Sunday, October 28, 2012

இந்தி திரைப்படம் ---அறிமுகம்


"shudra - the  rising "


தலித் மக்கள் இந்த நாட்டில் படும் பாடுகளை சொல்லுகிறது  இந்த படம்  .சாதிய அமைப்பை நம்பி நாசமாகிக் கொண்டிருக்கும் மக்களை நோக்கி  பல
கேள்விகளைமுன்வக்கவும் செய்கிறது.

கிராமத்தில் தாலித்களை எழுந்து நில்லுங்கள் என்று அழைக்கிறது  .உங்கள் மனைவியையும்,மகளையும் பெண்டாளத் துணியும் நிலப்பிரபுக்களுக்கு 
எதிராக அணிவகுங்கள் என்று கூறுகிறது.சாதியின் பெயரால் தங்களுக்கு எதிராக
 நடக்கும் கொடுமைகளை கண்டுஇனியும் பொறுத்திருக்கமாட்டோம் என்று 
நிர்க்கதியான அந்தமக்கள் எதிர்க்குரல்கொடுக்க தூண்டுகிறது.

ஒரு முதுமை வயது தலித் கிழவன் தாகத்திற்கு தண்ணீர்     கிடைக்காமல்  செத்தே போகிறான்.  

ஐந்து  வயது தலித் சிறுமி "ஓம்  நம சிவாய " என்று பாடியதற்காக தண்டிக்கப்படுகிறாள்..  
     ..
ஒரு கர்ப்பிணி பெண் மேல்சாதி நிலப்பிரபுவால் படுக்கைக்கு அழை க்கப்படுகிறாள்.

இந்தப்படம் தலித்துகள் மீது நடந்த கொடுமைகளை சொல்வதோடு அது இன்றும் தொடர்வதை குறிப்பிடுகிறது .

சாதி மனிதத்தை  விட மேலானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதீய முறைமை எப்படி உருவானது? சாதியை இன்னும் கட்டியழும் குருடர்களை அதிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறது. 

இதயத்தை நொறுக்கிவிடும் படமாகுமிது

வலியும்,வேதனையும் மனதை ஆழமாக பாதிக்கும் படமாகும். "தீண்டத்தகாதவர்கள்" என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக  இழைக்கப்படும் 
குற்றங்கள் பற்றிய ஆவணமாகும் இந்தப் படம்.
துயரத்தில் முடிந்தாலும், கதை சொல்லும் பாங்கும், பின்புலத்தை  சித்தரித்திருப்பதும்  நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

நடிகர்கள் அற்புதமாக நடித்துள்ளனர்..சூழ்நிலையை சித்தரித்துள்ளது , கலை ,ஒப்பனை. படம் பிடித்துள்ள விதம் எல்லாமே முதல் தரம்.அர்த்தமுள்ள ,இதயத்தை நெருடும் இசை ...
  
முழுக்க முழுக்க வேதனையசித்தரிக்கிறது  .மக்கள் எழுச்சி யடையும் காட்சிகள் இன்னும் கூடுதலாக காட்சிப் படுத்தி 
இருக்கலாம்.இயக்குனர்  அவர்களின் அவலத்தை சித்தரிபதற்கு முக்கியத்துவம் 
கொடுத்துள்ளார்..பல குட்டி சம்பவங்களின் கோர்வையாக உள்ள கதையாகிவிட்டது.

"சூத்திரன் -எழுச்சி " காலம் காலமாக இந்தியாவில் இருந்து வரும்  சாதீய முறைமையை அழித்தொழிக்க  எடுத்த  முயற்சி 

 ..இது பற்றி உங்களுக்கு மேலும் தெளிவு பெற 
இந்தப் படத்தை பாருங்கள்..

(நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா )


பி.கு : (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஒருவரிடம்  இந்தபடம் பற்றி  குறிப்பிட்டேன் .அவர்கள் முலம் sub title
போட்டு தமிழகத்தில்  திரையிடலாம் .வாழ்த்துக்களுடன்.)     5 comments:

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

பார்ப்பனீயம் மட்டும் தான் சாதிகொடுமை என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள். இன்று தென் தமிழகத்தில் நிலவி வரும் சாதி கொடுமைகளுக்கு காரணம் பார்ப்பனியம் இல்லை. ஏன் அதைப் பற்றி யாரும் எழுதுவது இல்லை என்று தெரியவில்லை.
நேற்று முன்தினம் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் ஒரு சாதி ஊர்வலத்தின் போது ஒரு எஸ்.ஐ. குத்திக் கொல்லப்பட்டார் . இதன் பின்ணணி அவர் ஒரு கிறிஸ்துவ தலித் என்பதே.
நாளை இன்னும் பெரிய ஊர்வலம் இருக்கிறது. அதைக் கடந்து வேலைக்கு வர வேண்டும். யார் சாவதைப் பார்க்கப் போகிறேனோ தெரியவில்லை. அந்த தேவருக்கே வெளிச்சம்

அப்பாதுரை said...

தமிழ்நாட்டின் அவல நிலை. முட்டாள் ஆத்திகமும் முட்டாள் நாத்திகமும் சேர்ந்து அடித்த கூத்து.

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html