Friday, April 28, 2017





அமைச்சர் செல்லூர் ராஜுவும் ,

"தெர்மாகோல் " பரிசோதனையும் ...!




மதுரையில் உள்ள எல்.ஐ.சி  மண்டல அலுவலகம் செல்லூரில் உள்ளது>அங்குதான் 30 வருடங்களுக்கு மேலாக  நான் பணியாற்றினேன். 

செல்லூர்,தத்த நெறி,பாரதிநகர் , என்று அந்த பகுதியில் நண்பர்கள் நிறைய உண்டு. தொண்டனாக இருந்த காலத்துலேயே செல்லூர் ராஜூவை பரிசயம் கொண்டவன் நான். அவருடைய அறிவார்ந்த திறமை பற்றி எனக்கு  அனுமானம் உண்டு.

நீர் ஆவியத்தலை  தடுக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றி முகநூல் நண்பர்கள் அவரை கிழித்து தோரணம் கட்டி விட்டார்கள்.ஈவு இரக்கம் இல்லாமல்   அவரை வசை  பாடிவிட்டார்கள் . அப்படி செய்யும் பொது தங்கள் அறியாமையையும் (முட்டாள் தனத்தையும்) வெளிப்படுத்தி னா ர்கள்.

நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் பலநாடுகள் ஈடுபட்டு க்கொண்டிருக்கின்றான. இதனை அவர்கள் இரண்டுவகையில் பார்க்கிறார்கள்.

நீர் ஆவியாவதால் ஏற்படும் நன்மைகள் எவை? அதனை தடுத்தால் சுற்று  சூழல் எவ்வாறு பாதிக்கப்படும் ?என்று ஒருபுறம் ஆராய்சசி நடக்கிறது.

மற்றோரு புறம் நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ! இதில் தெர்மாகோல் பற்றியும் ஆராய்சசிகள் நடக்கின்றன.

தெர்மக்கோலால் மூடப்பட்ட நீர் குறைந்த ஆக்சிஜன் கொண்டதாக இருக்குமா? அப்படியானால் அந்த நீரில் வாழும் உயிரினங்கள், மற்றும் உயிரிகள் என்னவாகும்? அதனால் சுற்று சூழல் என்ன வாகும்  என்று ஆராய்சசி நடக்கிறது. 

இதனை அரைகுறையாக புரிந்து கொண்ட அதிகாரி ஒருவர் கொடுத்த ஆலோசனையை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க அமைசசர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பல சதுரமைல் பரப்பளவு கொண்ட அணையில் 70 சதுர அடியில் பரிசோதனை முயற்சி நடந்துள்ளது.

அதற்குள் அவசரப்பட்டு  தங்களின் அறியாமையை முகநூல் அன்பர்கள் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம் .

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அமைச்சரும் கொஞ்சம்
அவசரப்பட்டிருக்கவேண்டாம்
சோதனை முயற்சியாக
சிறு நீர் நிலைகளில் இந்த
முயற்சியைச் செய்திருக்கலாம்

இராய செல்லப்பா said...

இம்மாதிரி தெர்மாகோல் முயற்சிகள் பல நாடுகளில் செய்யப்பட்டதாக விரிவான கட்டுரை ஜூனியர் விகடனில் வந்துள்ளது. சற்றே பொறுமையாக ஆராய்ந்து செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதையே ஜெயலலிதா உயிரோடு இருந்து செய்யப்பட்டிருந்தால் எந்த சமூக வலைத்தளமாவது துணிந்து விமர்சித்திருக்குமா?

இன்று அதிமுக-வில் இருப்பவர்கள் அனாதைக் குழந்தைகள்மாதிரி. அனாதைகளை வம்பிழுப்பது சரியில்லை.

-இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி