Sunday, March 12, 2017






மனோகர் பாரிகரும் ,

ராஜகோபாலச்சாரியும் ...!!! 







ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன . கோவைவை ஆண்ட பாஜக  முதல்வர் உட்பட எட்டு மந்திரிகள் தோற்றனர் .காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்று பெரியக்கடசியாகிவிட்டது.பாஜக விரற்கு 11 இடங்கள் தான் . காங்கிரஸ் நான்கு  இடங்களை சுயெச்சை  மூலம் பெற்று ஆடசி அமைக்க  நாக்கை  துருத்திக்கொண்டு வந்தது.

கவர்னர் சின்கா மனோகர் பாரிகரை அழைத்து ஆடசி அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். பாரிகரும் மத்திய அமைசசர் பதவியை விட்டு விட்டு பாஜக முதல்வராகப்போகிறார்.

இது ஜனநாயக படுகொலை என்று கூக்குரல் எழுந்துள்ளது.


1952ம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தில் தேர்தல் நடந்தது.காங்கிரஸ் படு  தோல்வி அடைந்தது,கம்யூனிஸ்டுகள் தலைமையில் உருவான கூட்டணி ஆட்ச்சியை பிடித்தது. முதல்வர் யார் ?கம்யூனிஸ்ட்கட்சியை சேர்ந்த நாகிரெட்டியா, பி.ராமமூர்த்தியா, அல்லது கூட்டணியை இருந்த பிரகாசம் காருவா  என்று பாத்திரிகைகள் எழுத ஆரம்பித்தான.


 அப்போது கவர்னராக இருந்தவர் ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா. மத்திய நேரு ஆடசியின் உத்தரவின் பேரில் பிரகாசா ராஜ கோபாலாச்சாரியை அழைத்து ஆடசி அமைக்க சொன்னார்.கூட்டணியில் இருந்த மாணிக்கவேலரை பிடித்து ராஜாஜி பெரும்பான்மையை காட்டினார்.


கம்யூனிஸ்டுகள் ஆட்ச்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அன்று காங்கிரஸ்காரர்கள் செய்த ஜனநாயகப்படுகொலை இன்று காங்கிரஸ் வரக்கூடாது என்று பாஜக  வால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.


0 comments: