Friday, March 10, 2017





"ராஜகுண சேகர் "

பன்முக திறமை கொண்ட ,

"No 1 Master "




வடக்கே சிதம்பரம், தெற்கே நாகர்கோவில்,கிழக்கே ராமேஸ்வரம், மேற்கே பழனி என்று பறந்த மதுரை மண்டலத்தின் விருது நகர் கிளையில் தட்டச்சராக இருந்தார் ராஜகுணசேகர். தஞ்சை ,நெல்லை பிரிவதற்கு முன்.

செய்நேர்த்தி என்பதை அவரிடம் காணமுடியும். Balance sheet லிருந்து வரவு சிலவு கணக்குவரை இயந்திரத்தின் spacebaar கணக்கிட்டு பிசிறு இல்லாமல் செய்வார். பல அதிகாரிகள் தங்களுடைய அறிக்கைகள் குறிப்புகளை நேராக சேகரிடம் கொடுத்து அடிக்க சொலவதை நானே பார்த்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் "காத்ராஜ் " டைப்பிஸ்டுகளுக்காக அகில இந்திய அளவில்ப்போட்டிகள்   நடத்தும். இரண்டு முறை பரிசு பெற்றிருக்கிறார்  சேகர் .


 மட்டுமல்ல விளையாட்டிலும்  அவருக்கு. காரம்,செஸ், டேபிள் டென்னிஸ் என்று மாட்டு மில்லாமல் இறகு பந்து, வாலிபால் இரண்டிலும் சிறந்து நின்றவர் .குழு காப்பதனாக பணியாற்றியவர். Zone அளவில் குழு  காப்டனாக இருந்தார். ஒருகட்டத்தில் குழு  மானேஜர் இந்தியாமுழுவதும் குழுவை அழைத்து சென்றிருக்கிறார். 

இசையில் ஆர்வமுள்ளவர். ஆர்மேனியம், கி போர்டு, தபேலா வாசிப்பார். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவின் இசை இயக்குனர். கே.முத்தையா அவர்களின் "புதிய தலைமுறை " நாடகத்தில் சனாதன குடுமப்த்தில் பிறந்த இளம் விதவை தன காதலனோடு சென்னை சென்று புதிய வாழ்க்கைக்காக செல்வாள்."நான் வாழ்ந்து  காட்டுவேன் "என்றபாடலுக்கு  வரியும், இசையும் அமைத்தது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது .


 சிறந்த நடிகர். அவருடைய அண்ணன் தனபால் பாண்டியன் செவ்வானம் நாடகத்தில் நடிப்பார். அவர் ஒய்வு பெற்றபோது சேகர் நடித்தார். தம்பி தம்பி தான்! அவருடைய மிகசிறந்த நடிப்புக்கு உதாரணம் "பிதாவே இவர்களை இல்லை என்னை மன்னியும் " என்ற நாடகம்.  சபையில்நடக்கும் அக்கிரமங்கள் பிடிக்காமல் தன உடுப்பைகழற்றி பிதாவின்காலடியில் வைத்து விட்டு சபையை  விட்டு வெளியே ரும் காட்ச்சியில்   தூய கிறிஸ்தவன்கூட விம்மி அழுது விடுவார்கள்.


 மட்டுமல்ல .நல்ல இயக்குநரும்கூட ."பிதாவே இவர்களை மன்னியும் " நாடகத்தை இயக்கியவரும் அவர்தான் .1984ம் ஆண்டு சென்னையில் நாடக விழா நடந்தது அதில் காஸ்யபன் எழுதிய "வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் " நடந்தது. இயக்கியவர் சேகர். தமிழ் நாட்டின்  பட்டி தொட்டி எல்லாம் நடத்தப்பட்ட நாடகம்.


அகில இந்திய விஜ்ஞான ஜாத்ரா மதுரை வந்தபோது அவர்களை வரவேற்று நாடகம் போட்டோம். நான் கலீலியோவாகவும் ,அவர் போப் ஆண்டவராகவும் நடித்தோம். நாடகத்தின் பெயர் "கலிலியோ " .பார்த்தவர்கள் "போப் " நாடகம் என்றே " இன்றும் சொல்வார்கள்.


கலைத்துறை மட்டுமல்ல .சிறந்த எழுத்தாளரும் கூட ஒவ்வொரு வாரமும்  "தீக்கதிர் " அலுவலகம் வந்து எழுத்துவார்  வண்ணக்கதிரில் தி ரைப்பட விமரிசனங்கள் எழுதுவது  அவருடைய பணிகளில் ஒன்று. 


மதுரை கிளை ஒன்றில் "த்வனி "   என்றொரு அமைப்பு இருந்தது>மாதம் மூன்று ரூ வசூலிப்போம். அப்போதெல்லாம் தி .ஜ,ரா, ,ஜெயகாந்தன், என்று படைப்புகளை வாங்கி படிப்போம். அதனை நிர்வகிக்கும் பொறுப்பை சேகர்தான் செய்வார்.


இன்சூரன் ஊழியர்களின்  ஊணும் உயிருமான  சங்கத்தின் செயல வீரர். ஒருகட்டத்தில் மண்டல நிர்வாகியாக பொறுப்பேற்றார். அப்போது அவர் உத்தமபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  தலைமை வகித்து பேசியது இன்றும் என்காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


 சனிக்கிழமை தோறும்  கிளை 1 கூடுவோம். அந்த வாரம் வந்த peoples democracy       விவாதிப்போம். தொகுத்து  வழங்குவது சேகர்தான்.


மார்க்சிய  அடிப்படை நூல்களை கற்றவர் . மார்க்சிஸ்ட்கட்ச்சியின்  ஊழியர்.

 இன்னும் பல்லாண்டு வாழ்ந்து கச்சிக்கும் சமூகத்திற்கும் பணியாற்ற வேண்டியவர் .

நம் நினைவில் ராஜகுண சேகர் நின்றுவிட்டார் !

அஞ்சலிகள் தோழர் சேகர் !!! 





1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.