Monday, May 05, 2014

"மனிதன் மட்டும் நிரந்தரமானவன் "Syamalam Kashyapan
7 mins · Edited · 
மனிதன் மட்டுமே நிரந்தரமானவன்....!!!
மனிதனின் தேடலில் மிகவும் முக்கியமானது அவன் இயற்கைக்கும் தனக்குமுள்ள தோடர்பு பற்றி அலைந்ததாகும்.! அப்படி அலைந்தவன் "கல்" இடறிக் கீழே விழுந்தான் ! இடறிய கல்லை எடுத்து கூத்தாட ஆரம்பித்தான் ! அவனுடைய தேடலும் அதோடு நின்றது !
2000 வது ஆண்டு பிறந்த போது " சென்ற ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த முக்கிய மான நிகழ்வு எது ?" என்று பத்திரிகையாளர்கள் அமார்த்திய சென் அவர்களிடம்கேட்டனர் ! "இசுலாம் இந்தியாவில் அறிமுக மானது தான்" என்று அவர் பதில் கூறியுள்ளார் !
தொன்மையான மதங்களில் மிகவும் இளமையானது இசுலாம் ! அதன் காரணமாகவே மனித வளர்ச்சியின் கூறுகளுக்கான நல்ல அம்சங்களுமந்த மதத்தில் கூடுதலாக இருப்பதாக அறீஞர்கள் கூறுவதுண்டு !
கிறித்தவ்ர்கள் நாங்கள் 2000 ஆண்டு மூத்தவர்கள் ! ஆகையால் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள் !
2500 ஆண்டுகளுக்கு முன் சித்தார்த்தன் வந்தான் ! புத்தான் ஆனான் ! புத்தமதம் தோன்றியது !
சமகாலத்தில் தோன்றியது தான் சமணமும் !
இவை எல்லவற்றிர்க்கும் மூத்தது இந்து மதம் ! நாங்கள் தான் முதலும்முடிவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்
விஷயம் என்ன வென்றால் நபிகள் நாயகம் அவதரிப்பதற்கு முன்பே அரேபிய மணல் வெளிகளில்
மனிதன் இருந்தான் - வாழ்ந்தான் - செத்தான் !
அவன் என்ன மதம் ?
கிறிஸ்து பிறப்பதற்குமுன்பும் ஐரோப்பிய நாடுகளில்மனிதர்கள் இருந்தார்களே!
அவர்கள் என்ன மதம்?
புத்த பிட்சுக்களைபிராமணிய மதத்தினர் அடித்து விரட்டினர் ! புகலிடம் தேடி பர்மாவுக்கும்,இலங்கைக்கும்,சீனாவுக்கும்,ஜப்பானுக்கும்சென்ற அவர்கள் அங்கே புத்தமதத்தை வளர்த்தனர் ! இவர்கள் போவதற்கு முன்பே அங்கு மனிதர்கள் இருந்தார்களே ?
அவர்கள் என்ன மதம் ?
மத்திய ஆசியாவிலிருந்து "இந்துகுஷ் "மலயை தாண்டி வந்தவர்கள் என்ன மதம் ?
அவர்கள் வரும்பொது ஹரப்பாவிலும்,மெகஞ்சதாரவிலும் வாழ்ந்தார்களே அவர்கள் என்ன மதம் ?
ஒருமதமோகொட்பாடோ உர்வாக வேண்டுமானால் மனிதன் வேண்டுமே ?
மனிதனே இல்லாமல் மதமா ? அப்படியானால் இத்தனை மதங்கள் வேண்டாமே ?
உண்மை வேறு விடமாக உள்ளது !
மனிதன் சாசுவதமானவன் !
மதம் என்பது அவனுக்கு ஏற்பட்ட விபத்து !
Man is eternal ! Religion is accidental !
அது இந்து மதமாக இருக்கலாம் ! புத்தம் சம்ணம்,கிறிஸ்துவ இசுலமாக இருக்கலாம் ! ஏன் ?ஒஷோ என்றும் ஒஹோ என்றும் உருவாகலாம் ! புதிய புதிய மதங்களும் கடவுள்களுமுருவாகிக்கோன்டே இருப்பார்கள் !
காரணம் மதமோ கடவுளோ நிரந்தரமல்ல ! மனிதன் நிரந்தர மானவன் !
இயற்கைக்கும் தனக்கும் உள்ள தோடர்பை தேடச்சென்றவன் கடவுள் என்ற கருத்தோடு முடித்துக் கொண்டான் !
கடவுளைத்தேடிச்சென்ற முனிவர்கள் ,ஞானிகள், மவுனமானார்கள் ! அவர்கள் கட்வுளைக் காணவில்லை ! மனிதனையே கண்டார்கள் !
ராமகிருஷ்ணரும்,விவேகானந்தரும்,வள்ளலாரும் இதனையே நிலை நிறுத்தினார்கள் !
அப்படியானால்மதம் தேவையில்லயா?என்ற கேள்வி எழுகிறது !
தேவை உள்ளவர்கள் வைத்துக் கொள்ளட்டும் !அதற்காக மற்ற மதத்தினர் மீது குரோதம்கொள்ள வேண்டாம் ! எந்த ஒருமத்திற்கும் ஆதரவான்போக்கை அரசு கடப்பிடிக்க வேண்டாம் ! அரசு விவகாரங்களில் மதம் தலையுட வேண்டாம் !
எந்த மதத்தோடுமரசு சாரதிஎஉக்கும் தன்மையையே மதஸ் சார்பின்மை என்கிறோம் !
இந்த கருத்தாக்கம் இன்றோ நேற்றோ உர்வானதல்ல ! 1800 ஆண்டுகளுக்குமுன்பு உருவானது !
கிறித்துவர்களும்,பாகன் களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக் கொண்டிருந்ததை நிறுத்த 
ரொமாபுரியில் இருந்த அறிஞர்களும்,தத்துவ ஞானிகளும் உருவாக்கிய கோட்பாடாகும் இது !
அரசு மதத்திலும்,மதம் அரசிலும் தலயிடக்கூடாது என்ற கருத்து மெல்ல மெல்ல உருவாகி 
வலுப்பேற்றது !
secularisam என்ற மதச்சர்பின்மை கோட்பாடூ உருவானது !
இதற்கு நேர்மாராக மதம் புனிதமானது என்ற sacred school of though என்ற கருத்தும் வந்தது !
இறுதியில் மதச்சார்பினமை என்பது நாகரீக சமூகத்தின் ஒப்பந்தமாக உருப்பேற்றது !
யாருடைய விருப்பத்தின் காரண்மாகவோ,பெருந்தன்மையின் காரண்மாகவோ உருவாகவில்லை !
மனித குலம்தன்னைனாகரிகப்படுத்திக் கொள்ள உருவனது !
இந்தியா சுதந்திரம் பெற்றதும் முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பாகிஸ்தான் உருவானது ! இசுலாம் அரசு மதம் என்று பாகிஸ்தான் அறிவித்தது !
இந்தியாவிலும் அரசு மதம் இந்துமதம் என்று அறிவிக்க வேண்டும் என்று குரலெழும்பத்தான் செய்தது !
நம்து அர்சியல் நிணயசபை விவாதித்தது ! நமது முன்னோர்கள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று மிகச்சரியாக அறிவித்தார்கள் !
நாம் அதனக் காக்கும்கடமையைக் கொண்டவர்கள் !
காப்பொம் !!!
Like

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மதச்சார்பற்ற நாடு என்னும் நிலையினைக் காக்கக் கடமைப் பட்டவர்கள்தான் நாம்.
மதம் ஏதாயினும் முக்கியம் மனிதம்.
நன்றி ஐயா

அப்பாதுரை said...

'மத சார்பற்ற' என்பதே முட்டாள்தனம்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே ! கலப்படமற்ற நாத்திகன் அப்படிக் கூறுவதில் தவறில்லைதான் ! இது பற்றி நீங்கள் விரிவான பின்னூட்டமிட்டிருக்கலாம் ! அது ஒரு நல்ல விவாதத்தீற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் !---காஸ்யபன்.