நாத்திகமும் ,
ஆத்திகமும் ...!!!
உலகில் தற்போது சுமார் 85 கோடியிலிருந்து 90 கோடி இந்துக்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
அதேசமயம் நாத்திகர்கள் 110கோடி இருப்பதாகவும் சொல்கிறது . இந்த நாத்திகர்கள் மிகவும் அதிகமாக வடக்கு ஐரோப்பாவிலும் ,வடக்கு அமெரிக்காவிலும் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்." ஸ்காண்டிநேவியன் நாடுகள் " என்ற நார்வே ,ஸ்விடன், டென்மார்க், பெல்ஜியம் ,ஜெர்மனி போன்றநாடுகளில் இவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்தநாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் நலமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இங்கு கல்வி இலவசம். உயர்கல்விவரை இலவசம் . வேலை வாய்ப்பு நிவாரணம் உண்டு.
வளைகுடா நாடுகளிலிருந்தும் , கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இங்கு குடியேறுவதும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதும் நடக்கிறது .
தமிழகத்தின் சனாதன குடும்பத்தில் பிறந்த நெல்லை மாவட்ட நண்பர் தற்போது அமெரிக்காவின் சிகாகோநகரத்தில்வசிக்கிறார். கிரீன் கார்டு வாங்கியுள்ளார். மிகத்திவிரமான பகுத்தறிவாளர்.(Rationalist ) ரிபப்பாளிகன் கடசியின் தீவிரமான ஆதரவாளர். இந்தியாவந்தால் நாகபுரிவந்து ஒருநாளாவது என்னோடு தங்கி விவாதிப்பார்.
இந்திய பகுத்தறிவாளர்களும் மேலை நாட்டு பகுத்தறிவாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை விவாதிப்போம்.
"கருப்பு சட்டை நாத்திகம்" என்று ஒரு கட்டுரை தொகுப்பு எழுதி உள்ளார்..பெரியாரின் கருத்துக்கள்த்துநீர் த்துப்போனதையும் அதன் தற்போதைய போதாமையையும் கண்டு வருத்தப்படுவார்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பவர் பெரியார். சாதிகள் ஒழிக்கப்படவேண்டும். அதன் சல்லிவேறான மனுநீதியும்,தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.மனுநீதியின் ஆணிவேர் பிராமணியம் . ஆகவே அதனை கடுமையாக எதிர்த்தார்.
பெரியாரை ஆதரித்த திராவிட நலசங்கத்தாரும்பிராமணியத்தை எதிர்த்தார்கள்.பிராமணரல்லாத மேல் சாதி பிள்ளை யும்முதலியும் மற்றவர்களும் தங்கள் நலன் சார்ந்து எதிர்த்தார்கள். அவர்கள் சாதியை ஒழிக்க முற்படவில்லை.
பெரியாரிட மிருந்து பிரிந்த அண்ணாதுரை அவர்கள், மிகப்பெரிய மாற்றத்தை தன் அரசியல் நலன் கருதி செய்தார். கடவுள் இல்லை என்பதை மாற்றி,"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்" என்கிறார்.
பிராமணர்களை அணைத்துக்கொண்டு பிராமணியத்தை எதிர்ப்பதாக அறிவித்தார்.
இந்த இரண்டு மாற்றமும் திராவிட கச்சியை ஆடசி அதிகாரத்தில் ஏற்றியது.ஆனால் பெரியாரின் நாத்திக பிடிப்பு தளர ஆரம்பித்தது.
எங்கள் விவாதத்தில் மிக முக்கியமான இந்த மாற்றத்தை சொல்லி அந்த அமெரிக்க பிரஜை சொல்லிசொல்லிமாய்ந்துபோவார்.
என்னுடைய உறவுக்கார இளைஞன் தற்போது சுவீடனில் வசிக்கிறான். மிகவும் சாஸ்திரோத்தமான வாழ்க்கையை கொண்டவன். என் அரசியல் தத்துவார்த்த நிலையை கடுமையாக எதிப்பவன். சமீபத்தில் அவன் இந்தியாவந்திருந்தான். கடுமையான மாற்றம் தெரிந்தது.
"சித்தப்பா ! நான் உங்கள் ஆதரவாளனாகி விட்டேன். " என்றான் .
தீவிரமான நாத்திகம் பேசுகிறான்.
"aaத்திகம் என்பது தீராத ஒரு நோய். போலியோ நோயால் பா திக்கப்பட்டவனை நாம் வெறுக்க முடியுமா? அவனுக்கு வாழ உரிமையில்லையா ? அவனோடு பேசுகிறோம்.அவன் அனுபவத்தை அவனுக்கே எடுத்து சொல்கிறோம் . அவனை சிந்திக்க வைக்கிறோம். சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்றால் அவன் நம்மோடு சேர்வதை தவிர அவனுக்கு வழி எது.? "
அவன் சிறுவனாக இருந்த பொது என் முன்னால் படித்து வளர்ந்தவன். மகிழ்ச்ச்சியாக இருந்தது.
அறுபது வயது பேச்சி அக்கா தலையில் கீரை கட்டுக் கூடையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பிள்ளையார் கோவில் சாமியை கும்பிட்டு வியாபாரத்திற்கு போகிறாள். அன்றைய வியாபாரம் சரி இல்லை என்றால் அவள் வீட்டில் அடுப்பு எரியாது. அவளுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்.
அவளுக்கு "சாமி கும்பிடுவதைத்தவிர' வேறு கதி !
0 comments:
Post a Comment