skip to main |
skip to sidebar
எல்லாப் பார்பனர்களையும் ஒழித்து விட்டால்
சாதி அழிந்து விடுமா ....?
"தி இந்து " பத்திரிகையில் பணியாற்றிவரும் "சமஸ் " அவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் !
உடைக்கமுடியாத அடித்தளத்தை உருவாக்கி சாதிய கட்டுமானத்தை "மனுதர்ம " விதிகளும் ,பார்ப்பனர்களும் தன்னந்தனியாக அழியாமல் காத்து வரமுடியுமா ? என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார் !
பார்ப்பனீயம் "காலத்திற்கு" தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு வாழ்கிறது என்று இதற்கான பதிலாகச் சொல்லப்படுகிறது !
எனக்கு தனிப்பட்ட முறையில் அருமையான நண்பர்களுண்டு ! தத்துவார்த்த நிலையில் என்னோடு உடன் படுகிறவர்களும் உண்டு ! உடன் படாவிட்டாலும் என்னை நேசிப்பவர்கள் அதிகம் !
"சாதி ஒழிய வேண்டும்" என்று நினைப்பவர்கள் அவர்கள் !அதன் மூலம் பார்ப்பனியம் என்றும் அதனை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும்கருதுபவர்கள் அவர்கள் !
வெவ்வேரு "சாதி"(?) யைச்சர்ந்த எங்களிடையே விவாதம் வந்தது ! சாதீய முறைமையை கடைப்பிடிபதில் அவரவர் சாதியைப்பற்றி விமரிசிக்க ஒப்புக்கொண்டாம் ! இறுதியில் அது தேவையற்றதாக வெறும் வார்த்தை ஜாலமாக ,இறுதியில் அத்தனைக்கும் மூலகாரணம் "பார்ப்பனியம் "என்றுமுடிந்தது !
அமேரிக்கா ஹிரோஷிமாவிலும் ,நாகசாகியிலும் குண்டு போட்டதற்குக் காரணம் தமிழ்நாட்டிலுள்ள "பாப்பான் " தான் என்று திராவிட கழகம் சொல்லலாம் !
அது போன்று எங்கள் விவாதம் விதண்டாவாதமாக முடிந்தது !
மகாராஷ்ட்ராவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு "கயர்லாஞ்சி " ஒருபாடமாக அமைநதது !
பையாலால்போட்மாங்கேயின் குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்து ஒட்டு வீடு கட்டினார்கள் ! இதைப்பொறுக்காத மேல்சாதியினர் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள் ! பையாலாலின் மனைவி,மருமகள்,மகள் ஆகியோரை நிர்வாணமாக்கி ஊர்வலம் விட்டர்கள் ! பையாலாலின் ,மகனையும், அவன் தாயை ,சகோதரியை புணர வற்புறுத்தினார்கள் ! அவன் மறுத்தபோது அவன் குறியை வெட்டி எறிந்தார்கள் ! அந்தப் பெண்களினுறுப்புகளில் கட்டைகளைச் சொறுகி கொன்றார்கள் !
இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் எந்தச் "சாதி " ?
இருபது பெண்கள்,பத்தொன்பது குழந்தைகள். ஐந்து ஆண்களை துடிக்க துடிக்க தீயிலிட்டு பொசுக்கிய கோபால கிருஷ்ணன் ஐயரா ? ஐயங்காரா?
பேகம்பூரில் தோல்பதனிடும் தொழிலாளர்களோடு உண்டு உறங்கி அவர்களை மனிதர்களாக நடமாட வைத்த எ.பாலசுப்பிரமணியம் மறைந்தபோது "ஒரு செம்மலர் உதிர்ந்தது " என்றவர்கள் "அமிர்தலிங்கம் ஐயர் மகன் தனே "என்று ஏகடியம் பேசியதையும் நாம்கேட்கத்தானே செய்தோம். !
தான் ,,தனக்கு,என்று இல்லாமல், குடும்பம் கொள்ளமல் ,துப்புரவுத் தோழிலாளர்களுக்காக வாழ்ந்து "தீக்கதிர்" அலுவலக மாடிப்படிகளையே தன உலகமாக வாழ்ந்த "விருத்த கிரி " ஐயர் தானே !
சுய சாதியை, சாதீய கட்டுமானத்தை உடைதெறிய வந்த "பார்பனர்கள் "
அதிகமா ! இல்லை மற்றவர்களா ?
மக்கள் கலை இலக்கிய வாதிகளின் கொள்கையினை ஏற்றுக்கொண்டவன் இல்லை நான் ! ஆனால் அந்த இயக்கத்தின் மாதையனையும்,வீராச்சாமியும் பார்பனர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்கிறேன் !
தியாகராஜன் என்ற சின்னகுத்தூசியை மதிக்கிறேன் !
வேம்பு ஐயர் மகன் சங்கரன் என்றாலும் "ஞாநி " யை மதிக்கிறேன் ! !
சாதியை ஓழிக்கும் வேள்வியில் பார்ப்பனர்களை ஒழிக்கும் பொது இந்த நல்லவர்களையும் ஒழித்து விடுவோமோ என்றும் பயப்படுகிறேன் !!!
தத்துவார்த்த நிலையிலென்ணொடு உடன் படுகிறவர்களும் உண்டு
2 comments:
உண்மைதான் ஐயா
அனைத்து இடங்களிலும்
அனைத்து நிலைகளிலும்
நல்லவர்களும் உண்டு
நல்லவர் அல்லாதாரும் உண்டு
நன்றி ஐயா
திண்ணியம் கொடுமை நடந்த போது நான் அதன் பக்கத்து ஊரில் தான் இருந்தேன். பாதிக்கப்பட்டவர்களையும், பாதகம் செய்தவர்களையும் கண்டிருக்கிறேன். நீதித் துறையில் மிகப் பெரிய பதவியில் இருந்து ஒய்வு பெற்ற மனிதர்கள்( என் நண்பனின் சித்தப்பாக்கள்.) தம் சாதியினரை வழக்கில் இருந்து காப்பற்ற பெருமுயற்சி எடுத்தார்கள். சாதிக் கொடுமையில் பார்ப்பனர்கள் பெயர் மட்டும் வெளிவருகிறது ... ஆனால் மற்ற சாதியினரின் பெயர்களோ , செய்கைகளோ பெரிய அளவில் வெளித் தெரிவதில்லையே , ஏன் அய்யா ?
Post a Comment