Sunday, October 14, 2012

முற்போக்கு எழுத்தாளர் , கலஞர்களும

கூடங்குளமும்..............!

 போராடும் கூடங்குளம்  மக்கள் மீது மத்திய  மாநில  அரசுகள்  தொடுக்கும்  தாக்குதலை   கண்டித்து  அவர்களுக்கான தங்கள் ஆதரவினை கூறிட த.மு.எ.க. சங்க தலைவர்கள் சென்றனர். 425 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் அந்தப் பந்தலில் உதயகுமார்,முகிலன், புஷ்பராயன் ஆகியோரை சந்தித்து வந்தனர்.

1978மாண்டு ஜோதிபாசு தலைமையில் இடதுமுன்னணி அரசு வந்த பொது அங்கு மின்சாரம் கடுமையான பற்றக்குறையிலிருந்தது.இடதுமுன்னணி அரசை "மின் பட்டினி " போட்டு வாட்ட மத்திய அரசு சகல  சாகச முயற்சியையும் செய்தது.பக்றேஷ்வர் மின்திட்டத்தை அனுமதிக்க மறுத்தது. ஒருபுறம் "மின் பசி"யில் மக்கள்.மற்றொரு பக்கம் அணுமின் நிலையம் அமையுங்கள் என்று மத்திய அரசின் பிரச்சாரம்.
அணுமின் நிலையம்வேண்டாம் .என்பதை மக்களுக்குடுத்துச்சொல்ல  இடது   முன்னணி எழுத்தாளர்கள் கலைஞர்களை அணுகியது.குட்டி நாடகங்கள்,கருத்தரங்கங்கள் , கவியரங்கங்கள், பொம்மலாட்டம் என்று கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தனர்  ."ஹிராஷிமா "  என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி  இதில புகழ்பெற்றதாகும்.அணுகுண்டு 
போட்டதால் ஏற்பட்ட,பாதிப்பு, தோல்  உரிந்து மக்கள்  தண்ணீருக்காக  
ஊர்ந்து  செல்லும் கட்சியினை பொம்மலாட்ட த்தில்  பார்க்கும் பொது இதயம்    விம்மும். உள் மனம் அலறும் (இந்த நிகழ்ச்சியை மே .வங்கத் திலோருமுரையும்,சண்டிகரில் ஒரு முறையும் பார்த்தேன்.)

மத்திய அரசின் உதவியிலாமலேயே பக்றேஷ்வர் திட்டத்தை 
மக்களிடமிருந்து பணம் வசூலித்து உருவாக்க முடிவாகியது.பணம் 
கொடுக்கமுடியாத ஏழை எளியவர்    ரத்ததானம் செய்தனர் அதனை விற்று திட்டத்திற்கு பணம்திரட்டப்பட்டது.1990 ஆண்டிலிருந்து  பக்றேஷ்வரில் உற்பத்தி  நடக்கிறது.இன்று மின் உபரி மாநிலங்களில் மீ.வங்கமும் ஒன்று.

முற்போக்காளர்களால் கேரளாவிலும், திரிபுராவிலும் அணு உலை வராமல் தடுக்க முடிந்தது.

1936ம ஆண்டு நேருவும்,நம்புதிரி பாடும்,பிறேம சந்தும்,குருதேவரும், ஆரம்பித்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வாரிசுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்.


தலைக்கும் தாடிக்கும் ஒரே சீயக்காயைத்தான்    அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  
"ஷாம்பு" பயன் படுத்தாதவர்கள்..

கூடன்குளம் கடற்கரை மணலில் அமர த.மு.எ.க.சவுக்கும் உரிமையும்  பாத்தியதையும் உண்டு. 
  




3 comments:

vasan said...

த‌.பாண்டிய‌ன் ஏன் இப்ப‌டி குறுக்குச் சால் ஓட்டுகிறார்?

veligalukkuappaal said...

1)தாடிக்கும் தலைக்கும் ஒரே சீயக்காயை பயன்படுத்த நமக்கு 425 நாட்கள் தேவைப்பட்டதுதான் அதிசயம்! கூடன்குளம் கடற்கரையில் இப்போதும் எப்போதும் யாரும் எவரும் பாத்தியதையுடன் அமரலாம்தான், ஆனால் நமக்கு என்னவோ 425 நாட்கள் தேவைப்பட்டது விந்தைதான்!
2)தமுஎகச ‘பாதுகாப்பு தொடர்பான அச்சங்களை போக்க அனைவருக்கும் ஏற்புடைய சுயேச்சையான குழுவை அமைக்கவும், அதன் முடிவு வருகின்ற வரையிலும் அணு உலை இயங்குவதை நிறுத்தி வைக்கவும்...’ கோருகின்றது. ஆனால் முக்கிய இடதுசாரிக்கட்சியின் நிலையோ ‘ஒன்றாவது இரண்டாவது அணு உலைகளை இயக்கலாம்,மூன்றாவது நான்காவது அணு உலைகளை தொடங்கக்கூடாது’ என்பதாக அல்லவா உள்ளது! ரஷ்ய அணு உலைகளுக்கு ஒரு சீயக்கா, பிற நாட்டு அணு உலைகளுக்கு ஒரு சீயக்கா; ஜய்தாப்பூருக்கு ஒரு சீயக்கா, கூடன்குளத்துக்கு ஒரு சீயக்கா என்பது எப்படி சரியாய் இருக்கும்?
3)’ட்ரன்ஸ்பரன்சி இண்டெர்நேஷனல்’ என்ற அமைப்பின் ஆய்வு 2005ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி முக்கியமான 11 அரசுத்துறைகளில் மட்டும் புழங்க்க்கூடிய ஊழல் பணம் மட்டும் 21068 கோடி ரூபாய்! இது பழைய ஆய்வு! அதன் பின் தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளத்தக்க வகையில் ஒரே ஊழலில் மட்டும் 172000 கோடி புழங்குகின்றது, அப்புறம் க்ருஷ்ணா-கோதாவரி வாயுப்படுகையில் ரிலையன்ஸ் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல்...இப்படி புதுசா புதுசா பெருமைகள்! செய்தவர்கள் செய்கின்றவர்கள் காங்கிரசும் பிஜேபியும். இந்த ஊழல் பணத்தில் ஒரு சல்லிக்காசு கூட 1948க்குப் பிறகு ஊழல் செய்தவனிடம் இருந்து மீட்டெடுத்த்தாக சரித்திரம் இல்லை; இப்படி இந்தியமக்களின் பல லட்சம் கோடி பணத்தை சுரண்டித்தின்று கொழுத்த கமிசன் லாபி நாய்களின், சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடாமல் பாதுகாக்கும் மக்கள் விரோத மன்மோகன்,சிதம்பரம்,நாராயணசாமி கும்பலின் வாதமான் ‘ஏற்கனவே 3000 கோடி ரூபாய் கூடன்குளத்துக்கு கொட்டி அழுது விட்டோம், அதை எப்படி நிறுத்துவது’ என்று இடும் கூச்சலை, மக்கள் நலனுக்காக நிற்கும் இட்துசாரி கம்யூனிஸ்டுக்கள் அப்படியே எதிரொலிப்பது என்ன நியாயம் தோழர்? ஒரு சில தேசவிரோதிகள் வாழ பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை இந்த அரசுகள் இப்படி கேள்வி கணக்கு இன்றி தியாகம் செய்யும் எனில் ஒரு தேசத்தின் பல லட்சம் மக்கள் வாழ 3000 கோடி ரூபாய்தான் மண்ணோடு மண்ணாய் போகட்டுமே? வானம் இடிந்துவிடாது ...இக்பால்

kashyapan said...

அருமைத் தோழர் இக்பால் அவர்களே!உங்கள் கோபம் நியாயமானது. அணு அபாயத்தால் பாதிகப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் ஜப்பானியர்கள்.அந்தமக்கள் அதனை இன்றும் அனுபவிக்கிறார்கள்,நினைவு கூறுகிறார்கள்.1945ம் ஆண்டு குண்டு வீச்சு நடந்தது.ஜப்பானில் அணு உலை வந்தது அதன் பிறகு தான்.அணு சக்தியைபயன்படுத்துவதுஎன்பது வேறு.மும்பை அணு சக்தி நகர் சென்றிருக்கிறீர்களா?"ஐஸடோப்" என்ற மருந்து தயாரிக்கிறார்கள்.சில நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்து.நெல்லைபல்கலைக்கழகத்தில் "நுக்கிளியர் பிசிக்ஸ்" பாடம் சொல்லித்தருகிறார்கள்.இந்தியாவில் வேறு எங்கும் இருக்கிறதா தெரியவில்லை.கூடங்குளம் எதிர்ப்பாளர் தலைவர்களை விட சிலர் தீவிரமாக எதிர்க்கிறார்கள்..அவர்களின் தலைவர் சொல்கிறார்." "அணு உலையா?மின்சாரமா? என்பதில்லை பிரச்சினை. மொத்தம் 19பாதுகாப்பு விதிகள் உள்ளன அதில் இரண்டினைக்கூட இவர்கள் நிறைவேற்ற வில்லை இவர்களை நம்பமுடியாது"என்பதுதான் அவர்கள் நிலை.நம்பகமான பாதுகாப்பு எற்பாடு இருந்தால்-அப்போதும் ரஷ்யா-தாடி-மீசை என்பவர்களை --சிக்கலான பிரச்சினைக்கு விடை உணர்ச்சிவசப்பட்டு தீர்வு கிடைக்குமா?அணு ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள். அப்போதும் அது தவறு என்று தலயங்கமெழுதியவர்கள் உண்டு. தோழரே! தன்னை மார்க்ஸிஸ்ட் என்று கூறிக்ககொள்ள தயங்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆலோசனை கூறவந்தது தான் இந்த நூற்றாண்டின் சோகம்!

இரண்டாம் உலகப்போரின் போது கேலி பேசியவர்கள் உண்டு! இந்தியவின் சீன யுத்தத்தின்பொது வசைமாறிபொழிந்தவர்கள் உண்டு. அணு ஒப்பந்ததை எதிர்தபொது ஏகடியம்பொசியவர்கள் உண்டு! இவை கோடைகாலத்துமேகங்கள். நிமிர்ந்து நில் தோழா! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.