Saturday, November 28, 2015


தி.மு.க - அ .தி.மு.க  லாவணி ...!


தமிழ் செம்மொழியானது யாரால் ?  தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து  இதனச் சாதித்தவர்கள் ஏராளம் ! சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு ! இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு ! இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம்  மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !  

இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான்  நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !


தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !


அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே  செய்துகொடுத்தவர்  மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !


பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !


பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள  மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !


அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி   வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் ! 


தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!


காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !


பிதம்ரிடம் எங்களை  வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !


த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள்  மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !


பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !


அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !


தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !

2 comments:

சீராளன் said...

வணக்கம் !

எம்மொழியைச் செம்மொழியாய் இன்றாக்கிக் கொண்டோரில்
இம்மியள வும்தொண்டா யாற்றவில்லை - இவ்விரண்டும்
பட்சிக்கு ஒப்பான பண்புள்ள கட்சிகளாம்
எட்டத்தில் வைப்போம் இனி !

'பரிவை' சே.குமார் said...

தமிழ் மொழி செம்மொழி ஆனது...
ஆனால் நம் கட்சிகள் அன்று உங்களுடன் வரவில்லை...
ஹா..ஹா... அரசியல்...