Tuesday, March 07, 2017






ஜக்கி வாசுதேவ் அவர்களும்,

தொலைக்காட்ச்சி நேர்காணலும் ...!!!

ஒரு ஜோல்னா பையில் மாற்று உடுப்பையும், இரண்டு மார்க்சியநூல்களை  வைத்துக்கொண்டு  ஊர்,ஊராக செல்லும் போராளிகளை எனக்கு பிடிக்கும் .

அதே போல உடுப்பையும், பகவத்கிதை,உபநிஷத் நூல்களை எடுத்துக்க்கொண்டு "பரிவிராஜகர்க"ளாக  நாடுமுழுவதும் சென்றுவருபவர்களையும் எனக்கு பிடிக்கும் .

அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும் ஒரு புள்ளியில் இவர்கள் தேடல் இருப்பதால்.பிடிக்கிறது.

இதன் காரணமாக தயானந்த சரஸ்வதியிடமும், இஷா மையத்திடமும் தீ ட் சை பெற்ற வர்களில் எனக்கு நண்பர்கள் உண்டு. 

போராளியும் சரி. இவர்களும் சரி தங்கள் "சுயத்தை " வீசி எறிந்தவர்கள் என்பதால்.

சமீபத்தில் ஈஷா  மையம்  பற்றிய சர்சசை பரவலாகியுள்ளது . மையத்தின் தலைவர் ஜாக்கி வாசுதேவ் அவர்கள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்ச்சியான புதிய தலைமுறை, நியூஸ் ஆகியவற்றிற்கு பேட்டி அளித்தார் தன தரப்பு நியாயங்களை சொல்வது அவருடைய நோ க்கம். ஆனால் கேள்விகளுக்கான பதில்கள்வெறும் சமாளிப்புகளாக இருந்தன . நேரிடையான பதில் இல்லை.இதில் அவர் கோபப்பட்டுக்கொண்டது வேறு.

பிப்ரவரி மாத இறுதியில் "ஆதி யோகி" நிகழ்ச்ச்சி நடந்தது. அதற்கு பிப்ரவரி 15ம் தேதிதான் அரசு ஒப்புதல் கிடத்தவுள்ளது அதுவும்  நாட்டின்  பிரதமர் கலந்து கொள்கிறார் என்ற தகவல் கசிந்தபிறகு. இதனை  நிருபர் கேட்ட பொது வெறும் மழுப்பலான பதிலே கிடைத்தது.

சுமார் 15000 வருடங்களுக்கு முன்பு ஆதி யோகி இருந்தார் {!} .அவர் சொன்னதுதான் யோகம் என்ற "புருடா " எடுபடவில்லை.

நியூஸ் நிருபரிடம் கோபமாக   "ஜக்கி" ப்பேசினார்.நிருபர் அதனை சுட்டிக்காட்டிய பொது சமாளித்தார்.

நிருபர் விடவில்லை. அடுத்துவந்த ஒவ்வொரு கேள்விக்கும் முன்பு "தயவு செய்துகோபப்படாதீர்கள் " என்ற முன்னுரையோடு கேட்டு அவர் கோபப்பட்டதை தொடர்ந்து பதிவு செய்தார்.

வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது பற்றி கேள்வி கேட்டபோது அவைபட்டநிலங்களென்றார். அருகிலேயே பாககு மரங்களும் தென்னை மரங்களுமிருப்பதாக சொன்னார்.

பிரிட்டிஷார் காலத்தில் டாடா வும் பிர்லாவும் மரங்களை அழித்து தேநீர் ,காப்பி தோட்டங்களை  போட்டார்கள். அங்கு வசித்த வன குடிமக்கள் என்ன ஆனார்கள் ?

உங்கள் மகளுக்கு திருமணம் நடந்ததே ?  என்று கேட்ட  போது   அதை நான் தொலைக்காட்ச்சியில் விவாதிக்க தயாராக இல்லை என்கிறார். 

வாடிகனிலிருந்து  வந்தால் போப் ஆண்டவர் என்கிறீர்கள் .என்னை மட்டும் "சத்குரு " என்று அழைக்க மாட்டிர்களா ? என்கிறார்.

குற்றவாளி  கூண்டில்  நின்று கொண்டிருந்த  காஞ்சி சாமியாரை கோர்ட் டவாலி "சுப்பிரமணியன் "என்று மூன்றுமுறை கூவி அழைத்தான் என்பது   அவருக்கு மறந்திருக்கலாம். 

ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவேண்டும்   என்றால் இந்துக்களை மட்டும் எதிர்க்கிறீர்கள். "காருண்யா "என்னாயிற்று என்று சங்கிகள் கதறுகிறார்கள்.

"என்னுடைய மையம் இந்துக்களுக்குமட்டுமானது இல்லை " ஜாக்கி கூறியுள்ளது நீண்ட கால நலன் கருதி ,அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். 





0 comments: