மயிலை பற்றியும்
யானையை பற்றியும் ...!!!
ராஜஸ்தானின் உயர்நிதிமன்ற நீதிபதி ஒய்வு பெரும் முன்னர் மயில் பற்றி சொன்னார் . அவருடைய அறிவியல் திறமையை நடுமுழுவதும் வியப்போடு பார்த்தது.
மயிலைப்பற்றி நமது வரலாற்றாளர்கள் நிறைய எழுதி வைத்திருக்கிறார்கள். கே.சி. சவுத்திரி என்பவர் "பண்டையகால இந்தியா " மத்தியகால இந்தியா ", நவீன இந்தியா "என்று வரலாற்றினை எழுதி வைத்துள்ளார் .
இந்தியாவில் குழுக்களாக மனிதன் வாழ்ந்த காலம் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அடையாளம் இருந்ததும். இதனை totem என்று ஆங்கிலத்தில் கூறினார்கள்.
குரங்கு கொடியோன்.அரவக்கொடியோன்,சேவற்கொடியோன் என்று இருந்ததும் உண்டு இது பற்றி வரலாற்றில் குறிப்புகள் உள்ளன.
மயிலை தங்கள் அடையாளமாக கொண்ட குழுக்கள் இருந்தன. அவர்களை மயூரிகள் என்று அழைத்துள்ளனர் . பின்னாளில் இவர்கள் தான்நாகர்குழுவைஅடக்கிமௌரியசாம்ராஜ்யத்தைஉருவாக்கினவர்கள்.
மௌரியர்களில் அசோகன் புகழ் பெற்றவன்.தன்னுடைய நூலில் கே.சி சவுத்திரி அசோகனைப்பற்றி எழுத்தியுள்ளார் ."இளம் வயதில் அசோகன் முராடனாக இருந்திருக்கிறான். எதற்கெடுத்தாலும் வெட்டு குத்து என்று ஈவு இரக்கமின்றி சகமனிதர்களை துன்புறுத்தி இருக்கிறான். மிருக வேட்டை அவனு \டைய விருப்ப விளையாட்டு . குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு "மயில் " மாமிசம் சாப்பிட வேண்டும் . மது,மாது அவனுடைய போழுது போக்கு." என்கிறார் சவுத்திரி.
இந்தியா சுதந்திர மடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் இந்திய முதலாளிகள் பிர்லா மாளிகையில் சந்தித்தார்கள். அப்போது நவ இந்தியாவின் ஒரே தொழிற்சங்கம் AITUC . பலம் பொருந்திய இந்த சங்கத்தை முதலாளிமார் ஏற்க மனமில்லாமல் தவித்தார்கள். புதிதாக INTUC என்ற சங்கத்தை ஆரம்பிக்க விரும்பினார்கள்.
இதனை காந்தி அடிகளைக்கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்தார்கள். தொழிலாளிகளை பிரிப்பது அடிகள் எதிரித்தார். காந்தியின் சீடர் குல்ஜாரிலால் நந்தா. அவர் புதிய சங்கம் ஆரம்பிக்க வேண்டியதின் அவசியத்தை காந்தி க்கு எடுத்துச்சொன்னார்.
"அசோகன் சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அந்த சாம்ராஜ்யத்தை ஆயுதங்களோடு அவற்றின் உதவியால் உருவாக்கினான். மக்களிடம் அந்த ஆயுதங்கள் இருந்தால் அசோகனை எதிர்க்கவும் அது பயன்படும். அந்த மக்களிடமிருந்து ஆயுதங்களை பிடுங்க வேண்டும். அவர்களுக்கு அஹிம்ஸையை போதிக்க வேண்டும். சாம்ராஜ்யத்தின் நன்மை கருதி அசோகன் பௌத்தனானான். ஆரம்பத்தில் அசோகன் எதிர்த்தாலும் அரசு நிர்ப்பந்தத்தின் காரணமாக அஹிம்சையை ஏற்றுக்கொண்டான்." என்று காந்தி அடிகளுக்கு சொல்லப்பட்டது.
அசோகன் விரும்பி பௌத்தனாக வில்லை.
INTUC உருவானது.
ராஜஸ்தான் நீதிபதி சொன்னதற்கு இத்தனை எதிர்ப்பு வந்தது . சரி !
அகிலஉலக விஞனி கள் கலந்து கொண்ட மாநாடு முமபை யில் நடந்தது.
அந்த மாநாட்டில் நமது அறிவியல் வித்தகர் ,பாரதப்பிரதமர் ,நரேந்திர மோடி " விநாயகருக்கு யானைமுகம் என்பதை சுட்டுக்காட்டி அந்த காலத்திலேயே இந்தியாவில் plastic surgery இருந்தாய் நிரூபித்தார் "
யதா ராஜா ! தாதா பிரஜா !!!!
0 comments:
Post a Comment