கவலைப் படாதே தோழா !!!
'84 ப் போல இதுவும் கடந்து போகும் .....!!!
1984 ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார் ! அதனை அடுத்து ராஜீவ் காந்தி பிரதமரானார் !
உடனடியாக மக்களவைத் தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது !
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 404 இடங்கள் கிடைத்தன ! அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 414 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியது காங்கிரஸ் !
பின்னால் திரும்பிப் பார்த்தால் வெகு துரத்தில் என்.டி . ராமராவ் அவ்ர்களின் தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களோடு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நின்றது !
அதற்கு அடுத்து 22 இடங்களைப் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி இருந்தது ! இன்றய ஆளும்கட்சியான "பா.ஜ.க " இரண்டு இடங்களோடு நிறுத்திக்கொண்டது !
ராஜீவ் காந்தி நினைத்திருந்தால் எந்த சட்டத்தையும் ,ஏன் அடிப்படை அரசியல்சட்டத்தையும் திருத்தியிருக்கமுடியும் ! அன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற மார்க்சிஸ்டுகளும், தெலுங்கு தேசமும் பலவீனமாகவே இருந்தார்கள் ! அவ்ர்களை புற்க்கணிபது என்பது அன்றய ஆளும்கட்சிக்கு பெரிய விஷயமல்ல !
எதிர்ப்பு இல்லாத பலவீனமான அரசியல் களத்தில் அன்றய ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணியை சிறப்பாக செய்தன ! குறிப்பாக "Indian express " மற்றும் "The Hindu " பத்திரிகைகள் மிக சிறப்பாக அப்பணியினைச் செய்தன !
"போபர்ஸ் " ஊழல் வெளிப்பட்டதும் அப்போது தான் !
ஐந்து ஆண்டுகள் கழித்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களையே பெற்முடிநதது ! வி.பி. சிங் தலைமையில் ஐக்கிய முன்னணிஆட்சி அமைந்தது !
நரேந்திர தாமோதர் மோடி பிரதமராகப் போகிறார் ! நமக்கு வருத்தமில்லை !
முழுக்க முழுக்க ஒரு ராஷ்ட்ரிய சங் பிரசாரகர் ஆட்சிகட்டிலில் அமரப் போகிறார் !
அந்த ஆர்.எஸ் எஸ் காரரை இந்தியாவின் தலைவராக மாற்றுவது எதிக்கட்சிகளின் கடமை ! பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலைமையில் அந்த கடமையை ,ஊடகங்கள் செய்ய வேண்டும் !
செய்வார்களா ?
நம்புவோம் !.
0 comments:
Post a Comment