skip to main |
skip to sidebar
என்னதான்
செய்யப் போறீங்க டா ???
அந்த தாயின் இடுப்பில் இருந்த அந்த குழந்தை துள்ளி திமிறி க்கொண்டிருந்தது . குழந்தையை கீழே இறக்கினாள் . ஓடிப்போய் எதிரே வந்து கொண்டிருந்த "சாமி " யை கட்டிபிடிக்கப் போனது அந்தக்குழந்தை .
பதறிப்போன மற்றவர்கள் "தீட்டு தீட்டு "அலற ,அந்தத்தாய் குழந்தையை "வெடுக்கெ"ன்று தூக்கிக்கொண்டாள் .அந்த குழந்தையின் பெயர் கர்ணன்.
முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தான் சிறுவன். தாகமாக இருந்தது . ஓரமாக பானையில் இருந்த நீரை பருக குவளையை எடுத்தான்.ஓடோடி வந்த வாத்தியார் அவன் முதுகில் ஒரு அரை வைத்தார். "இந்தால " என்று கூறி குவளையில் நிறை சேந்தி வீட்டார் . அவன் வாயருகே கையை வைத்து குடித்தான்.வாத்தியார் ஏன் அடித்தார் அவனுக்கு தெரியாது .அழு தான்.அந்த சிறுவன் பெயர் "கர்ணன்".
அவன் சட்டைக்கு பித்தான் இல்லை ஊக்கு போட அதுவும் இல்லை ...வாத்தியார் அவனை பெஞ்சின் மேல் நிற்கவைத்தார்.அந்த நாலாம் கிளாஸ் பையன் பெயர் "கர்ணன் ".
பள்ளிப்படிப்பின் பொது,கல்லூரியில் , சட்டம் படிக்கும் அவன் பட்ட அவமானம் நெஞ்சில் ரத்தம் வரவழைக்கும்.அந்த இளைஞனின் பெயர் "கர்ணன்".
வக்கீலாக . நீதிபதியாக அவன் வாழ்க்கை சபிக்கப்பட்டதாகவே இருந்தது.அவன் தான் "கர்ணன்."
பாவம் கர்ணன் !
கொஞ்சம் கண்ணடித்திருந்தால் கவர்னராகி இருக்கலாம் !
ஏன் ?
குடியரசுத்தலைவராக்கும்வாய்ப்பு கூட வந்திருக்கலாம்!!
கர்ணனை என்னதான் செய்யப்போரிங்கடா !!!
0 comments:
Post a Comment