எங்களின் தொழிற்சங்க தந்தை
" தோழர் நாராயணன் அவர்களுக்கு "
அஞ்சலி !!!
"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்தீர்குமுன்பு.மூத்த உழியர்கள் ஜனவரிமுதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும்கையொடு அல்ல. ஆப்பிள் ,ஆரஞ்சு, அல்லது இனி ப்புபொட்டலங்களொடுசெல்வார்கள்.
நான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர். எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த பொது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டுசெல்ல வில்லை.
கைகுலுக்கினேன்.
What Narayanan you are very Hot ? என்றார் அதிகாரி.
எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
I am always hot sir ! என்று சொல்லி வைத்தேன்
அவர் முகம் சிவந்து விட்டது.
i n That case I Will pour ice cold Water on your head !"என்றார் அதிகாரி.
அவர் என்னவோ மிகப்பெரியந கைச்சுவையை சொல்லி விட்டது போன்று வந்திருந்தசகஊ ழி யர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.என்ன செய்ய ? நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் ! அவ்ர்கிளை மேலாளர்.
காலம் மாறியது..
1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றி க்கொண்டிருந்தேன் ..
KRK பட் இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து
மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .
வந்தவர்தொழிற் சங்க நடவடிக்கை களை பற்றி விசாரித்திருக்கிறார்.பழைய ஓரியண்டல்நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டுபோட்டமனடலமேளாளரான krk பட் சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார்.
hallo ! naaraayaNan ! how are you ? என்று கைகுலுக்கினார்
நான் அன்றும் டைப்பிஸ்ட் தான்>இன்றும் டைப்பிஸ்ட் தான்.
ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.
அன்று ஒரியண்டல்கம்பெநியில் தொழிர்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழையர்சங்கம் என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது." அது தான் வித்தியாசம்."
(961ம் ஆண்டு நாராயணன் அவர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)
1 comments:
மதுரை மேல வீதியில் நான் 1961 ஜூன் மாதம் எல். ஐ. சி. யில் சேர்ந்தது முதல் எங்களுக்கு தலைவராக இருந்தவர் தோழர் நாராயணன் அவர்கள் தான். அவர் திண்டுகல்லுக்கு மாற்றல் ஆகிச் சென்றபொழுது நடந்த பிரும்மாண்டமான வழி அனுப்பு விழா போல் நான் இன்றும் ஒரு கூட்டத்தையும் அங்கு பொங்கி வழிந்த அன்பு சார் கண்ணீரையும் காணவில்லை.
மனித நேயம் மிக்க தலைவர் அவர். அவர் முகம் இன்னமும் என் கண்களின் முன் நிற்கிறது.
சுப்பு தாத்தா.
Post a Comment