Thursday, June 16, 2016




இலுப்ப எண்ணையும் ,

சோப்புக் கட்டியும் .....!!!





காமினி ப்ஃன்செகா என்று இலங்கையில் ஒரு நடிகர் இருந்தார். இலங்கை திரை உலகத்தில்  மிகவும் பிரபமான இயக்குனர் நடிகர் ஆவார். அரசியலிலும் முக்கியமான புள்ளியாக இருந்தவர். வடகிழக்கு மாகாண கவ்ர்ணராக்கவுமிருந்தார்.அவர் ஒருமுறை இந்தியாவந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது

காமினி தங்கள்   நாடு  எப்படி இருந்தது என்பதைப்பற்றி விளக்கினார்.

"எங்கள் நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு எங்கள் மக்களும் இயற்கையோடு இணந்து வாழ்பவர்கள். உங்கள் ஊரில் இலுப்பமரம் உண்டு என்பது எனக்கு தெரியும். எங்கள் ஊரிலும் உண்டு.   எங்கள் நாட்டு இலுப்பம் விதையும் சரி மரங்களும் சரி ப்ரும்மாண்டமானவை.விதை கிட்டத்தட்ட ஒரு விரல்  நீளம்  இருக்கும்."

"எங்கள் மக்கள்   அதனைப் பொறுக்கி காயப்போட்டு வைத்திருப்பார்கள். வீட்டில்மனலை குவித்து காய்ந்த   இலுப்பம் விதைகளை அதன் கூர்மையான பகுதி மேலே தெரியுபடி மணல் குவிய லில் நட்டு        விடுவார்கள்.அதன் நுனியை கிள்ளி விட்டு நெருப்பு ப்பற்ற வைத்தால் நல்ல பிரகாசமாக் எரியும். அது தான் என்க  குடிசகளின் விளக்குகள் ."

"ஒரு விதை ஒரு மணி நேரம்கூட   எரியும் .ஒரு வீட்டிற்கு  நான்கு விதை இருந்தால் இரவை ஒட்டி விடலாம். காசு செலவு கிடையாது"

"எங்கள் நாட்டிற்கு  ஐரோப்பியர்கள் வந்தார்கள். விளக்கு எரிவதை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விதைகளை ஆராய்ந்தார்கள் ." எல்லாம் சர்தான் ஆனால் விளக்கின் ஜ்வாலையால் குடிசை  பற்றி எரியும் வாய்ப்பு அதிகம் ஆகையால் உங்களுக்கு பாது காப்பான விளக்குகளை தருகிறேன்" என்ர்றார்கள்  , கண்ணாடி சிம்மீணி போட்ட மண்ணெண்னை விளக்கை தந்தார்கள் .பின்னர் அரிகேன்  விளக்கை கொடுத்தார்கள். "

"இலுப்பம் விதையை அவ்ர்கள் ஊ "ருக்கு எடுத்து சென்றார்கள். அதை சோப்பாகமாற்றி எங்களுக்கு குளிக்ககொடுத்தார்கள்."

"நாங்கள்பாதுகாப்பான மண்ணெண்ணெய் விளக்குகளோடும்    சோப்புக் குளியலோடும் வாழ்கிறோம்."

"மண்ணெண்ணைக்கும், சோப்புக்கும் சிம்னிக்கும் திரிக்கும் காசுகெட்கிறார்கள் .கொடுக்கிறோம் "


காமினி ப்ஃன்செகா முடித்துக் கொண்டார்.யாரும் எதுவும் பேசவில்லை> நிசப்தமாக இருந்தது.










1 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையாக சொல்லி இருக்கிறார் காமினி. பகிர்வுக்கு நன்றி!