Saturday, May 17, 2014

வரலாறு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் ........!!!


1967 ம் ஆண்டு மே.வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்பட்டது!

அஜாய்குமார் முகர்ஜி முதலமைச்சராகவும் ஜோதிபாசு துணை முதல் அமைசராகவும் பதவி ஏற்றனர் ! பொறுக்குமா ! காங்கிரஸ் தலமை ! ஆட்சி கவிழ்ந்தது ! 

அடுத்து தேர்தல் நடந்தது ! மார்க்சிஸ்டுகள் மிகபெரிய கட்சியாக வந்தார்கள் ! மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவந்து மார்க்சிஸ்டுகளை தடுத்தது !

சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் அரைப்பாசிச ஆட்சி நடந்தது ! அப்போது சத்திர பரிஷத் தலைவர்களாக (குண்டர்களாக ) பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி,சுபரதோ முகர்ஜி ,மம்தா பானர்ஜி ஆடிய ஆட்டம்  சொல்லமுடியாதது !
1972ம் ஆண்டு மீண்டும்தெர்தல் ! கட்சி ஊழியர்கள் விரட்டப்பட்டனர் ! தலவர்கள் தொகுதிக்குள் போக முடியாது ! ஜோதிபாசு அவர் தொகுதிக்குள் போக முடியவில்லை ! 

இந்த தேர்தலில் நான் கலந்துகொள்ளமாட்டேன் என்று அவர் அறிவித்தார் !
Jothi Basu concedes defeat என்று கோட்டை எழுத்துக்களில் பத்திரிகைகள் எழுதின!

மார்க்சிஸ்டுகள் 14 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் ! பதினான்கு பெரும் சட்டமன்றம் சென்று பதவியை ஏற்க மறுத்தனர் ! பதவியை ஏற்காததால் மறு தேர்தல் நடத்தமுடியவில்லை ! சட்டமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை ! ஏனென்றால் அவ்ர்கள் பதவி ஏற்கவில்லை !

தமிழகத்தில் 1971ம் ஆண்டு தேர்தல் நடந்தது ! தன்னந்தனியாக மார்க்சிஸ்டு கட்சி தேர்தலை சந்தித்தது !

சர்வதேச அனாதைகள் என்று பத்திரிகைகள் வசை பாடின !  ரஷ்ய கட்சியையும், சீன கட்சியையும் விமரிசிக்கும் காரணத்தால்  இருவரும் ஆதரிக்கவில்லை !

இந்திரா காங்கிரஸ், தி.மு.க கூட்டு தேர்தலில் உருவானது !

கிட்டத்தட்ட 60 சட்டமன்ற தொகுதிகளிலும் , முடிந்த அள்வு நாடளுமன்ற தொகுதிகளிலும் நின்றோம் !

தோழா ! அத்துணை தொகுதிகளிலும் தோற்றோம் ! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நின்ற மறந்த  ப.ராமமூர்த்தி அவர்கள் டெபாசிட் இழந்தார் ! போட்டியிட்ட  அத்துணை பெரும் டெபாசிட் இழந்தனர் !

திண்டுக்கல் தொகுதியில் நின்ற  எ.பாலசுப்பிரமணியம் மட்டுமே டெபாசிட்டை வாபஸ் வாங்கினார் !    

மத்திய காங்கிரஸ் ஆட்சி நர வேட்டை ஆடியது ! தி.மு.க துள்ளாட்டம் போட்டது !

அவசர நிலையம் வந்தது ! தமிழக ஆட்சி கலைக்கப்பட்டது ! கருணா நிதியின் கொட்டம் அடங்கியது !

அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அ .தி.மு.க கூட்டணி ஏற்பட்டது ! சட்டமன்றத்தில் 12 உறுப்பினர்களோடு மார்க்சிச்டுகள்  நுழைநதனர் ! 

மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு தலைமையில் இடது முண்ணணி ஆட்சி பதவி ஏற்றது !

தொடர்ச்சியாக  35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது !

வரலாறு கற்றுக்கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் !

கற்போம் !!!







2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கற்றுக் கொண்டே இருப்போம் ஐயா
நன்றி

”தளிர் சுரேஷ்” said...

பழைய வரலாறுகளை அறிந்துகொள்ள முடிந்தது! நன்றி!