Sunday, May 11, 2014

(புராண காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு கற்றுக்கொடுத்தவர் "ஜாபாலி " )

{இது ஒரு மீள் பதிவு } 
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Thursday, March 03, 2011

ஜாபாலி......
சிறு கதை


ஜாபாலி (காஸ்யபன்)

சத்யகாமனை நந்தவனத்திற்கு அனுப்பினாள் பாலா.சிறுவன் துள்ளிக் குதிதுக் கொண்டு ஓடினான்.சக தோழி ஜனகவல்லியிடம் சிறுவனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு பாலா நீராடச்சென்றாள்.

உள்ளே சென்ற அவளை பின்புறமாக இரண்டு கரங்கள் அணைத்துக் கொண்டன.ஆண்மை அவளை உறுத்த முன்புறம் மார்பகங்களை இறுக்கி...அவள் வலியில் "ஸ்ஸ் ஆஆ"என்றாள்.இன்பவெறியில்கூவுவதாக நினத்து அவன் மேலும் இறுக்கினான்.நீராடி முடித்து ஆடைகளை அணியாமல் போர்த்திக் கொண்டே உள்ளேசென்றாள் பாலா.தளபதியின் பேரன் அவளை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு நீராடும் அறையிலிருந்து வெளியேறினான். 

அந்தப்புரங்களில் எழுதப்படாத ஒப்பந்தங்கள் உண்டு அரசன் ராணியிடம் விருப்பம் போல உறவாட முடியாது.இளவரசி, பிரபுக்களின் மனைவி என்று எவராக இருந்தாலும் அவர்கள் விரும்பினால் தான் கணவன்மார்கள் அவர்களிடம் உறவு வத்துக்கொள்ளமுடியும்.

தர்பாரிலும் மன்றங்களிலும் அரசன் தளபதி அமைச்சர்களருகில் அழகுப்பதுமையாக அமர வேண்டிய ராணிகளும் இளவரசிகளும் உடலழகைப் பதுகாத்துக் கொள்ளவேண்டும்.அவள் அவளுடைய "இச்சை"யைக் கூட கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் அரசனும்,அமச்சரும், தளபதியும்...அவர்களுக்குத்தான் அந்தப்புரத்தில் ஏராளனமானதாதிகள், தோழிகள் இருக்கிறார்களே.

பாலாவும் ஒரு தாதி.அவளுக்கும் இப்படிபட்ட வாழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது.

"அம்மா!நான் எப்போது குருகுலத்திற்கு செல்வேன்?" என்று சத்யகாமன் கேட்கும்போது பாலா மகனை ஆரத்தழுவிக் கொண்டாள்." உன் பிறந்த நாள் வருகிறது.அதன் பிறகு உன்னை அனுப்புவேன்" என்றாள் பாலா> 

சக தோழி ஜனகவல்லி :களூக்" என்று சிரித்தாள்.சத்தியகாமன் உயர்ந்து நிர்க்கும் ஜனகவல்லியை கழுத்து வலிக்கும் அளவுக்கு தலையை தூக்கிப் பார்த்தான்.

"ஏன் சிரிக்கிறாய்?" பாலா கேட்டாள்.

" குருகுலத்தில் உன் மகனுக்கு இடம் உண்டா?"

"ஏன் இருக்காது?"

" குழந்தையை வைத்துக்கொண்டு இந்த விவாதம் வேண்டாம்" என்றாள் ஜனகவல்லி.தூரத்தில் தளபதி வருவது தெரிந்தது.இருவருமே பிரிந்து சென்றுவிட்டார்கள்..

பாலா யோசனையில் இருந்தாள்.தளபதி அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் தோளைப் பற்றினார்.அறுபது வயது ஆனாலும் கைகளின் பலம் பாலாவின் தோள் எலும்புகளை நோகச்செய்தது.கண்களை மூடிகோண்டு மல்லாந்து சாய்ந்தாள்.

"நான் வியாசருடைய ஆசரமத்தில் சேரப்போகிறேன்" என்றான் சத்யகாமன்.

" முடியாது கண்ணா"என்றூ பதிலளித்தாள்ஞ்சனகவல்லி.

"ஏன்?" 

"நீ எந்த வம்சம் என்று வியாசன் கேட்பான்"

" நான் எந்த வம்சம்?

" உன் அம்மாவைக் கேள்""

சத்யகாமன் ஓடிச்சென்று அம்மாவிடம் கட்டிகொண்டு விழுந்தான்."அம்ம! நான் எந்த வம்சம்?"..பாலா பதில் சொல்லவில்லை.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சத்யகாமன் யாருடைய வம்சம்...அமச்சரின் அந்தப்புரத்தில் சேவை செய்துகொண்டிருந்தேன். அமைச்சர்...அவரின்மைத்துனர்... அமைசரின் தம்பி..அப்போது ஜனித்தவனா?

தளபதி,தளபதியின்மகன் ,பேரன்...ஆடு...மாடு...நாய் ...ஆகியவற்றிற்கு உறவு முறை உண்டா?

சத்யகாமன் அம்மாவை உலுக்கினான்.நினைவு பெற்ற பாலாஅவனிடம் கூறினாள்" "வியாசனிடம் போகாதே.....அவனே....நீ கவுதமரின் ஆசிரமத்திற்கு போ...நான் சொல்வதைக் கவனமாகக் கேள்...அவரிடம் அட்சரம்பிசகாமல் சொல்....உன் பெயர் இனி சத்யகாமன் இல்லை...ஜாபாலி...பாலாவின் மகன் ...ஜாபாலி. 

ஹரிதுருமாத கௌதமரின் ஆசிரமத்தின் முன் சிறுவன் நின்றான்.

" உன் பெயர் என்ன குழந்தாய்?"

"ஜாபாலி"

" அது என்ன புதுப் பெயர்?" 

" என் தாயின் பெயர் பாலா.அவர்தான் என் பெயரை மாற்றீ ஜாபாலி என்று கூறச்சொன்னார்."

"நீ எந்த வம்சம்?" 

"பாலாவின் வம்சம்"

"உன் தந்தையின் பெயர் என்ன?" 

" எனக்கும் தெரியாது. என் தாய்க்கும் தெரியாது."

... " உன் தாய் எங்கிருக்கிறாள்?"

"தளபதியின் அந்தப்புரத்தில் ....அதற்கு முனபு அமைச்சரின் அந்தப்புரத்தில். நான் அமைச்சர் குடும்பத்தைச் சார்ந்தவனா? தளபதிகுடும்பத்தைச் சார்ந்தவனா? தெரியவில்லை?" " " உன் தாயார் என்ன சொன்னார்?"

"எவனால் ஜனித்தாய் என்பது முக்கியமல்ல மகனே.நீ பலா பெற்றெடுத்த மகன் ஆகையால் உன் பெயர் இனி ஜாபாலி என்றாள்"

"நீ வெறும் ஜபாலி அல்ல.உண்மையைச்சொன்னவன்.சத்யகாம ஜாபாலி. வா குழந்தாய்...வேதம் மட்டுமல்ல....உபநிஷத் மட்டுமல்ல....தர்க்க சாஸ்திரமும் உனக்குக் கற்பிப்பேன்" என்றார் கவுதமர்.

( ஆதரம்: சந்தோக்ய உபநிஷத்) (செம்மலர் மே மாதம் 2004ம் ஆண்டு பிரசுரமானது)

0 comments: