ஆர்.எஸ்.எஸ். ராமர் படத்தை தங்கள் அலுவலகத்தில் வைக்க மாட்டார்கள் ....!
பிரிவினையின் பொது அகதிகளுக்கு நிவாரணப்பனிகளை செய்த தொண்டர்களில் சிலர் ஆர் எஸ் காரர்கள் ! காந்தியடிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களைப் பாராட்டினார் ! அந்த தொண்டர்களின் தலைவர் ஒருவர் காந்தியடிகளை ஆர்,எஸ்,எஸ் அலுவலகம் வந்து பார்வை இடும்படி கரட்டுக் கொண்டார் !
காந்தி அடிகளும் ஒரு நாள் சென்று பார்த்தார் ! ஆர்வத்தோடு அவருக்கு அலுவலகத்தைச் சுற்றி காண்பித்தார்கள் !
ராணா பிரதாப் சிங் , ஜான்சி ராணி ,சிவாஜி என்று வண்ண ஓவியங்கள் பிரும்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன ! மகிழ்ச்சியோடு பாராட்டிய அடிகள் விடை பெற்று கொண்டு கிளம்பும் சமயம் தலைவர் !
"ஐயா ! எங்கள் அலுவலகத்தைப் பார்த்திர்கள் ! அது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று சொல்லுங்கள் "என்று கேட்டுக்கொண்டார் !
"நான் ஒரு ராம பக்தன் ! ஒரு சிறிய ராமர் படத்தை எங்கேயாவது ஒரு மூலையிலாவது வைத்திருக்கலாம் " என்றார் காந்தியடிகள்
"ராணா வும்,ஜான்சி ராணியும் ,சிவாஜியும் முஸ்லிம்களை எதிர்த்து போராடினார்கள் ! ராமர் முஸ்லிம்களை எதிர்த்து போராட வில்லையே " என்றார் அந்த தலைவர் !
காந்தி சொல்லியே வைக்க மறுத்தவர்கள் மற்றவர்கள்
சொல்லியா வைக்கப் போகிறார்கள் !
( நம்ம ஊர் அபகிர்த்தி வாசங்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ! பதில் தெரியாவிட்டால் ஊசிப் போன தலைவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் )
1 comments:
அறியாத செய்தி ஐயா
நன்றி
Post a Comment