அசோகமித்திரனும் ,
த.மு. எ .ச .வும் .....!!!
80 ம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ் நாவல் பற்றி தன் கவனத்தை திருப்பியது ஏற்கனவே சிறுகதை துறையில் தடம் பதித்த நிலையில் எழுத்தாளர்களை நாவல் துறையிலும் "மடை " திருப்பிவிட விரும்பியது
அதற்காக சென்னை யில் ஒரு நாவல் பட்டறையை நடத்த விரும்பியது.சிகரம் செந்தில்நாதன் தலைமையில் சென்னை மைலாப்பூர் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறந்த நாவலாசிரியர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் முன்னிலையில் அவர்களுடைய படைப்பு ஒன்று விமரிசிக்கப்படும். ஆசிரியர் அந்த விமரிசனத்திற்கு பதிலாகவும், தான் படைத்த விதத்தையும் விளக்குவார்> பின்னர் பங்கு பெரும் எழுத்தாளர்கள் விவாதிப்பார்கள்.
இப்படி ஒரு பட்டறையை முதன் முறையாக த.மு.எ.ச நடத்தியது .நாவல் ஆசிரியர்கள் கு.சின்னப்ப பாரதி,பொன் நீலன் , அசோகமித்திரன் என்று பலஆளுமைகள் அழைக்கப்பட்டிருந்தனர். அசோகமித்திரன் எழுதிய "தண்ணீர் " நாவலை விமரிசிக்க என்னை நியமித்தனர். இந்த பட்டறையில் தான் முதன் முதலாகஇயக்குனர் பாலு மகேந்திராவும் கலந்து கொண்டார்.
எனக்கு ஒருபக்கம் தயக்கம். அசோகமித்திரன் வந்ததும் என்னை தனியாக சந்தித்தார். ஒடிசலான தேகம்,மிகவும் மெலிதான குரல். நான் செகந்திராபாத்திலிருந்தவன் என்பதும், கிங்ஸ் ரோடு, ரெயினிலயம், ரயில்வே காலனி, என்று பேசி சகஜமாகி கொன்டேன்.
" தயக்கமில்லாமல் விமரிசியுங்கள்.படைப்பாளியாமுன்னால் வைத்துக்கொண்டு விமரிசனம் செய்வது என்பதை உங்களால் தான் செய்யமுடியும். எப்பெடி என் நாவலை யும், "தண்ணீர் " படைப்பையும் தேர்ந்தெடுத்திர்கள் ? "என்று கேட்டார்.
"மத்தியதர குடும்பத்தின் பாடுகள் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. விமரிசனத்தில்மேலும் குறிப்பிகிறேனே " என்று பதிலளித்தேன். என்கைகளை இருக்க பாற்றிக்கொண்டார்,கண்கள் கலங்கியிருந்தன . "ஏன் கலங்கு கிறீர்கள்."
"இது ஆனந்த கலங்கல் ! வாருங்கள் " என்று என்னை பேச அழைத்தார்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது.எங்கு பார்த்தாலும் இரண்டு பல் வரிசையும் தெரிய என்னை அணைத்து கைகொடுத்து விசாரித்து விட்டுத்தான் போவார்.
அவருடைய" பதினெட்டாவது அட்ஸரேகை " நாவலை அன்பர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்
முழுமையாக எழுத்தைமட்டுமே நம்பி வாழ்ந்த தியாகராஜன் என்ற அசோகா மித்திரன் காலமாகி விட்டார்.
அஞ்சலிகள் ! பெரியவரே ! !
0 comments:
Post a Comment