Wednesday, October 05, 2016






ராஜாஜியும் ,பெரியாரும் ,

ஆழமான நட்பின் ,

சின்னங்கள் .....!!!



ராஜாஜி ஆத்திகர் .நம்பிக்கைக்கையாளர். பெரியார் நாத்திகர். நம்பிக்கையற்றவர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடியவர் ராஜாஜி. பிரிட்டிஷார் ஆளட்டும் என்றவர் பெரியார்.

இருவருமே சாதி சமய சழக்கை ஒதுக்கியவர்கள்.இருவரின் நட்பும் இதிகாசத்தன்மை வாய்ந்ததாகும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை 

வயதின் காரணமாக இயலாமையின் காரணமாக பெரியார் சோர்வு ற்றிருந்தார். தான் கொண்ட கொள்கை தனக்கு பின்னும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்களை   உருவாக்கி வைத்திருந்தார். அவை  தனக்கு பின்பு தன இயக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு வாரிசு இல்லாததால் அவை அவருடைய சகோதரர்களுக்கு செல்லும்.இது தான் சட்டம். உறவினர்கள் இயக்கத்திற்கு போவதை விரும்பவில்லை . அன்றே அது கோடிக்கணக்கில் இருக்கும். யார்தான் விரும்புவார்கள்..?

பெரியார் சட்ட ஆலோசகர்களை கலந்து கொண்டார்.இதற்கான தீர்வாக அவர்கள் பெரியார் திருமணம் செய்து கொள்வது தான் ஒரே வழி என்று கூறினார். 70 வயது நெருங்கும் அவரை யார் திருமணம் செய்து கொள்வார்கள்.

நோய் நொடியில் அன்றாடம் சிரமப்படும் பெரியாரை கவனித்துக் கொள்ள மணியம்மை என்ற அம்மையார் இருந்தார்."இந்த திருமணம் என்பது சட்டத்திற்கான ஒன்றுதான்நான் அவரை தீர்மானம் செய்து கொள்கிறேன்,வழக்கம் போல்  அவருக்கான  பணிகளை செய்கிறேன்." என்று அவர் அறிவித்தார்.  அவருடைய ஆப்த நண்பர் ராஜாஜியையம் பெரியார் கலந்து  கொண்டார்.

இந்தியா  சுதந்திரம் அடைந்திருந்த நேரம். மவுண்ட்பாட்டன் பிரபு போய்விட்டார் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்தார். மிகவும்  உ யர்ந்த பதவி . அதன் மாண்பும், மரபுகளும் காக்கப்படவேண்டும்.தனிநபர் விருப்பு வெறுப்புக்கு உட்படாதநிலை எடுக்க வேண்டும் .

ராஜாஜி தன நண்பனுக்காக நின்றார். "நாயக்கர் அவர்களே ! இந்த திருமணம் வேண்டாம்.இது உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும்.உங்கள் இயக்கத்தையும் சிதறடித்து விடும் "என்று ஆலோசனை கூறி கடிதம் எழுதினார்  தன்   பதவியின்மாண்பை  கருதி கடிதத்தின் மேல் "confidential" என்று குறித்து அனுப்பினார் .

1949ம் ஆண்டு ஏப்ரல்மாதம் பெரியார்-மணியம்மை திருமணம் நடந்தது.

1950 ஆண்டு ஜனவரி 26 இந்தியா குடியரசாகி ராஜேந்திர பிரசாத் குடியரசுத்தலைவராகும் வரை ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தார்  

பெரியாரின் திருமணத்தை எதிர்த்தவர்கள் திமு.கவை  உருவாக்கினர். முன்னணி தலைவர்களில் சிலர் இந்த திருமணம் ராஜாஜி செய்த சதி என்று மனதார நம்பினார்கள்.சரமாரியாக ராஜாஜி விமரிசிக்கப்பட்டார். குல்லுக பட்டர், குலக்கல்வி நாயகன் , என்று வசை பாட தொடங்கினர் . 

இதில் ராஜாஜியின் ஆதரவாளர்கழும் கலந்து கொண்டனர்.பிராமண விசுவாசிகளான இவர்கள், "பெரியாரை ஏமாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த சாணக்கியன்.பெரியாரையும்.நாத்திக இயக்கத்தையும் சிதறடித்தவர் " என்று முட்டாள் தனமாக புகழ்ந்தனர் .

இந்த திருமணத்தை எதிர்த்தவர் ராஜாஜி என்பது பெரியாருக்கும் ராஜாஜிக்கும்மட்டுமே தெரியும். இருவரும் மாண்பினை காத்தனர்.  

ரேஷன் காலம் அது ராஜாஜி  மக்கள் படும் துயரம் தீர  இறைவன் புகழ்  பாடுவோம் என்கிறார் .

"பஜனை செய்வோம் கண்ணன் நாமம் ! -  பட்டினி கிடந்து 
பஜனை செய்வோம் கான்னன்நாமம் " 

என்று பராசக்தியில் கருணாநிதி வசனம் எழுதினார்.

மழை  இன்றி தவித்தபோது 

"வருணபகவானுக்கு கட்டுக்கட தனது அனுப்பி இருக்கிறோம் மகாராஜா "

என்று பராசக்தியின் சிவாஜியை பேசுசெய்தார்.

கருணாநிதி நமபிக்கையாளர் இல்லை. சாதி சழக்கை  விட்டொழித்தவர்தான்.  ஆனாலும் அவர் தன்    மகளை தன உறவினரான மருமகனுக்கு கட்டி கொடுத்தார்.

ராஜாஜி நம்பிக்கையாளர் . அவர் மகளை பஞ்ச்கசம் , உத்தரீயம் போட்டு  குடுமி வைத்த தர்ப்பை புல்லோடு வரும் பாப்பானுக்கு கொடுக்கவில்லை. பூணுல் போடாத பணியாவான காந்தியின்மகனுக்கு தான் கொடுத்தார்.

இந்த ஆத்திர முட்டல்கள் பெரியாரையும் சரி ராஜாஜியையும் சரி பாதிக்கவே இல்லை. 

இந்த ஒருவருக்குமட்டும்தெரிந்த ரகசியம் வேறு ஒருவருக்கும் தெரிந்திருந்தது . ராஜாஜியின் நண்பரான ரசிகமணி டி .கே சிதம்பர நாத முதலியார் தான் அது.ராஜாஜி அவரை "வாயை திறக்கக்கூடாது" என்று அடக்கி விட்டார். 

முதலியார் பெரியாரை சந்தித்தார். என் நண்பர் . "ரகசியம் என்று சொன்னதை நான் வெளிப்பிப்படுத்த மாட்டேன் " என்று கூறிவிட்டார்.

1973ம் ஆண்டு டிசம்பர் 26ம் திதி ராஜாஜி மறைந்தார் ! அவருடைய இறுதி நிழசசியில் அந்த 93 வயது பெரியார் என்ற கிழட்டுசிங்கம்  அடக்கமுடியாமளவிம்மி விம்மி அழுததை  பார்த்தவர்கள் வியந்தனர்.

அது அழுகை அல்ல !

நட்பின் ஆழம் !!!




2 comments:

”தளிர் சுரேஷ்” said...

அறியாத தகவல்கள்! அருமையான தகவல்கள்! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அறியாத தகவல்கள்...
நட்பின் ஆழம்... அருமை ஐயா...