தக் கோள்ளையில் தொல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்



வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் இது எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறிவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மார்க்சிஸ்டுகளின் சதிஎன்றார்.இவர்கள் எதிர்கட்சி என்றார்கள்.





அரியாணாவில் ஆண்- பெண் விகிதம் 1000க்கு 877 என்று உள்ளது. பெண்சிசுக் கொலை என்பது அதிகம் என்பதை இது சுட்டுகிறது.இதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான பாலீயல் வன்முறை

கூடுதலாக நடக்கிறது.





இரண்டு நாட்களுக்கு முனபு சோனியா அம்மையார் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைசந்தித் து ஆறுதல் கூறி.யுள்ளார்.அவருடன் முதல்வர் ஹூடாவும் சென்றுள்ளார்.(அடுத்த மாதம் அங்கு தேர்தல் நடக்கிறது)



அரியாணாவில் மெல்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அனியாயத்துக்கு அதிகம். அவர்களுடைய பஞ்சாயத்து தீர்ப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பஞ்சாயத்து ஏற்காத திருமணங்கள் செல்லாது. குடும்பத்தின் "மானம்"என்று சொல்லி மரண தண்டனை விதித்து கோலைசெய்ய உத்திர விடுவார்கள்.அதனை நிறைவேற்றவும் செய்வார்கள்.





இப்பொது புதிதாக ஒரு கோரிக்கை வத்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரன பாலியல் வன்முறையை தடுக்க திருமணச்சட்டத்தை திருத்த வேண்டும்.பெண்களின்,ஆண்களின் திருமண வயதை குறைக்கவேண்டும்.கிட்டத்தட்ட குழந்தைத் திருமணத்தை சட்ட பூர்வ மாக்க வேண்டும் என்கிறார்கள்.



சோனியாவோடு முதலமைச்சர் சென்றார். அவரோடு மத்திய அமைச்சர் ராதா ஸலூஜாவும் சென்றார். மானில அமைச்சர் சிங் சென்றார். அவர்தான் குடும்ப நலத்துறை அமைச்சர். திருமன வயதை குறைக்கவேண்டும் என்று அவரும் கூறியிருக்கிறர்.



தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது?



ஒரு சம்பவத்தில் நாங்குபேர் பலாத்காரத்திலீடுபட அதனை ஐந்தாமவர் வீடியோ காட்சியாக எடுத்துள்ளார்.



மற்றொரு சம்பவத்தில் அந்தப் பெண் தப்பி ஓடிவிடாதபடி ஒரு போலீஸ் காரர் உதவியிருக்கிறார்.



தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குள் புகுந்து பெண்கள அள்ளிச் சென்று நடு ரோட்டில்-----



கேக்க ஆளில்லைல!

சாவுங்க....!

Monday, October 08, 2012

பொன் மலையும் அந்த பாரத புத்திரர்களூம்......!!!






"சாம்பல் தேசம்" வலைப்பூவில் "பாகிஸ்தான் செல்லும் ரயில்" என்ற நாவல் பற்றி எழுதி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் எழுதிய இந்த நாவல் எழுதப்பட்ட காலம் இந்திய விடுதலை.மதக்கலவரம் ஆகியவை நடந்த மிகவும்குழப்பமான காலமாகும்.இதுபற்றிய சில வரலாற்றுத்தகவலை பரிமாறிக் கொள்ள விரும்பினேன். நண்பர்கள் அதன பிண்ணுட்டமாக பொடாமல்,ஒரு தனி இடுகையாக எழுதுங்கள் என்று ஆலோசனை கூறினர்.



1946ம் ஆண்டு இறுதியில் ஆங்காங்கே மதவெறியர்களின் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது .வடமெற்கு எல்லை மாகாணம்,ராவல்பிண்டி,கிழக்குபஞ்சாப் ஆகிய இடங்களில் இஸ்லாமியர் அல்லதாவர்கள் இருக்கமுடியாது என்ற நிலை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் நிலமை மிகவும் மோசமாகி இந்தியப்பகுதியிலும் அதன்பாதிப்பு வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கில் இரண்டு பகுதியிலும் மக்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறினர். பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்.து பாகிஸ்தானுக்கும் ரயில் போக்கு வரத்து நின்றுவிட்டது.ரயில்தொழிலாளர்களுக்கு அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை. இது இரண்டு பக்கமும் நடந்தது. கால்நடையாக கலவரம் நடக்கும் பகுதிகள் வழியாக வரவேண்டியதாயிற்று. வழியில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் .,கற்பழிக்கப்பட்டவர்கள் ,அனாதையான குழந்தைகள் நிலை சொல்லும் தரமன்று .



இடக்கால அரசு இது பற்றி யோசித்தது. இரண்டு பக்கமும் உள்ளமக்கள் புலம்பெயர ரயில் பொக்குவரத்தை சீர்செய்ய முடிவாகியது.அதேசமயம் இஞ்சின் ஒட் ட கரி அள்ளிப்போட ,கார்டுகள், பாயிண்ட்ஸ் மென் என்று வேண்டுமே? ம.பி,உ.பி,பஞ்சாப்,ராஜஸ்தான் பகுதி ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் கருத்த ,ஒடிசலான, நீண்ட நேற்றியைக் கொண்ட தென் இந்தியர்களை கொண்டு ஓட்ட முடிவெடுக்கப் பட்டது. நேரு இதுபற்றி செயலாற்றும் பொறுப்பை வி.வி.கிரி அவர்களிடம் கொடுத்தார். A.I.T.U.C யோடு நெருக்கமான தொடர்பு கொண்ட கிரி அவருடைய நண்பரான தோழர் அனந்தன் நம்பியரை உதவிக்கு அழைத்தார்.



திருச்சி பொன்மலை யில் ரயில் வேதோழிலலர்களின் அமைப்பின் தலவராக அப்பொது நம்பியார் இருந்தார்..பொன்மலை ஒர்க்ஷாப்பில் தொழிலாளர் களை அழைத்து கூட்டம் நடத்தினார்.நிலமையை அவர்களிடம் விளக்கினார். " தோழர்களே! இந்த தெசமே உங்களை பார்க்கிறது. ஆயிரக்கனக்கான நம்சகோதரர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்! . அதெசமயம் உதவச்செல்லும் உங்களுக்கும் ஆபத்த இருக்கிறது. வெறிபிடித்த கூட்டம் இரண்டு பக்கமுமுள்ளது. அவர்களிட மிருந்து உங்களை காப்பாற்ற அரசு எந்த உத்திர வாதமும் தர தயங்குகிறது.தோழர்களே முடிவு உங்களுடையது" என்றார் நம்பியார்.



அந்தக் கூட்டத்தின் கனத்தை மோனத்தை நாராயண சாமி நாயுடு என்ற தொழிலாளி கலைத்தார்

தோ ழரே! நான் தயர்ர்" என்றார். மொத்தம்முப்பது பேர் வந்தார்கள்



கருத்த அந்த தமிழக தொழிலாளர்கள் அன்று செய்த தொண்டு வரலாற்றின் இடுக்குகளில் தேடிப்பார்த்தால் தான் தேரியும். .



பி.கு. இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கு முன்னால் திருச்சி தோழர் எட்வின் அவர்களை தொடர்பு கொண்டேன். நினவில் எழுதுவதால் நாராயண சாமி நாயுடு என்ற பெயரை அவரும் உறுதிப் படுத்தினார்.மற்றவர்கள் பெயர் தெரியவில்லை..திருச்சி அன்பர்கள் பொன்மலையில் உள்ளD.R.E.Uசங்கத்தை அணுகிணால் அந்த பாரத புத்திரர்களின் வரலாற்றுப்பணி தெரியவரும்.



இன்றும் திருச்சியை கடக்கும் போது "பொன்மலை" ரயில் பலகையைப் பார்க்கும்போது என்னையறியாமல் இருகரம் கூப்புவேன்.

Thursday, October 04, 2012

(சிறுகதையல்ல)

எது போலி .....?



சம்முக சுந்தரம் மடிக்கணினியில் அளைந்து கொண்டிருந்தான். ஒருவருடத்திற்கு மேல் இருக்கும். சிகாகோவிலிருந்து ராசு, நியுசிலாந்தி லிருந்து கோபால்,கத்தாரிலிருந்து ஹரி ,அத்தனை தொடர்பு . டெல்லி வெங்கட், திருச்சி காளை. சென்னை .எஸ்.வி ,ஆர் , உலகம் பூராவிமிருந்து  பதிவர்கள்.-புதிய தொடர்புகள் -புதிய அறிமுகங்கள், புதிய உறவுகள், நட்புகள் முகம் தெரியாதவர்களின் விசாரிப்புகள்.-இது தொழில் நுணுக்கம் தந்த இந்த வட்டத்தின் முலம் எதையும்சாதிக்கலாம்.பெருமைக்குரிய வட்டம். கிடைக்கும் நேரத்தில் கணினியின் முன்னே அமர்வதுதான் இப்போது அவனுடைய ஒய்வுநேரப் பணியாகிவிட்டது.

முன்று நாட்களாக பிரகாஷ் ஜி இடமிருந்து தகவல் எதுவும் இல்லை. புதிய இடுகை எதையும்காணவில்லை  பின்னுட்டங்களும்  இல்லை  .  லேசாக சந்தேகம். வெளியூர்  போயிருப்பாரோ  .அப்படிஎன்றால்  
மின் அஞ்சல்  இருக்குமே.

சென்று பார்த்தான் .இல்லை  பால்ராஜிடமிருந்து  மட்டும் இருந்தது  .ஆர்வமில்லாமல் துளாவினான். "சென்னையில்  இரண்டு நாளா   கடும்மழை   . பிரகாஷ் மழையில் நனைந்ததில் கடுமையான தடுமன்..   ஜாட்யம் .  எங்கும்  போகவில்லை". என்ற தகவலை கொடுத்திருந்தான்..
  
 சம்முகத்துக்கு தாங்கவில்லை." பிரகாஷ் அருமையான எழுத்தாளன். தத்துவ விசாரணையில் தேர்ந்தவன். வட மொழி தெரிந்தவன். தமிழில் கவிதை எழுதுவான்.தொலைக்காட்சியில் அவன் கவிதை வாசிப்பதைபார்த்திருக்கிறான்." உடனடியாக தன ஆதங்கத்தை தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பினான்.

"அன்பு பிரகாஷ் ! இரண்டு நாளாக இடுகையில்லை .பின்னுட்டமில்லை .கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறேன். தொலை  பேசி முலம் தகவல் அனுப்பி இருக்கலாம்.மாம்பலம்  தான.எனக்கு எந்த சிரமமும் இல்லை.
நுங்கம்பாக்கத்திளிருந்து  காரில் வந்து உங்களை மருத்துவ மனைக்கு  அழைத்து செல்வதில் எனக்கு சிரமம் எதுவுமில்லை "  

"ஏல ! சம்முவம் !"

". என்னம்மா! முக்கியமான வேலை பாத்துக்கிட்டு இருக்கேன் "

"அதுக்கில்லைல! எனக்கென்ன தெரியும்"

"...................."

"இந்தா பாரு! ஐயா ராத்திரி மிச்சுடும் துங்கலைடா! பல் வலிகுங்காறு! ஆபிஸ்  போம்போது டாகடர் கிட்ட இறக்கி விட்டுரு! அவர பாத்துட்டு வரும்போது ஆட்டோ"வில  வந்துருவாரு "

"இந்தாபாருதா! ஆபிஸ் விஷயமா நான் அவசரமா மாம்பலம்வரையும் போகணும் . சாயங்காலமா அப்பாவை  கூட்டிகிட்டு போறேன்..சும்மா "புளுபுளு" ஞாத!

!!!!!!!!!!!!!!!!!!

Monday, October 01, 2012

அந்த ராமபக்தரின் .........!!

 
அன்னல்காந்தி அடிகள் நெஞ்சில் குண்டு பாய்ந்த போதும் "ஹே !  ராம்" என்று அழைத்தாக கூறுவார்கள்.

1946ம ஆண்டு இந்திய சுதந்திர சூரியன் அடிவானத்தில் தன சிவப்பு கிரணங்களை காட்டியபோதே கலவரங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன  .மே. பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமியர் அல்லாதவர்கள் விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் குடும்பம்குடும்பமாக தங்கள் உடமைகளைத்துறந்து
நிர்கதியாக  அகதிகளாக தில்லிப் பட்டணத்து சாலைகளில் தங்கினர். அவர்களுக்கு உதவியாக நிவாரணப் பணிகளை செய்ய தொண்டர்களை வேண்டினார் காந்தியடிகள்.அந்த பாவப்பட்ட மக்களுக்கு குடி    தண்ணிரி  லிருந்து குடியிருப்பு வரை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய விரும்பினார்.


ஏராளமான தொண்டரகள் வந்தனர். அவர்களின் பணியைப் பார்த்து மகிழ் ந்தார் காந்தியடிகள். அவர்களை நேரடியாக சந்தித்து   நன்றி சொல்ல விரும்பினார். முகாம் முகாமாக சென்றார்.  ஒரு  முகாமில் சில தொண்டர்கள் .அரை அவர்களுடைய அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுகொண்டனர்.


மறுநாள் அவர்களுடைய  அலுவலகம் சென்றார்  ..அவர்களுடைய  தலைவர்கள் அவரை வரவேற்றனர்.காந்தியடிகளுக்கு அலுவலகத்தை
 சுற்றி காண்பித்தனர்.  சிவாஜி மகராஜ், ரானா பிரதாப் ,பொன்ற  வீரர்களின் படங்கள் பிரும்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன.


அடிகள் விடபெற்று திரும்பும்நேரம் வந்தது  தலைவர் காந்தியிடம் "எங்கள் அலுவலகம் எப்படி இருக்கிறது?என்று கேட்டார்.


"சிறப்பாக இருக்கிறது.நான் ஒரு ராம பக்தன். இவ்வளவு  படங்கள்  இருக்கும்போது சிறியதாகவாவது ஒரு ராமர் படத்தை வைத்திருக்கலாம்" என்றார்.
"சிவா ஜி  யும் ரானாவும் முஸ்லிம்களை எதிர்த்தார்கள்.அதனால் அவர்கள் படங்களை வைத்திருக்கிறோம்! ராமர் முஸ்லிம்களை எதிர்க்கவில்லையே "
என்றார் தலைவர்.

அந்த அலுவலகம் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க அலுவலகம்.