Monday, October 08, 2012

பொன் மலையும் அந்த பாரத புத்திரர்களூம்......!!!


"சாம்பல் தேசம்" வலைப்பூவில் "பாகிஸ்தான் செல்லும் ரயில்" என்ற நாவல் பற்றி எழுதி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் எழுதிய இந்த நாவல் எழுதப்பட்ட காலம் இந்திய விடுதலை.மதக்கலவரம் ஆகியவை நடந்த மிகவும்குழப்பமான காலமாகும்.இதுபற்றிய சில வரலாற்றுத்தகவலை பரிமாறிக் கொள்ள விரும்பினேன். நண்பர்கள் அதன பிண்ணுட்டமாக பொடாமல்,ஒரு தனி இடுகையாக எழுதுங்கள் என்று ஆலோசனை கூறினர்.1946ம் ஆண்டு இறுதியில் ஆங்காங்கே மதவெறியர்களின் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது .வடமெற்கு எல்லை மாகாணம்,ராவல்பிண்டி,கிழக்குபஞ்சாப் ஆகிய இடங்களில் இஸ்லாமியர் அல்லதாவர்கள் இருக்கமுடியாது என்ற நிலை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் நிலமை மிகவும் மோசமாகி இந்தியப்பகுதியிலும் அதன்பாதிப்பு வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கில் இரண்டு பகுதியிலும் மக்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறினர். பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்.து பாகிஸ்தானுக்கும் ரயில் போக்கு வரத்து நின்றுவிட்டது.ரயில்தொழிலாளர்களுக்கு அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை. இது இரண்டு பக்கமும் நடந்தது. கால்நடையாக கலவரம் நடக்கும் பகுதிகள் வழியாக வரவேண்டியதாயிற்று. வழியில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் .,கற்பழிக்கப்பட்டவர்கள் ,அனாதையான குழந்தைகள் நிலை சொல்லும் தரமன்று .இடக்கால அரசு இது பற்றி யோசித்தது. இரண்டு பக்கமும் உள்ளமக்கள் புலம்பெயர ரயில் பொக்குவரத்தை சீர்செய்ய முடிவாகியது.அதேசமயம் இஞ்சின் ஒட் ட கரி அள்ளிப்போட ,கார்டுகள், பாயிண்ட்ஸ் மென் என்று வேண்டுமே? ம.பி,உ.பி,பஞ்சாப்,ராஜஸ்தான் பகுதி ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் கருத்த ,ஒடிசலான, நீண்ட நேற்றியைக் கொண்ட தென் இந்தியர்களை கொண்டு ஓட்ட முடிவெடுக்கப் பட்டது. நேரு இதுபற்றி செயலாற்றும் பொறுப்பை வி.வி.கிரி அவர்களிடம் கொடுத்தார். A.I.T.U.C யோடு நெருக்கமான தொடர்பு கொண்ட கிரி அவருடைய நண்பரான தோழர் அனந்தன் நம்பியரை உதவிக்கு அழைத்தார்.திருச்சி பொன்மலை யில் ரயில் வேதோழிலலர்களின் அமைப்பின் தலவராக அப்பொது நம்பியார் இருந்தார்..பொன்மலை ஒர்க்ஷாப்பில் தொழிலாளர் களை அழைத்து கூட்டம் நடத்தினார்.நிலமையை அவர்களிடம் விளக்கினார். " தோழர்களே! இந்த தெசமே உங்களை பார்க்கிறது. ஆயிரக்கனக்கான நம்சகோதரர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்! . அதெசமயம் உதவச்செல்லும் உங்களுக்கும் ஆபத்த இருக்கிறது. வெறிபிடித்த கூட்டம் இரண்டு பக்கமுமுள்ளது. அவர்களிட மிருந்து உங்களை காப்பாற்ற அரசு எந்த உத்திர வாதமும் தர தயங்குகிறது.தோழர்களே முடிவு உங்களுடையது" என்றார் நம்பியார்.அந்தக் கூட்டத்தின் கனத்தை மோனத்தை நாராயண சாமி நாயுடு என்ற தொழிலாளி கலைத்தார்

தோ ழரே! நான் தயர்ர்" என்றார். மொத்தம்முப்பது பேர் வந்தார்கள்கருத்த அந்த தமிழக தொழிலாளர்கள் அன்று செய்த தொண்டு வரலாற்றின் இடுக்குகளில் தேடிப்பார்த்தால் தான் தேரியும். .பி.கு. இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கு முன்னால் திருச்சி தோழர் எட்வின் அவர்களை தொடர்பு கொண்டேன். நினவில் எழுதுவதால் நாராயண சாமி நாயுடு என்ற பெயரை அவரும் உறுதிப் படுத்தினார்.மற்றவர்கள் பெயர் தெரியவில்லை..திருச்சி அன்பர்கள் பொன்மலையில் உள்ளD.R.E.Uசங்கத்தை அணுகிணால் அந்த பாரத புத்திரர்களின் வரலாற்றுப்பணி தெரியவரும்.இன்றும் திருச்சியை கடக்கும் போது "பொன்மலை" ரயில் பலகையைப் பார்க்கும்போது என்னையறியாமல் இருகரம் கூப்புவேன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்தேன்... நன்றி சார்...

hariharan said...

Very nice sharing., our comrades act bravely ...

venu's pathivukal said...

பொன்மலையும் பாரத புத்திரர்களும் ஓர் அருமையான பதிவு
எனது அன்பு வாழ்த்துக்கள்.

veligalukkuappaal said...

அன்புத்தோழர் காஸ்யபன் அவர்களூக்கு என் நன்றிகள் பல. உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் மேலும் பெருகுகின்றது. தொடர்ந்து ‘மற்றவர்கள் மறந்த ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ தகவல்களை வரும் தலைமுறைக்கு விதையாய் விதைத்து செல்லும் உங்களுக்கு அனேக நன்றி... இக்பால்