skip to main |
skip to sidebar
"ஆரம்பம் "
சட்டம் படித்து,வக்கீல் தொழில் பார்க்கும் இந்தியர்களையும் "மாஜிஸ்திரேட்" பதவியில் அமர்த்தவேண்டும் என்று தீர்மானம் போட்டுத்தான் காங்கிரஸ் கட்சி ஆரம்பமாகியது.
"சுதந்திரம் என் பிறப்புரிமை " என்று கோஷம் போட்டார் திலகர். அவரை ஆதரித்த வ.உ.சியும், பாரதியும்,சிவாவும் திலகரோடு காங்கிரசால் கைவிடப்பட்டனர் .
சுதந்திரத்திற்கு இப்போது அவசரமில்லை என்று வாதிட்டனர் கோபாலகிருஷ்ண கோகலேயும் அவருடைய ஆதரவாளர்களும்.
என்னுடைய அரசியல் "குரு "கோகிலே தான் என்று அறிவித்தார் அண்ணல் காந்தி அடிகள்.
அஞ்சி நடுங்கி கொண்டிருந்த இந்தியமக்களுக்கு மின்சாரம் பாய்சசியது போல் நிமிர வைத்தனர் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகியோர்.
நாத்திகம் பேசிய சாவர்க்கர் இந்துமகா சபையை ஆரம்பித்தார்.
ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற வாஞ்சி சுதந்திரபோராட்ட தியாகியா ? என்று கேள்வியும் உண்டு.
வாஞ்சியின் சநதனதர்ம கோட்பாடும் , அதற்கான இயக்கமும் "சாவடி நெல்லையப்பரையும் " ,பலசரக்கடை தென்காசி பிள்ளையும் கொண்டிருந்தது.
வாஞ்சி யின் குறி தவறிவிட்டால் அவனுக்கு under study ஆக மாடசாமி தேவர் அனுப்ப பட்டார்.
மாடசாமிக்கு பிரான்சு நாட்டு கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்து துப்பாக்கி சுட பயிற்சி அளித்தவர் வ.வே.சு அய்யர்.
மாடசாமியை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பியவர் பாரதி தாசன்.
காங்கிரஸ் கடசி மாநாட்டில் அப்பொதெல்லாம் சமபந்தி போஜனம் கிடையாது. அவரவர் அவரவர் அடையாளங்களோடு தான் இருந்தனர். அதன் நீட்சி தான் சேரன்மாதேவி குருகுலம்.
ஈ வே ரா போன்றவர்கள் வந்தபிறகுதான் சமபந்தி வந்தது.
சுதந்திர போராட்டம் முரண்பாடுகளின் கூட்டு . சமரசத்தின் அவியல்.
இதனை வைத்துக் கொண்டுதான் அண்ணல் அம்பேத்கார் அரசியல் சட்டத்தை உருவாக்கினார்.அவருக்கு பூரண திருப்தி என்று சொல்லமுடியாது.
ஆனால் அன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எந்த இந்தியனிடம் உன் எதிரி யார் யார் என்று கேட்டால் ,மாகாணம்,மொழி , மதம்,சாதி கடந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று கூவுவான் .
இன்று பிராமணனுக்கு இட ஒதுக்கீடு ! தலித்துக்கு பிறப்பட்டவன் .!பிற்பட்டவனுக்கு பிராமணன் என்றாகிவிட்டது.
நாம் நம் எதிரியை இனங்காண்பதில் தவறு செய்கிறோம் !
மாற வேண்டும் !!
மாற்றுவோம் !!!
1 comments:
கடைசியில் சொன்னது உண்மையான வரிகள்!
Post a Comment