Thursday, October 11, 2012

அரியாணாவில் நடக்கும் அக்கிரமம்..............!


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரியாணாவில் அதிகரித்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் பாலியல்பலத்காரம் 12 நடந்துள்ளது. அதில் பத்துக்கும்மேற்பட்டவை சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்டவை.அந்தப் பெண்கள் "பச்சாவோ! பச்சாவோ!" என்று கதறியிருக்கிறார்கள். அவர்கள்" காப்பற்று!காப்பாற்று!" என்று தமிழில் கதறவில்லை என்பதால் நம்மூர் தலித்தலைவர்களான தொல்,கிரு ஷ், ஆகியொர் வாயத்திறக்கவில்லை.இந்தக் கோள்ளையில் தொல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் இது எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறிவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மார்க்சிஸ்டுகளின் சதிஎன்றார்.இவர்கள் எதிர்கட்சி என்றார்கள்.

அரியாணாவில் ஆண்- பெண் விகிதம் 1000க்கு 877 என்று உள்ளது. பெண்சிசுக் கொலை என்பது அதிகம் என்பதை இது சுட்டுகிறது.இதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான பாலீயல் வன்முறை

கூடுதலாக நடக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முனபு சோனியா அம்மையார் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைசந்தித் து ஆறுதல் கூறி.யுள்ளார்.அவருடன் முதல்வர் ஹூடாவும் சென்றுள்ளார்.(அடுத்த மாதம் அங்கு தேர்தல் நடக்கிறது)அரியாணாவில் மெல்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அனியாயத்துக்கு அதிகம். அவர்களுடைய பஞ்சாயத்து தீர்ப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பஞ்சாயத்து ஏற்காத திருமணங்கள் செல்லாது. குடும்பத்தின் "மானம்"என்று சொல்லி மரண தண்டனை விதித்து கோலைசெய்ய உத்திர விடுவார்கள்.அதனை நிறைவேற்றவும் செய்வார்கள்.

இப்பொது புதிதாக ஒரு கோரிக்கை வத்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரன பாலியல் வன்முறையை தடுக்க திருமணச்சட்டத்தை திருத்த வேண்டும்.பெண்களின்,ஆண்களின் திருமண வயதை குறைக்கவேண்டும்.கிட்டத்தட்ட குழந்தைத் திருமணத்தை சட்ட பூர்வ மாக்க வேண்டும் என்கிறார்கள்.சோனியாவோடு முதலமைச்சர் சென்றார். அவரோடு மத்திய அமைச்சர் ராதா ஸலூஜாவும் சென்றார். மானில அமைச்சர் சிங் சென்றார். அவர்தான் குடும்ப நலத்துறை அமைச்சர். திருமன வயதை குறைக்கவேண்டும் என்று அவரும் கூறியிருக்கிறர்.தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது?ஒரு சம்பவத்தில் நாங்குபேர் பலாத்காரத்திலீடுபட அதனை ஐந்தாமவர் வீடியோ காட்சியாக எடுத்துள்ளார்.மற்றொரு சம்பவத்தில் அந்தப் பெண் தப்பி ஓடிவிடாதபடி ஒரு போலீஸ் காரர் உதவியிருக்கிறார்.தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குள் புகுந்து பெண்கள அள்ளிச் சென்று நடு ரோட்டில்-----கேக்க ஆளில்லைல!

சாவுங்க....!

3 comments:

hariharan said...

இன்றைக்கு தீக்கதிர் தலையஙகம் வாசித்தேன், இன்த கவலை தான் நில ப் பிர புத்தவம் அன்த மானிலத்தில் சிற ப் பாக நடக்கிறது போலும். மேல்சாதி இன்துக்கள்வைத்தது தான் சட்டம் . அவர்களிடம் தான் நிலமிருக்கிறது மற்றவரெல்லாம் கூலிகள் . திருமண வயதை குறை ப் பதற்கு பதில் கற் பழித்த கயவர்களுக்கு ஆணுறு ப் பை அறுக்க சொல்லியிருக்கலாம் .

kashyapan said...

பிருந்தா காரத் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்தச் செய்தி கிடைக்குமுன் இடுகை எழுதிவிட்டேன்..நீங்கள் குறிப்பிட்ட தலயங்கத்தையும் வாசித்தேன். நன்றி ஹரிஹரன் அவர்களே!---காஸ்யபன்.

vasan said...

ஏற‌க்குறைய‌ அர‌சாங்க‌த்தின் எல்லா துறைக‌ளும்,
'துரைகளை'க் காக்க‌ ம‌ட்டுமே இய‌ங்குகின்ற‌ன‌.

ம‌க்க‌ளின் அடிமை புத்தி, ஆள்ப‌வ‌ர்க‌ளுக்கு
மேலும் அதிகார‌ வெறியை கூட்டுகிற‌து.