Tuesday, March 14, 2017





" தோழர்கள் கவனத்திற்கு "  

   என்ற SAP அவர்களின் 

 நிலைத்தகவலை முன்னிட்டு ...!!!




மிகசரியான நேர த்தில்  வந்துள்ள நிலைத்தகவல் அது .    அதுவும் ஐந்து மாநில  தேர்தல் முடிவுகள் வந்தபின் இடதுசாரிகளுக்கு ஆலோசனை கூற பலர் வந்து  விட்டார்கள். இவர்களுக்கு பதில் சொல்கிறேன் என்று சில  அரை   குறை கள் புறப்பட்டுள்ளன.


முப்பது நாற்பது ஆண்டுகள் புழுதிக்காட்டிலும்,  வரப்புகளிலும் அணிகளைக்கட்டிக்காத்து  வளர்த்தவர்களுக்கு இந்த வெம்பிய பிஞ்ச்சுகள் ஆலோசனை கூறுவது அபத்தமாக உள்ளது. அதைவிட அபத்தமாக  பதில்  சொல்ல அரைவேக்காடுகள்முனை கின்றன .

  சிலர் ஜனன  மரண கணக்கை தோண்டி எடுக்கிறார்கள்..பொலிட் பீரோவில் எத்தனை பிராமணன் ?என்று கேட்கிறான். பதிலுக்கு உன் தலைமையில் எத்தனை கோனார்கள் ? என்கிறான்.

" அடித்தால் அடி " வாடா என்றால் போடா என்று சொல் "என்று கற்றுக்கொடுத்தார் சீனிவாசராவ். சவுக்கடியையும் சாணிப்பாலையும் நிறுத்தினார். தஞ்சை விவசாய பெருங்குடி மக்களை அக்கிரகாரத்தினுடாக ஊர்வலமாக அழைத்துசென்றார்.  நிமிர்ந்து நின்று பேசவைத்தார். அவரையே "கன்னடத்து பாப்பான் " என்று ஏசியவர்களும் உண்டு.

தலித் வக்கீல் மீதே தீண்டாமை சட்டத்தின் கீழ் ( அவர் கம்யூனிஸ்ட் )வழக்கு  போட்ட புத்திசாலி போலீஸ் அதிகாரிகளைக் கொண்டது தான் தமிழகம்.


நம் எதிரிகளின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் மக்களை வென்றெடுக்க இதுவல்ல வழி. நெருங்குபவனையும் விரட்டி அடிக்காதிர்கள் .

"எல்லாரையும் எதிரிகளாக்கி சுத்த சுயம்பிரகாசமாய் நிற்பது லெனினியக்கோட்பாடுகளுக்கு  எதிரானது என்பதை மெத்த பணிவோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் " என்கிறார் sap .


இந்த அரைவேக்காடுகளுக்கு பணிவோடு சொன்னால் புரியாது.


மண்டையில் அடித்து சொல்லுங்கள்.


1 comments:

சரவணன் said...

திருப்பித் தாக்குகிறீர்களே தவிர குற்றச்சாட்டுக்குப் பதில் இல்லையே. இத்தனை ஆண்டுகளில் 1 தலித்கூட பொலிட்பீரோவுக்கு நியமிக்கப் படவில்லை. இதற்குப் பதில் சொல்லவில்லையே.