Thursday, October 04, 2012

(சிறுகதையல்ல)

எது போலி .....?சம்முக சுந்தரம் மடிக்கணினியில் அளைந்து கொண்டிருந்தான். ஒருவருடத்திற்கு மேல் இருக்கும். சிகாகோவிலிருந்து ராசு, நியுசிலாந்தி லிருந்து கோபால்,கத்தாரிலிருந்து ஹரி ,அத்தனை தொடர்பு . டெல்லி வெங்கட், திருச்சி காளை. சென்னை .எஸ்.வி ,ஆர் , உலகம் பூராவிமிருந்து  பதிவர்கள்.-புதிய தொடர்புகள் -புதிய அறிமுகங்கள், புதிய உறவுகள், நட்புகள் முகம் தெரியாதவர்களின் விசாரிப்புகள்.-இது தொழில் நுணுக்கம் தந்த இந்த வட்டத்தின் முலம் எதையும்சாதிக்கலாம்.பெருமைக்குரிய வட்டம். கிடைக்கும் நேரத்தில் கணினியின் முன்னே அமர்வதுதான் இப்போது அவனுடைய ஒய்வுநேரப் பணியாகிவிட்டது.

முன்று நாட்களாக பிரகாஷ் ஜி இடமிருந்து தகவல் எதுவும் இல்லை. புதிய இடுகை எதையும்காணவில்லை  பின்னுட்டங்களும்  இல்லை  .  லேசாக சந்தேகம். வெளியூர்  போயிருப்பாரோ  .அப்படிஎன்றால்  
மின் அஞ்சல்  இருக்குமே.

சென்று பார்த்தான் .இல்லை  பால்ராஜிடமிருந்து  மட்டும் இருந்தது  .ஆர்வமில்லாமல் துளாவினான். "சென்னையில்  இரண்டு நாளா   கடும்மழை   . பிரகாஷ் மழையில் நனைந்ததில் கடுமையான தடுமன்..   ஜாட்யம் .  எங்கும்  போகவில்லை". என்ற தகவலை கொடுத்திருந்தான்..
  
 சம்முகத்துக்கு தாங்கவில்லை." பிரகாஷ் அருமையான எழுத்தாளன். தத்துவ விசாரணையில் தேர்ந்தவன். வட மொழி தெரிந்தவன். தமிழில் கவிதை எழுதுவான்.தொலைக்காட்சியில் அவன் கவிதை வாசிப்பதைபார்த்திருக்கிறான்." உடனடியாக தன ஆதங்கத்தை தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பினான்.

"அன்பு பிரகாஷ் ! இரண்டு நாளாக இடுகையில்லை .பின்னுட்டமில்லை .கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறேன். தொலை  பேசி முலம் தகவல் அனுப்பி இருக்கலாம்.மாம்பலம்  தான.எனக்கு எந்த சிரமமும் இல்லை.
நுங்கம்பாக்கத்திளிருந்து  காரில் வந்து உங்களை மருத்துவ மனைக்கு  அழைத்து செல்வதில் எனக்கு சிரமம் எதுவுமில்லை "  

"ஏல ! சம்முவம் !"

". என்னம்மா! முக்கியமான வேலை பாத்துக்கிட்டு இருக்கேன் "

"அதுக்கில்லைல! எனக்கென்ன தெரியும்"

"...................."

"இந்தா பாரு! ஐயா ராத்திரி மிச்சுடும் துங்கலைடா! பல் வலிகுங்காறு! ஆபிஸ்  போம்போது டாகடர் கிட்ட இறக்கி விட்டுரு! அவர பாத்துட்டு வரும்போது ஆட்டோ"வில  வந்துருவாரு "

"இந்தாபாருதா! ஆபிஸ் விஷயமா நான் அவசரமா மாம்பலம்வரையும் போகணும் . சாயங்காலமா அப்பாவை  கூட்டிகிட்டு போறேன்..சும்மா "புளுபுளு" ஞாத!

!!!!!!!!!!!!!!!!!!

17 comments:

Yaathoramani.blogspot.com said...

நிச்சயம் இதுதான் போலி
சுருக்கமாகச் சொல்லிப்போனாலும்
நிறைய புரியவைத்துப் போகிறது
தங்கள் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

kashyapan said...

இடுகை பதிந்த ஆறாவது நிமிடம் பின்னுட்டமிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ரமணி அவர்களே! ---காஸ்யபன்.

ஓலை said...

True sir.

RVS said...

காஸ்யபன் சார்!
எது போலி? இது சிறுகதையல்ல... சிறு நிஜமா?

:-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

போளிக்குள்ளே பூரணம். போலிக்குள்ளே காரணம்.

சிகாகோ ராசு-அப்பாதுரை, நியூசிலாந்து கோபால்-துளசிகோபால், கத்தார் ஹரி-பத்மநாபன், டெல்லி வெங்கட்-வெங்கட்நாகராஜ், திருச்சி காளை- ரிஷபன், சென்னை எஸ்.வி.ஆர்- ஆர்.வி.எஸ் இதெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன்.

சம்மூக சுந்தரத்தையும், பிரகாஷ்ஜியையும், பால்ராஜையும் (தெரிந்தாலும்) சில காரணங்களால் கண்டுபிடிக்க விரும்பவில்லை.!!!!

என்ன காஸ்யபன் சார்!எனக்கு எத்தனை மார்க்?

kashyapan said...

ஆர்.வி.எஸ் அவர்களே! There is no fiction.அம்புட்டுதான் சொல்வேன்---காஸ்யபன்.

kashyapan said...

சுந்தர் ஜி அவர்களே! மூட்டைய அவுக்கச்சொன்னேனா? இந்த கோள்ளைல உமக்கு மார்க் போடணுமா?---காஸ்யபன்.

அப்பாதுரை said...

பால்ராஜ் யார் சுந்தர்ஜி.. கண்டுபிடிக்க விரும்புங்களேன் கொஞ்சம்?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! பால்ராஜை கண்டுபிடிப்பது கஷ்டம்---காஸ்யபன்

venu's pathivukal said...

அன்பு காஸ்யபன் தோழர்

அருமையான சிறுகதையை சிறுகதை என்று சொல்வது தான் போலி!
இந்தக் கதையை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் இந்தக் கதையின்
நாயகனாகத் திகழ எனக்கு எல்லா யோக்கியதையும் உண்டு.
போலிக்கு என்ன தேவை யோக்கியதை என்கிறீரா..அதுவும் உண்மை தான்..

வாழ்த்துக்கள்..

எஸ் வி வேணுகோபாலன்
பின் குறிப்பு: கதையின் முற்பகுதியில் பிளந்து கட்டும் கணினி மொழியை விடவும், இறுதிப் பகுதியில் தவழும்
வட்டார வழக்கு கிறுகிறுப்பை ஏற்றுகிறது அய்யா..

venu's pathivukal said...

அன்பு காஸ்யபன் தோழர்

அருமையான சிறுகதையை சிறுகதை என்று சொல்வது தான் போலி!
இந்தக் கதையை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் இந்தக் கதையின்
நாயகனாகத் திகழ எனக்கு எல்லா யோக்கியதையும் உண்டு.
போலிக்கு என்ன தேவை யோக்கியதை என்கிறீரா..அதுவும் உண்மை தான்..

வாழ்த்துக்கள்..

எஸ் வி வேணுகோபாலன்
பின் குறிப்பு: கதையின் முற்பகுதியில் பிளந்து கட்டும் கணினி மொழியை விடவும், இறுதிப் பகுதியில் தவழும்
வட்டார வழக்கு கிறுகிறுப்பை ஏற்றுகிறது அய்யா..

kashyapan said...

வேணு அவர்களே! மத்திய தர வர்க்கத்தின் துருவ நட்சத்திரம் அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம். அதன் மாபெரும் தலவர்களிலொருவர் தோழர் சரோஜ் சவுத்ரி பணிக்காலத்தில் 18 ஆண்டுகள் Loss of pay !அதனால் Minimaum gratuty,pf,and other benifits . தன் சகஊழியர்களுக்காக தியாகம் செய்த அற்புதமான தலைவர். அப்படியிருந்தும் கால 6 மணியிலிருந்து 10 மனிவரை வீட்டில் யாரையும் சந்திக்க மாட்டார். அப்படிவந்தாலும் பார்க்கமாட்டார். எனக்கு.என்சொந்த குளியல் மற்றும்குடும்பத்திற்காக நான் ஒதுக்கியுள்ள நேரம் அது. அதனை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது.நான் வீட்டில் இருப்பதே அபூர்வம். அதையும் விழுங்கி விடாதீர்கள் என்பார். பிறருக்காக உழைப்பது நல்லது.நம்மை நம்பியிருக்கும் குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் உண்டு என்பதை சொல்வது தான் நோக்கம். பதிவுலகத்தை பகடி செய்வது அல்ல!---காஸ்யபன்.

kumaresan said...

மனசாட்சியைக் குடையும் விமர்சனத்தைக் குறுகத்தரித்த கதை.
-அ. குமரேசன்

kashyapan said...

குமரேசன் அவர்களே! ஒரு நளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து கொண்டு என் இடுகையையும் பார்த்து பின்னூட்டமிட்டதற்கு மிகுந்த நன்றி.நலம் தானே?---காஸ்யபன்

கரந்தை ஜெயக்குமார் said...

இது கதையல்ல, வாழ்வியல் உண்மை

யசோதா.பத்மநாதன் said...

அடடா! என்ன ஒரு அழகிய உயிர்ப்புள்ள சித்திரம்!!எப்போதைக்கும் பொருந்தும் படியான வண்ணங்கள்!

அவசியமான அரிச்சுவடி!!

மிக்க நன்றி காசியப்பா!!உங்களை இன்று கண்டுகொண்டேன்.

kashyapan said...

வருகைக்கு நன்றி அம்மையாரே! என்பெயர் காஸ்யபன். காசியப்பன் அல்ல---கஸ்யபன்.