Wednesday, December 24, 2014

        

"pk "   

(இந்தி திரைப்படம் )


2014ம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் என்று நான் கருதுகிறேன்  அது என்ன "PK " என்ற தலைப்பு ?

கேரளத்திலும் ,இலங்கையிலும் ஆப்பிரகாம் கோவூர் என்ற பகுத்தறிவு வாதி (rationalist ) இந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்தார் ! அவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளை ஒரு பாத்திரத்தில் புகுத்தி கோவூர் என்று அழைக்கப்பட்ட அவரின் மாதிரியாக "pk " என்று வைத்தேன் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி ! (K  for kovoor )


கதை 

வேற்று உலகத்திலிருந்து   பூமியை அறிய வருகிறான் ஒருவன் ! அவன் மிண்டும் தன வாகனத்திற்கு செல்ல அவனி டம் ஒரு REMOTE உள்ளது ! அவன் இறங்கிய இடம் ராஜஸ்தானம் ! அவனுடைய REMOTE ஒரு திருடனால் களவாடப்படுகிறது ! அவனை விரட்டி செல்லும்  பொது திருடனின் டேப்ரி கார்டார் அவன் கையில் சிக்குகிறது ! அந்த வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் தான் "PK "!

மக்களைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ! அவர்களுடைய தோல் பலநிறத்தில்,பச்சை,சிவப்பு,மஞ்சள்என்று பலவண்ணங்களில் உடலிலிருந்து வழிந்து கொண்டு இருக்கிறது !  பின்னர் புரிந்து கொள்கிறான் ! அவர்கள் தங்கள்தோலுக்கு பாதுகாப்பாக ஆடை அணிந்துகொள்கிறார்களென்பதை ! டேப்ரிகார்டரை கொண்டு தன்  மானத்தைமறைத்துக்கொள்கிறான் !  

அவனுக்கு பேச்சு மொழி தெரியாது !ஆனால் ஒருவர் கையைதோட்டால் அவனால் அவர்கள் நினைப்பதைபுரிந்துகொள்ள முடியும் ! அறிந்து கொள்ளமுடியும் ! ஆண் - பெண் என்று வித்தியாசம் பாராமல் தொடுவதால் அவன் அடிவாங்குகிறான் ! அவனை செகாவத் என்பவர் கப்பற்றுகிறார் ! அவனுடைய remote ஐ  டெல்லிபோய் தேடும்படி சொல்கிறார் !

அங்கு அவன் ஜகஜனனி என்ற பெண்ணை சந்திக்கிறான் ! ஜக்கு என்று அழைக்கப்படும் அவள் பெல்ஜியத்தில்  ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில்  பணியாற்றியவள் ! பெல்ஜியத்தில் சப்ஃரோஜ் என்ற இளைஞனைக் காதலிக்கிறாள்! அவனொரு பாகிஸ்தானி ! ஜக்குவின் தந்தை இதனை ஏற்க மறுக்கிறார்! தன குருஆன சாமியாரை கேட்கிறார் ! சாமியார் இந்த திருமாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார் !

மீறி  சர்ச்சில் திருமண  ஏற்பாடுகளை இருவரும் செய்கிறார்கள் ! தகவல் தவறால் இருவரூம்பிரிய நேருகிறது ! ஜக்கு பெல்ஜியத்திலிருந்து புது டெல்லி வருகிறாள் ! அங்குதான் அவள் pk  யை சந்திக்கிறாள் ! தொலை  காட்சி அறிவிப்பாளறான  அவள் pk வை  வைத்து நிகழ்ச்சி நடத்த விரும்புகிறாள் !

மக்கள் எதையும் "பகவான் " செய்வார் என்று வாழ்வது pk வுக்கு ஆச்சரியமளிக்கிறது !

தன்னுடைய remote "பகவான் " மூலம்கிடைக்குமா ?என்று தேடுகிறான் ! அனுமார்,கிருஷணர் ,ஏசு,நபிகள், புத்தர் என்று யாருமே அவனுக்கு உதவவில்லை ! 

அவனுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது ! இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவன் என்கிறீர்களே ! உங்கள்  உடம்பில் அடையாளமிருக்கிறதா ! என்று கேட்கிறான் ! மருத்துவமனைக்குச் சென்று பிறந்த குழந்தயின் உடலில் அடையாளம் இருக்கிறதா என்று சோதிக்கிறான் !

இறுதியில் ஜக்குவின் குடும்பசாமியாரிடம் அவனுடைய ரிமோட் இருப்பது தெரிகிறது ! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் pk -சாமியார் விவாத மேடையில் சாமியார் தோற்க remote  ஐ பெற்றுக்கொண்டு தன்கிரகத்திற்கு செல்கிறான்  pk  !


நமக்கு ஒரு சங்கடம் வந்தால் நாம் உடனடியாக தீர்வை தேட கடவுளிடம் தான் செல்வோம் ! ஆனால் கடவுளுக்குத்தான் எத்தனை "மானேஜர்கள் " ! இவர்களை சாடுவது தான் இந்தப்படத்தின் ஆதார சுருதி ! அற்புதமான திரைகதை அமைப்பு !

"pk " வாக நடிக்கும் அமீர் கான் சிறப்பு ! குறிப்பாக முதல் பாதியில் பேசாமல்.தன கண்கள்,உடல் மொழிமூலம் தன்னுடைய பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் !

"பகவான் ஹை கஹாங்  ரே தொ" (கடவுள் எங்கே இருக்கிறார்) என்ற பாடலுக்குப்பின் அவர் கணபதி,சரஸ்வதி ,கிருஷ்ணர் சிலைகளுக்கு முன்  நின்று பேசும் போது நம் நெஞ்சமும் கதறுகிறது ! 

ஜாக்ஜ்ஜனனியாக நடிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவேண்டும் ! மகிழ்ச்சி,துக்கம், பரவசம் என்று கண்சிமிட்டும்னேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ! anchor ஆக நடிக்கும் அவரின் உடல் மொழி பாவனைகள் பிரபலமான ஒருவரை கண்முன் நிறுத்துகிறது !

முரளிதரனின் காமிரா மிகவும் நேர்த்தி !

வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே ,அழவும், சிந்திக்கவும் ,தெளிவு பெறவும் வைக்கும் படம் 

"PK "





3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் பார்க்கின்றேன் ஐயா
நன்றி

'பரிவை' சே.குமார் said...

நானும் பார்க்கிறேன் ஐயா...

அழகிய நாட்கள் said...

நான் பார்த்து விட்டேன். அனைத்து கடவுளர்களையும் எள்ளல் தொனியில் விமர்சித்து இருக்கிறார்கள்.