Saturday, January 18, 2014

உலகம் அறியாத ஒன்று ....... !!!


உலகம் அறியாத ஒன்று நடந்தது ! 58 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது !

ஆம் ! இந்திய அரசாங்கத்தின் முடிவு ஆயுள்இன்சுரன்சதேசஉடமையாக்கும   முடிவு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது!

இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசர சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது!

திறமையாக , எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டது !

அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக் அவர்கள் தன்னுடைய வரலாற்று நுலில் இதனை  குறிப்பிடுகிறார்!

"நான் எச்.எம் படேலை வர்த்தக அமைச்சர் டி டி கிருஷ்ணமாசாரியாரை சந்திக்க அனுப்பினேன் ! அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் முலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல ! என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன் !
அன்று இரவு ஒரு அவசர சட்டம் தயாராக இருந்தது ! அன்று இரவு அது கையெழுத்தாயிற்று !  மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக போறுக்கி  எடுக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இன்சுரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் ! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த  அதிகார உத்திரவை காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் !
ஆயு்ள்  இன்சுரன்சு தேச உடமையாக்கப்பட்டது !இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ,இனி எப்போதும்   நடத்த முடியாத சம்பவமாகும் !"

ஏன் இவ்வளவு ரகசியம் ? !

முன்னமெயே தெரிந்திருந்தால் கோடிகணக்கான கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்ற பயம் தான் காரணம் !

எச்.எம் படேல்,பி.கே.கவுல்,எ,ராஜ கோபாலன் ஆகியமுவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள்.! அவர்களுக்கு உதவியாக வையாபுரி,எம்.ஜ.ராவ் ஆகியோர் இருந்தனர் ! இந்த நடவடிக்கையை அமைச்சரவைஇன் ஆமொதிப்புக்காக வைக்கவில்லை ! பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !

பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகாளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தெதியெஅனுப்பினார்கள்  ! அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை ! அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன ! அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது !  

இந்த அதிகாரிகளுக்கன பயண ச்செலவுக்கான அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை ! முத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள் !  ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !

19-1-56 அன்று இரவு 8.30 க்கு  நிதி அமைச்சர் வானொலி முலம் இன்சுரன்சு நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி  அறிவித்தார் !

கம்பெனி முதலாளிகள் அவசர சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர் ! 

மறுநாள்  20-1-1956  அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர் ! 

கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர் ! வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது ! 

இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடிய   அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கம் தன்னுடைய 23 வது மாநாட்டை  நாகபுரியில் 20-1-14 முதல் நடத்துகிறது !

நாடு முழுவதுமிருந்து 1700க்கும் மேற்பட்டசார்பாளர்களும்,
பார்வையாளர்களும்  வந்து கொண்டிருக்கிறார்கள் !

"long live A I I E A !!!
















































 












  







அகிலைந்திஉஅ ரேடியோவின் டைரக்டர் கெனரலுக்கு என்ன வென்று சொல்லாமல் 

3 comments:

அப்பாதுரை said...

அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்ட விதம் சுவாரசியமாக இருந்தது படிக்க.
இன்றைக்கு அமைச்சரே செய்தியை விற்று காசு பண்ணுவார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அன்றைய அமைச்சர் சோசலிச ஆதரவாளரோ?

நாட்டுடமையானதால் மக்களுக்கு பயன் கிடைத்ததா, இன்சூரன்சு நிர்வாகம் முன்னைவிடத் திறமையாக செயல்பட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன. அதைப் பற்றி அமைச்சர் தன் கருத்து ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! தேஷ்முக் ,படெல்,பீடே ஆகிய அதிகாரிகள் i . c. s . காரர்கள் ! நிர்வாகத்தில் நேர்மை இருக்கும் ! அப்போது ஆவடி மாநாட்டில் ஆளும் கட்சி socialistic paattern of society இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை என்று அறிவித்தது ! அதிகாரிகள் அன்று அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள் ! தனிப்பட்ட முறையில் வேறு மாதிரி இருந்தாலும்! ---காஸ்யபன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கத்தின் சீரிய பணி போற்றுதலுக்கு உரியது.
நன்றி ஐயா