Wednesday, May 21, 2014

குத்தலும், குதர்க்கமுமாக .....!!!


மே மாதம் 20ம் தேதி நடந்தது ! முக  நூலில்  பார்த்தேன் ! நாடாளு மன்ற மைய மண்டபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தார்கள் ! 

இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் சத்ருக்னான் சின்ஹா ,வினோத் கன்னா , ஹேமமாலினி ஆகியோர் அமர்ந்திருந்தனர் ! முக்கியமான தலவர்கள் மேடையில் வீற்றி ருந்தனர் ! 

மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளும்,உரைகளுமாக ,பார்வையாளனை நெகிழவைத்தன !

மைய மணடபத்தின் நுழைவாயிலின் வாயிற்படிகளில் தன்  சிரம் வைத்து பிரதமராக பதுவி ஏற்க விருக்கும் நரேந்திர தாமோதர மோடி வணங்கிய போது கொஞ்சம் உணர்ச்சி  பளிச்சிட்டது உண்மைதான் !

நிகழ்ச்சிகள் இந்தி மொழியில் நடந்தன ! 

என்னால்புரிந்துகொள்ள  முடியுமென்றாலும் நல்ல இந்தியை புரிந்துகொள்ள வக்கீலாக  நாகபுரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்  என் மருமகனும் உடன் இருந்தார் ! அவரும் உணர்ச்சிப்பிழம்பாகவெ இருந்தார் !

மூதறிஞர் லால் கிஷன் அத்வானி ' மோடி  அவ்ர்களின் "கிருபை"யினால் நமக்கு  இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது ! அவரைப் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன் " என்று கூறிய போது கரவொலி அதிர்ந்தது ! பெரியவர் அத்வானியின் முகம் உணர்ச்சிகளால் இறுகி பார்த்துக் கொண்டிருந்தவர்களை சுண்டியிழுத்தது !

நரேந்திர மோடி இதனை தன்னுடைய ஏற்புரையில் குறிப்பிடவும் செய்தார் ! 

"இங்கு  வாஜ்பாய் அவர்கள் இல்லையே ! இருந்தாலும் அவருடையா ஆசிகள் என்னோடு இருக்கும் ! " என்று மொடி   நினைவுகூர்ந்தார் ! 

"அத்வானி அவர்களே  !  இன்னொரு முறை அப்படிச்சொல்லாதீர்கள் ! ஒரு தாயீற்கு மகன் செய்வதை  "கிருபை " என்று கூற முடியுமா ! கட்சிதான் எனக்கு தாய் ! இந்த தேசம் தான் எனக்குத்தாய் ! தாய்க்கு செய்யும் சேவையை "கிருபை" என்றுகூறலாமா ?தயவு செய்து இனி அப்படிகூறாதீர்கள் ! "
என்று குறிப்பிட்டார் ! அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகிலிருந்த காண்ணடி டம்ளரிலிருந்து குடிநீரை பருகினார் !

இதற்கு முன்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஒரு நேரடி நேர்காணலில் உணர்ச்சி மேம்பட்டு குடிநீர் அருந்தியது நினவு தட்டியது !

"மாமா ! ரொம்பவும் உணர்ச்சிகரமான நிகழ்ச்சி இல்லையா ?" 
என் மருமகன் கேட்டான் !

"ஆமாம் ! அத்வானியும் சரி !மோடியும் சரி ! உணர்ச்சிவசப்பட்டிருந்தனர் ! ஆனாலும் ...! "

"என்ன மாமா !ஆனாலும் ! "

"அத்வானி "குத்தலாகவும்" மோடி "குதர்க்கமாகவும்" .......!"  மருமகன் இடை மறுத்தான் !

"எனக்கும்தான் தோறியது ! மாமா !" என்றான் !

எங்களுக்கு மட்டும்தானா ???


















































































 




0 comments: